*🌐இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வின் முதல் சுற்றுக்கு தரவரிசையில் முதல் 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதை 2,653 பேர் புறக்கணித்துள்ளனர்*
பி.இ. படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வியாழக்கிழமையுடன் வெளி மையங்களில் நிறைவடையுள்ள நிலையில், இதில் பங்கேற்காதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் முதல் பருவ தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியலில், 50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.
போட்டி தேர்வு, நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள, ஒவ்வொரு மாவட்டத்திலும், வட்டார அளவில், பயிற்சி மையங்களை துவக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், சுகாதார துறை செயலர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஜனவரி 7-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.மேலும் தேர்வு முடிவுகள் ஜனவரி 31-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.