புதுச்சேரியில் நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர், சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுச்சேரியில் நீட் தகுதி அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியான சுகாதாரத்துறை இயக்குனர் விதிகளின்படி செயல்படவில்லை. மருத்துவ மாணவர் விவகாரத்தை சேர்க்கை கமிட்டியிடம் தந்து விட்டார்.
இதனால் தனியார் மருத்துவக்கல்லூரிகள் நீட் தகுதி பெற்ற மாணவர்களைக் காட்டிலும், அதிக பணம் தந்தவர்களை சேர்த்துக் கொண்டன.இதனால், 79 பேர் பாதிக்கப்பட்டனர் எனக்கூறி பள்ளி, உயர்கல்வி பெற்றோர் மாணவர் நலச்சங்கம் சார்பில் வக்கில் சுப்ரமணியன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 6-ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர், புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர், இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், புதுச்சேரி தலைமை செயலாளர், கட்டண நிர்ணய குழு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
இத்தகவலை பள்ளி, உயர்கல்வி பெற்றோர்- மாணவர் நலச்சங்க நிர்வாகி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment