Sunday, August 14, 2016

தேர்வு கட்டணம் பாக்கி; பி.இ., ரிசல்ட் நிறுத்தம்!

தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. 

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 571 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கு, ஆக., 4ம் தேதி; எம்.இ., - எம்.டெக்., படிப்புகளுக்கு, 6ம் தேதி, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 

இதில், தேர்வு கட்டணம் செலுத்தாத, சில கல்லுாரிகளின் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டன; அந்த கல்லுாரிகளுக்கு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

அதில், ஒன்பது கல்லுாரிகள், கட்டணம் செலுத்த அவகாசம் கேட்டுள்ளன. பணம் கட்டிய கல்லுாரிகளின் முடிவுகள், திங்கட்கிழமை வெளியாகும் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment