Monday, August 29, 2016

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை புதிய விதிகள்!

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.

தனியார் கல்லுாரிகளில்எம்.பி.பி.எஸ்.மற்றும் பி.டி.எஸ்.படிப்பில் சேரஇந்த ஆண்டு, &'நீட்&'தேர்வு கட்டாயமாகியுள்ளது. நீட் தேர்வு முடிவு,கடந்த வாரம் வெளியான நிலையில்மாணவர் சேர்க்கை எப்படிகட்டணம் எவ்வளவு என்ற குழப்பம் நீடித்து வருகிறது. 
தனியார் நிகர்நிலை பல்கலைகள்மருத்துவ கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.,மருத்துவ பல்கலையின் இணைப்பில் உள்ள,தனியார் மருத்துவ கல்லுாரிகளில்மாணவர்களை எப்படி சேர்ப்பதுஅதற்கான விதிகள் என்ன என்பதை முடிவு செய்யதமிழக உயர் கல்வித்துறை மூலமாககமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழக தொழில்நுட்ப கல்வித்துறை அலுவலக அதிகாரிகள் குடியிருப்பில் உள்ளஉயர் கல்வி கட்டண கமிட்டி அலுவலக கட்டடத்தில்மருத்துவ விதிகள் கமிட்டியின் கூட்டம்செப்., 2ம் தேதிபிற்பகல், 3:00மணிக்கு நடக்கிறது. 
இதில்தனியார் மருத்துவ கல்லுாரிகள்சங்கங்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் எனதமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment