Monday, June 5, 2017

ஜிப்மர் நுழைவு தேர்வு : 80 சதவீதம் பேர் பங்கேற்பு

ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வை, 80.24 சதவீதம் பேர் எழுதிஉள்ளனர்.

ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் மொத்தமுள்ள, 200 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, 1,89,663 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் உள்ள, 75 நகரங்களில், 339 மையங்களில் நேற்று நடந்தது. 

காலை மற்றும் மதியம் ஆகிய இரண்டு வேளையில் நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில், 80.24 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும், 19ம் தேதிக்குள் வெளியிட, அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment