Friday, September 8, 2017

பி.டி.எஸ்., வகுப்புகள், 11ல் துவக்கம் : 'ராகிங்'கில் ஈடுபட்டால் நடவடிக்கை தமிழகத்தில், பி.டி.எஸ்., வகுப்புகள் வரும், 11ம் தேதி துவங்கும்,'' என, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறினார்

.தமிழகத்தில், நீண்ட இழுப்பறிக்கு பின், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடந்தது. இதில், அனைத்து, எம்.பி.பி.எஸ்., இடங்களும் நிரம்பியதால், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள், இம்மாதம், 4ம் தேதி துவங்கியது
. பி.டி.எஸ்., எனப்படும் பல் மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பி உள்ளன. ஆனால், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில், 494 இடங்கள் நிரம்பாமல் உள்ளன.
இவற்றை, அந்தந்த மருத்துவ கல்லுாரிகளே நிரப்பிக்கொள்ள, மருத்துவ கல்வி இயக்ககம் அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது: அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, பி.டி.எஸ்., வகுப்பு கள், வரும், 11ம் தேதி துவங்கும். மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களிடம், மூத்த மாணவர்கள், 'ராகிங்' போன்ற செயல்களில் ஈடுபட்டால், இடைநீக்கம் போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரச்னை வராமல் இருக்க, விடுதிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு என, தனி வளாகங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த வளாகத்திற்கு, சீனியர் மாணவர்கள் செல்வதாக புகார் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment