Thursday, July 13, 2017

பி.ஆர்க்., படிக்க புதிய நுழைவு தேர்வு : தமிழக அரசு அறிவிப்பு

 'பி.ஆர்க்., படிப்புக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, தமிழக
அரசு அறிவித்துள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, ஆர்கிடெக்சர்
கல்லுாரிகளில், பி.ஆர்க்., படிப்புக்கு, தமிழக அரசு சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதில், இடங்களை பெற, 'நாட்டா' என்ற, மத்திய அரசின் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு, 'நாட்டா' தேர்வில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதால், மிகக் குறைந்த மாணவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால், தமிழக, ஆர்கிடெக்சர் கல்லுாரிகளில், பி.ஆர்க்., இடங்கள் அதிகம் காலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, இந்த ஆண்டு, பி.ஆர்க்., படிப்புக்காக, சிறப்பு நுழைவு தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியதாவது: பி.ஆர்க்., விண்ணப்பதாரர்களுக்கு, ஆக., ௧௦ல், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஆக., ௧௯ல், கவுன்சிலிங் துவங்கும். அதற்கு முன், தமிழக அரசு சார்பில், 'நாட்டா' நுழைவு தேர்வுக்கு இணையாக, ஒரு தேர்வு நடத்தப்படும். அதற்கு, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சிலின் அனுமதி பெற்றுள்ளோம்.
இந்த தேர்வில், தேர்ச்சி பெறுவோரும், பி.ஆர்க்., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். பி.ஆர்க்., தரவரிசை பட்டியல் வெளியிடும் முன், இந்த தேர்வை நடத்தி
முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment