Friday, June 23, 2017

கால்நடை மருத்துவ படிப்பு; ஜூலை 19ல் கலந்தாய்வு துவக்கம்

”கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த, இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூலை 19ல் துவங்குகிறது,” என, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் திலகர் கூறினார்.

நாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், பெரிய மற்றும் சிறிய பிராணிகளுக்கான மருத்துவ சிகிச்சை குறித்து, இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று துவங்கியது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர், திலகர் துவக்கி வைத்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கால்நடை மருத்துவப் படிப்பிற்கு, 23 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 30ல், தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கலந்தாய்வு, ஜூலை 19, 20 மற்றும், 21ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

மொத்தம், 380 மாணவர்கள் சேர்க்கப்படுவர். நடப்பாண்டில் புதிய படிப்பு மற்றும் கல்லுாரிக்கு வாய்ப்பில்லை. தனியார் கல்லுாரிக்கு அனுமதி அளிக்கும் திட்டமில்லை. கால்நடைகளுக்கான அவசர சிகிச்சை, ஆம்புலன்ஸ் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment