மருத்துவ நுழைவு தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வது குறித்து திருப்பூரில் நடந்த கருத்தரங்கில் விளக்கப்பட்டது.
தெக்கலூர் நிகிதா பள்ளி சார்பில், ‘நீட்’ (மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வு) தேர்தவை, எதிர்கொள்வது குறித்த இலவச கருத்தரங்கம், திருமுருகன்பூண்டி, பப்பீஸ் ஓட்டலில், நேற்று நடந்தது.
மருத்துவ படிப்புக்கான கனவுடன் காத்திருக் கும் ஒன்பது, பத்து, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், பெற்றோர்களுடன் பங்கேற்றனர். ‘நீட்’ தேர்வை எதிர்கொள்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
பள்ளி முதல்வர் அனிதா தலைமை வகித்தார். உயிரியல் பாடப்பிரிவு குறித்து, ஷிரவன்குமார், இயற்பியல் குறித்து ரஞ்சன், வேதியியல் பாடம் குறித்து பிரகாஷ் மற்றும் சுரேஷ்பாபு உள்ளிட்ட துறை சார்ந்த வல்லுனர்கள் பேசினர்.
‘மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு என்றால் என்ன, எப்படி நடத்தப்படுகிறது, மாணவர்கள் தேர்வு செய்வது, மாணவர்கள் தேர்வுக்கு தயாராவது, பயிற்சி, எவ்வாறு விடையளிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு, ‘நீட் என்ன நெருப்பா? என்ற தலைப்பில், தேர்வு குறித்து முழுவிபரங்கள், ‘சிலபஸ்’, முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் அடங்கிய, புத்தகம் வழங்கப்பட்டது. இதன் மூலம் தேர்வு பற்றி, கேட்கப்படும் வினாக்கள் குறித்தும், 80 சதவீதம் தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டது.
நிகிதா பள்ளி மற்றும் சக்தி பொறியியல் கல்லூரி தலைவர் தங்கவேல் கருத்தரங்கு ஏற்பாடுகளை செய்திருந்தார்.
No comments:
Post a Comment