Wednesday, July 13, 2016

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் துவக்கம்!

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

கால்நடை அறிவியல் படிப்பில், 320 இடங்கள்: கோழியின வளர்ப்புபால்வளத் தொழில் நுட்பம் மற்றும் மீன்வள அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா, 20 இடங்கள்என இப்பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்புகளில், 380 இடங்கள் உள்ளன. இப்படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்தோருக்கானதரவரிசைப் பட்டியல்,ஜூலை 1ம் தேதி வெளியிடப்பட்டது. 
அதனடிப்படையில்சென்னைவேப்பேரியில் உள்ள கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில்,இன்று கவுன்சிலிங் துவங்குகிறது. முதல் நாளில்விளையாட்டு வீரர்கள்பிளஸ் 2 தொழில் படிப்பு படித்தவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இரண்டாம் நாளில்பொதுப்பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடைபெறும்.
அன்றைய தினம்தரவரிசையில் முதல், 10 இடங்களை பிடித்தவர்களுக்கு கால்நடை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிசேர்க்கை கடிதம் வழங்குகிறார். முதல்இரண்டு நாட்கள்கால்நடை அறிவியல் படிப்பு களுக்கும்இறுதி நாளில்இதர மூன்று படிப்பு களுக்கான கவுன்சிலிங் நடைபெறும்.

No comments:

Post a Comment