Sunday, July 31, 2016

ஒரே பாடத்திட்டத்தால் நுழைவுத்தேர்வு எளிதாகும்

புதிய கல்விக்கொள்கை உள்ளீட்டில்நாடு முழுக்க ஒரே பாடத்திட்டத்தை பின்பற்றும் அறிவிப்பால்தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதில்சிக்கல் இருக்காது என்ற கருத்து வலுத்துள்ளது.

மத்திய அரசின்மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில்புதிய கல்வி கொள்கை உருவாக்கும் நோக்கில், 42 பக்கங்கள் அடங்கியசில உள்ளீடுகள்ஜூன் 30ல் வெளியிடப்பட்டது. இதற்குகருத்து தெரிவிக்கஆக., 16 வரைகால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நர்சரிபிரைமரிமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சங்க மாநில பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் கூறியதாவது:
நீட் எனும் மருத்துவ நுழைவுத்தேர்வுசிவில் சர்வீஸ் தேர்வுகளில்சி.பி.எஸ்.இ.எனும் மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தை படிக்கும் மாணவர்கள் தான் அதிகம் தேர்ச்சியடைகின்றனர். சமச்சீர் பாடத்திட்டத்தால்பல மெட்ரிக் பள்ளிகள்சி.பி.எஸ்.இ.,க்குமாறி வருகின்றன. இதனால்கிராமப்புற மாணவர்கள்நுழைவுத் தேர்வு எழுதுவது குதிரை கொம்பு தான்.
புதிய கல்வி கொள்கை படிநாடு முழுக்க ஒரே பாடத்திட்ட முறை அமலுக்கு வந்தால்கல்வித்திட்ட சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். ஆனால்இதை கொண்டு வரும் போதுசெயல்வழி கற்றலை ஊக்குவிக்க வேண்டும்.
கல்வி கொள்கை உள்ளீட்டில் இருக்கும் சில எதிர்மறை கருத்துகளை திருத்திமாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தினால்சிறப்பாக இருக்கும். இக்குழுவில்கல்வியாளர்கள்சிறுபான்மையினர்பள்ளி நலச்சங்க பிரதிநிதிகளைஉறுப்பினர்களாக கொண்டுதிருத்தம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கிருஷ்ணராஜ் கூறினார்.

No comments:

Post a Comment