Sunday, April 3, 2016

இன்ஜினியரிங் விண்ணப்பத்துக்கு டி.டி., தேவையா?

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்துக்குடி.டி.எடுக்க வேண்டும் என்பதால்மாணவர்களின் பணம், 1.5 கோடி ரூபாய் வீணாகும் எனபெற்றோர் தெரிவித்துள்ளனர். 
எனவேநேரடியாக வங்கியில் கட்டண தொகையை செலுத்தும் முறை
யை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 550 இன்ஜி.,கல்லுாரிகளில்பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்.படிப்புகளுக்கு,ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் எனஅண்ணா பல்கலை அறிவித்து உள்ளது. 
ஆனால்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்சிறப்பு பிரிவு மாணவர்கள், 250 ரூபாய்மற்ற மாணவர்கள், 500 ரூபாய்க்கு விண்ணப்ப கட்டணமாகதமிழ்நாடு இன்ஜி.மாணவர் சேர்க்கை செயலர் பெயரில்டி.டி.எடுத்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பத்தை நேரில் பெற அலைய வேண்டாம் என்பதற்காகவும்விண்ணப்பத்தை வினியோகிக்க ஊழியர் பற்றாக்குறையாக உள்ளதாலும்ஆன்லைன் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால்டி.டி.,யை அனுப்பும் போதுதபாலிலோபல்கலையின் மாணவர் சேர்க்கை பிரிவிலோ,வங்கிகளில் கையாளும் போதோதொலைந்து போக வாய்ப்புள்ளது. மேலும்ஒரு டி.டி.,க்கு, 50 ரூபாய் எனமூன்று லட்சம் விண்ணப்பங்களுக்கு, 1.5 கோடி ரூபாய் செலவாகும்.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:
தொழில் நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும்அண்ணா பல்கலையின் கணினி அறிவியல் பிரிவு தான் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. அந்த துறைஆன்லைன் திட்டத்தை இன்னும் நவீனப்படுத்தி இருக்கலாம். அரசு பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும்டி.என்.பி.எஸ்.சி.,யில் எப்போதோ,ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கட்டண முறை அறிமுகமாகி விட்டது.
அந்த தொழில்நுட்பம் அண்ணா பல்கலைக்கு தெரியா விட்டால்சென்னை பல்கலையின் திட்டத்தை பயன்படுத்தலாம். அனைத்து இடங்களிலும் கிளைகளை உடையஸ்டேட் வங்கி போன்ற வங்கிகளில் கணக்கு துவங்கிஅந்த கணக்கில்மாணவர்கள் நேரடியாக கட்டணம் செலுத்திஅந்த ரசீதின் நகலை மட்டும் அனுப்பலாம்.இதன் மூலம்ரசீது தொலைந்தாலும்வங்கி கணக்கில் அந்த மாணவரின் கட்டணத்தை ஆய்வு செய்யலாம். 
இதுபோன்ற மாற்றங்களை கொண்டு வந்துமாணவர்களின் பணம் வீணாவதை தடுக்கவும்விண்ணப்ப முறையை எளிதாக்கவும்அண்ணா பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment