Wednesday, May 10, 2017

வேளாண் படிப்புக்கு ஜூன் 16ல் கவுன்சிலிங்

தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜூன், 16ல் துவங்க உள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும், 35 கல்லுாரிகளில், வேளாண், தோட்டக்கலை, வனவியல், உயிர் தொழில்நுட்பவியல் உட்பட, 13 படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இதற்கான, ’ஆன் லைன்’ விண்ணப்ப பதிவு, மே 12ல் துவங்கும் என, வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி அறிவித்துள்ளார். தரவரிசை பட்டியலின்படி, தனியார் கல்லுாரிகளிலும், 65 சதவீத இடங்களுக்கு, கவுன்சிலிங் மூலம், மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

துணைவேந்தர் ராமசாமி கூறியதாவது

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மனையியல் கல்லுாரியின் பெயர், சமுதாய அறிவியல் கல்லுாரி எனவும், இக்கல்லுாரியின் கீழ், வழங்கப்படும் பாடப்பிரிவின் பெயர், ’ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாடு’ என்றும் மாற்றப்பட்டுள்ளது. 

தனியார் கல்லுாரிகளில், ’நிர்வாக’ பிரிவின் கீழ் சேர, திட்டமிட்டுள்ள மாணவர்களும், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்ப பதிவு பணிகளை, www.tnau.ac.in  என்ற இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில், விண்ணப்பிப்போர், தேவையான சான்றிதழ்களை, பல்கலைக்கு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணத்தை, ஆன்லைனிலும், வங்கி கணக்கிலும் செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, 0422 - 6611345 / 6611346 என்ற எண்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment