Tuesday, August 30, 2016

சித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா?

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழகத்தில் சித்தாஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்குஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம்ஜூலை, 29ல் முடிந்தது; 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
ஒரு மாதத்திற்கு மேலாகியும்தரவரிசைப் பட்டியல் வெளியிடுதல் உள்ளிட்டஎந்த தொடர் நடவடிக்கைகளும் நடக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லுாரிகள்சுயநிதி கல்லுாரிகளில்,இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்குதேசிய அங்கீகார அமைப்பானஆயுஷ் கவுன்சில் அனுமதி தர வேண்டும்கல்லுாரிகளை ஆய்வு செய்துஇந்த அனுமதி தரப்படும். 
இதுவரை அரசு கல்லுாரிகளுக்கு கூடஅனுமதி கிடைக்கவில்லைதற்போது தான்கல்லுாரிகளில் உள்ள வசதிகள் குறித்துஆய்வு நடந்து வருகிறது. வழக்கமாகசெப்.மாத இறுதியில்மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும். இதுவரை கல்லுாரிகளில் ஆய்வுகள் முடியாததால்செப்.மாதத்திற்குள்,கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்துஇந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர் சேர்க்கையை விரைவாக முடிக்கமுயற்சித்து வருகிறோம். ஆனால்கல்லுாரிகளில் ஆய்வுப் பணிஇப்போது தான் துவங்கி உள்ளதுஆய்வு முடிந்துஅனுமதி கிடைக்க வேண்டும். இதனால்செப்.,மாதத்தில் கலந்தாய்வு நடத்துவது சிரமம்அக்.மாதத்தில் கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment