பி.டெக்., லேட்ரல் என்ட்ரி கவுன்சிலிங் இன்று நடக்கிறது.
பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கைக்கு 272 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 262 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக ஏற்கப் பட்டது.லேட்ரல் என்ட்ரி கவுன்சிலிங் இன்று 15ம் தேதி புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் துவங்குகிறது.காலை 9.00 மணிக்கு துவங்கும் கவுன்சிலிங்கில் மெக்கானிக் பிரிவு மாணவர்கள் பங்கேற்கின்றனர். 10.00 மணிக்கு சிவில், 11.௦௦ மணிக்கு இ.சி.இ., 12.௦௦ மணிக்கு இ.இ.இ., பாடப்பிரிவுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
பிற்பகல் 2.00 மணிக்கு ஐ.டி., பிரிவுக்கும், 2.30 மணிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ், 3.௦௦ மணிக்கு இ அண்டு ஐ., 3.30 மணிக்கு ஐ.சி., 3.45 மணிக்கு கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளுக்கு கவுன்சிலிங் நடக்கிறது. கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தை www.centaconline.in என்ற இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அழைப்பு கடிதம் கிடைக்காவிட்டாலும் மெரிட் லிஸ்டில் பெயர் இருப்பின், தங்கள் கட் ஆப் மதிப்பெண்ணுக்குரிய தேதியில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
கவுன்சிலிங்கின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். கவுன்சிலிங் கட்டணமாக, தி, கன்வீனர், புதுச்சேரி என்ற பெயருக்கு 850 ரூபாய் டி.டி., எடுத்துவர வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் 350 ரூபாய்க்கு டி.டி., எடுத்தால் போதுமானது
No comments:
Post a Comment