Thursday, April 28, 2016

மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு!

புதுடில்லி: மருத்துவ படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வை இந்தாண்டே நடத்த, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

மே 1ம் தேதி முதல் கட்ட நுழைவுத் தேர்வையும்ஜூலை 24ம் தேதி2ம் கட்ட நுழைவுத்தேர்வை நடத்தவும்ஆகஸ்ட்.,1க்குள் தேர்வு முடிவை வெளியிடவும்செப்., 30க்குள் மாணவர் சேர்க்கையை முடிக்கவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தடை விதித்து, 2013ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஆய்வு செய்யக் கோரிமறுசீராய்வு மனுசுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுஅதை விசாரித்தசுப்ரீம் கோர்ட்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில்எம்.பி.பி.எஸ்.பல் மருத்துவத்துக்கான இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் எனஇம்மாதம், 14ல் தீர்ப்பளித்தது.
வரும், 2016 - 17ம் கல்வி ஆண்டில்மருத்துவப் படிப்புகளுக்குபொது நுழைவுத் தேர்வை நடத்தாமல்,மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக கூறிசுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுசுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்அனில் தவேஏ.கே.சிக்ரிஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுஎம்.சி.ஐ.எனப்படும்இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்இந்தாண்டுபொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான வாய்ப்பில்லை என்றார். 
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:
நாடு முழுவதும், 2016 - 17ம் கல்வி ஆண்டில்மருத்துவப் படிப்புகளுக்குநுழைவுத் தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையைமத்திய அரசுஇந்திய மருத்துவக் கவுன்சில்சி.பி.எஸ்.இ.,ஆகியவை தயாரித்துதாக்கல் செய்ய வேண்டும்.
நுழைவுத் தேர்வைஎம்.சி.ஐ.விதிமுறைகளுக்கு உட்பட்டுஇந்தாண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்துமருத்துவ படிப்புகளுக்கானபொது நுழைவுத் தேர்வை இந்தாண்டே நடத்துவதற்கான கால அட்டவணையைகோர்ட் உத்தரவின்படிமத்திய கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ.,) இன்று தாக்கல் செய்தது.

No comments:

Post a Comment