Friday, September 15, 2017

6 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி

 தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளை நடத்தும், ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 22 சுயநிதி மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன.

இதில், ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகள்மற்றும், 15 சுயநிதி மருத்துவக்
கல்லுாரிகளுக்கு, ஆயுஷ் அமைச்சகம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில், மதுரை, அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரி உட்பட, எட்டு மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள கட்டமைப்பு மற்றும் பேராசிரியர் வசதிகள் அடிப்படையில், மதுரை அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லுாரியில், 50 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கிடைத்து உள்ளது.

மேலும், ஐந்து சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், 300 இளநிலை; 21 முதுநிலை படிப்புகளுக்கும், இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

கோவையில் உள்ள, இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இந்தாண்டில், மாணவர் சேர்க்கை நடத்த அரசு தடை விதித்து உள்ளது.

No comments:

Post a Comment