Friday, July 29, 2016

மருத்துவ நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் ’அவுட்’

தெலுங்கானாவில் நடந்த மருத்துவ நுழைவுத்தேர்வில்,முன்கூட்டியேகேள்வித்தாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில்முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலானதெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. 

அங்குஜூலை 9ல்பொது நுழைவுத்தேர்வு நடந்தது. இதில்மருத்துவ நுழைவுத்தேர்வு கேள்வித்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி உள்ளன. பெங்களூரில்கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும்ராஜகோபால் ரெட்டி என்பவர்இந்த முறைகேட்டின் மூளையாக செயல்பட்டு உள்ளார். 
இதற்காக அவர்மாணவர்களின் பெற்றோரிடம்தலா, 20 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றுள்ளார்.ஐதராபாத்தைச் சேர்ந்த விஷ்ணுரமேஷ்திருமால் ரெட்டி ஆகிய மூன்று பேரும்ஏஜன்டுகளாக செயல்பட்டு உள்ளனர்.
டில்லியில் கேள்வித்தாள் அச்சடிக்கும் அச்சகத்தை தொடர்பு கொண்டுஅவர்களுக்கு லஞ்சம் கொடுத்து,கேள்வித்தாளை பெற்றுள்ளனர். பின், 70 மாணவர்களுக்குஇந்த கேள்வித்தாளை வினியோகித்து உள்ளனர்.இதன் மூலம், 15 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். 
இந்த விவகாரம் வெளியானதை தொடர்ந்துதெலுங்கானா மாநில சி.பி.சி.ஐ.டி.போலீசார்அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். மேலும் இருவரைதேடி வருகின்றனர். இதையடுத்து,நுழைவுத்தேர்வை ரத்து செய்துமறுதேர்வு நடத்தஅம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment