Tuesday, September 27, 2016

நீட் தரவரிசை பட்டியல் வெளியிட வலியுறுத்தல்

நீட் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என,புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் நல வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து சங்க தலைவர் வேலாயுதம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்கள்அதற்கு முன்னதாக சென்டாக் மூலமாகவும்ஜிப்மர் மருத்துவ கல்லுாரிகளிலும் சேர்ந்துள்ளனர்.
ஆகையால்நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும். கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும். நீட் கட்டண விகிதங்கள் புதுச்சேரியை சார்ந்த மாணவர்கள் எளிதில் சேரும் வகையில் சீரமைக்க வேண்டும். 
நிகர்நிலை பல்கலைக் கழகங்களை கட்டண குழு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கட்டண விகிதங்களை சீரமைக்க வேண்டும்.

No comments:

Post a Comment