பி.டெக்., இறுதி கட்ட கவுன்சிலிங், இன்று (1ம் தேதி) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது.
பொறியியல் படிப்பிற்கான முதல் கட்ட கவுன்சிலிங், கடந்த 2ம் தேதி துவங்கி எட்டு நாட்கள் நடந்தது. இதில், 1,600 மாணவர்கள் சீட் எடுத்தனர்.
பி.டெக்., இறுதிகட்ட கவுன்சிலிங் இன்று 1ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது.9:௦௦ மணிக்கு துவங்கும் முதல் பிரிவு கவுன்சிலிங்கில் எஸ்.சி., மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
11.௦௦ மணிக்கு 199 முதல் 192.667, 12:௦௦ மணிக்கு 192.333 முதல் 189 வரை, 2:௦௦ மணிக்கு 188.667 முதல்185.333 வரை, 3:௦௦ மணிக்கு 185 முதல் 182 வரை, 4:௦௦ மணிக்கு 181.778 முதல் 178.667 வரை கட் ஆப் எடுத்த மாணவர்களுக்கு நடக்கிறது.
நாளை 2ம் தேதி 178.333 முதல் 158.333 வரை, 3ம் தேதி 158 முதல் 139 வரை, 4ம் தேதி 138.667 முதல்105.667 வரை 5ம் தேதி 9.00 மணிக்கு 105.333 முதல் 80 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
பி.பார்ம்
ஆக. 5ம் தேதி காலை 11.00 மணிக்கு பி.பார்ம் கவுன்சிலிங் துவங்குகிறது. கட் ஆப் மதிப்பெண் 198முதல் 158.66 வரை எடுத்த 600 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
No comments:
Post a Comment