Monday, September 19, 2016

’நீட்’ தேர்வு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

நீட் தேர்வு தொடர்பாகசுப்ரீம் கோர்ட்டில்புதுச்சேரி பெற்றோர்மாணவர் நல சங்கம் தொடர்ந்த வழக்குஇன்று (19ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.

இது குறித்து சங்க பொருளாளர் வி.சி.சி. நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில்அகில இந்திய மருத்துவ கழக பரிந்துரையில் (நீட்) அகில இந்திய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டுகடந்த மாதம் 16ம் தேதி முடிவுகள் வெளியிடபட்டது,ஆனால்தேர்வு பெற்றவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடாததால் புதுச்சேரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள்வெளிமாநில மாணவர்களை சேர்த்து வருகிறது. புதுச்சேரி மருத்துவதுறை இயக்குனரிடம் முறையிட்டும் பலனில்லை. 
எனவேநீட் தேர்வு குறித்து தெளிவான முடிவெடுக்காமல் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது என்றும்மாநில அரசுக்கு வழிகாட்டுதல் வேண்டியும் சுப்ரீம் கோர்ட்டில்மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது,
இதைஇன்று (19ம் தேதி) அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் எடுத்துக்கொண்டு விசாரிக்க உள்ளது. மேலும்நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களைநிகர்நிலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகள் தன்னிச்சையாக தேர்வு செய்யக்கூடாது எனசுப்ரீம் கோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளதால்தீர்ப்பு வரும் வரையில் கல்லுாரிகளுக்கு பணம் கட்ட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment