Saturday, June 10, 2017

’நீட்’ தேர்வில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமான கேள்வி

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு மற்றும் தகுதித் தேர்வான நீட் தேர்வு மே 7 ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. 

இதன் முடிவுகளை வெளியிட மதுரை ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் நீட் தேர்வு தடை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ இன்று மனுதாக்கல் செய்துள்ளது.

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், நீட் தேர்வு தொடர்பாக சென்னை ஐகோர்ட் மற்றும் குஜராத் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் எனவும் சிபிஎஸ்இ கோரிக்கை விடுத்துள்ளது.

அப்போது தெரிவித்துள்ள சிபிஎஸ்இ நிர்வாகம், நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது உண்மையே. ஆங்கிலம் மற்றும் இந்தியில் ஒரு விதமாகவும், பிராந்திய மொழிகளில் கேட்கப்பட்ட கேள்விகள் வேறு விதமாக இருந்தது என தெரிவித்துள்ளது.

பொது நுழைவு தேர்வு என கூறி விட்டு தற்போது வெவ்வேறு விதமாக கேள்வி கேட்கப்பட்டதை சிபிஎஸ்இ நிர்வாகமே ஒப்புக் கொண்டுள்ளது. நீட் தேர்வு மீதான சர்ச்சையையும், எதிர்ப்பையும் அதிகப்படுத்தி உள்ளது. 

இதற்கிடையில் சிபிஎஸ்இ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், வரும் திங்கள்கிழமை அன்று (ஜூன் 12) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment