Friday, May 12, 2017

பிளஸ் 2 தேர்வு முடிவு: பி.இ(BE) கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்

```பிளஸ் 2 தேர்வு முடிவின் அடிப்படையில் பி.இ. படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் இந்த ஆண்டு குறையும் என்று கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

பி.இ. கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு உரிய பிளஸ் 2 வேதியியல் பாடத்தில் இந்த ஆண்டு 1,123 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர்; கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (1,703) இந்த எண்ணிக்கை 500 குறைவாகும். எனினும் கணிதத்தில் 3,656 மாணவர்களும் (கடந்த ஆண்டு 3,361), இயற்பியலில் 187 பேரும் (கடந்த ஆண்டு 5 பேர் மட்டுமே) 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பி.இ. படிப்புக்கு முக்கியப் பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 தொடங்கி 200-க்கு 190 வரை மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

பி.இ. காலியிடங்கள் அதிகரிக்கும்: தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் பி.இ. படிப்பில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. பிளஸ் 2 பாடத் திட்டத்தில் கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் பிரிவை எடுத்த சுமார் 75,000 மாணவர்கள் "நீட்' தேர்வை எழுதவில்லை.
இவர்களில் சுமார் 18,000 பேர் பி.இ. படிப்பில் சேராமல், கலைக் கல்லூரிகளில் ஏதாவது ஒரு பிரிவைத் தேர்வு செய்து படித்து, "நீட்' தேர்வை அடுத்த ஆண்டு எழுத ஓராண்டுக்குப் பயிற்சி எடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் வேலைவாய்ப்பு குறித்து சந்தேகம் நீடிப்பதால் பி.இ. காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்றும் கல்வியாளர்கள் தெரிவித்தனர்`

No comments:

Post a Comment