Wednesday, August 24, 2016

’நீட்’ தேர்வில் முறைகேடு; 72 பேருக்கு நிரந்தர தடை

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வில், காலர் மைக் வைத்திருந்த ஒரு மாணவர் உட்பட, 72 பேருக்கு, மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத, நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வில்கடந்த ஆண்டு சிலர்ப்ளூ டூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திகாப்பிஅடித்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்துபல புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆண்டுமே, 1 மற்றும் ஜூலை, 24ல் நீட் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதிலும்கடும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. 
இரண்டு கட்ட தேர்வுகளிலும்அடுக்கடுக்கான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தேர்வு முறைகேட்டில் சிக்கிய ஐந்து மாணவியர் உட்பட, 19 பேர்மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதமத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.நிரந்தர தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டில், 55 பேர் முறைகேட்டில் சிக்கியதில், 23 பேர் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில், 72 பேர் முறைகேட்டில் சிக்கிதேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment