Tuesday, September 12, 2017

’நீட்’ தேர்வால் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே டாக்டர் ’சீட்’

’நீட்’ தேர்வு காரணமாக தமிழகத்தில் 5 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் கிடைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

’நீட்’

மருத்துவ படிப்புக்கான தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத்தேர்வான ’நீட்’(National Eligibility cum Entrance Test) தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

5 பேர் மட்டுமே

தமிழகத்தில் மொத்தமுள்ள 3,534 மருத்துவ இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த 2,314 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. இதில் 5 பேர் மட்டுமே அரசுப்பள்ளியில் படித்தவர்கள். 

அவர்களில் இருவருக்கு மட்டுமே அரசு மருத்துவ கல்லூரியில் (சிவகங்கை, தருமபுரியில் தலா ஒருவர்) இடம் கிடைத்துள்ளது. மற்ற மூவருக்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment