சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல், எம்.சி.ஐ., எனும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படி, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக அரசு அமைத்த கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.
நீட் எனப்படும், தேசிய பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னும், தமிழகத்தில் உள்ள சுயநிதி கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, பல குழப்பங்கள் நீடித்தன. சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி, மாணவர் சேர்க்கையை, கல்லுாரிகளே நடத்தலாம் என, தமிழக அரசு அமைத்த, சுயநிதி கல்லுாரிகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் குழு,அனுமதி அளித்துள்ளது.
குழுவின் தலைவராக நீதிபதி அப்துல்காதி, உறுப்பினர்களாக, சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன்,எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி உள்ளிட்டோர் உள்ளனர். சமீபத்தில் நடந்த இந்தக் குழு கூட்டத்தில், இதற்கான அனுமதி தரப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், விரும்பிய கல்லுாரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கல்லுாரிகளே,தரவரிசை வெளியிட்டு, மாணவர் சேர்க்கையை நடத்தும். இதன்படி, சுயநிதி கல்லுாரிகளில் விண்ணப்ப வினியோகம், நேற்று துவக்கியது.
மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள், செப்., 20ல் துவங்கி, 30க்குள் முடிக்கவும், கண்காணிப்பு குழு அறிவுறுத்தி உள்ளது.
No comments:
Post a Comment