Thursday, April 28, 2016

ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள்!

ஜிப்மர் பி.எஸ்சி.நர்சிங் படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், 75 பி.எஸ்சி.நர்சிங் இடங்கள் உள்ளன. இதுமட்டுமின்றிஅனஸ்தீசியாகார்டியாக் லேபரேட்டரி டெக்னாலஜிடயாலிஸ் டெக்னாலாஜிரேடியோ டயாகனைஸ்,எம்.எல்.டி.பிளட் பேங்கிங்நியூரோ டெக்னலஜிநியூக்ளியர் மெடிக்கல் டெக்னாலாஜிஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி,பெர்பிஷன் டெக்னாலஜிரேடியோதெரபி டெக்னாலஜி உள்ளிட்ட பி.எஸ்சி.துணை மருத்துவ படிப்புகளில் தலா 4 இடங்கள் உள்ளன.நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் ஒட்டுமொத்தமாக 154 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான ஆன்-லைன் விண்ணப்பங்கள், www.jipmer.edu.in இணையதளத்தில் வினியோகிக்கப் பட்டு வருகிறது.
ஜூன் 8ம் தேதி மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஹால் டிக்கெட்டுகளை ஜூன் 29ம் தேதி முதல் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு
நர்சிங் நுழைவுத் தேர்வுஜூலை 10ம் தேதி காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரைசென்னை,புவனேஸ்வர்காந்தி நகர்ஜம்முமும்பைபுதுச்சேரிராஞ்சிதிருவனந்தபுரம்சோனிபட் உள்ளிட்ட இடங்களில் நடக்கிறது. நுழைவுத்தேர்வு, 90 நிமிடங்களுக்கு நடக்கும். பொதுஓ.பி.சி.பிரிவினருக்கு 600ரூபாய்எஸ்.சி.எஸ்.டி.பிரிவினருக்கு 400 ரூபாய். மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டண விலக்கு உண்டு.
மாற்றுதிறனாளிகள் தங்களுடைய மருத்துவ சான்றிதழ்களைவிண்ணப்பத்துடன் இணைத்து ஜூன் 26ம் தேதிக்குள் பதிவாளர்ஜிப்மர் நிர்வாக கட்டடம்புதுச்சேரி-605006 என்ற முகவரிக்கு அனுப்பிகட்டண விலக்கு பெறலாம்.

No comments:

Post a Comment