Thursday, May 25, 2017

முதுநிலை பல் மருத்துவ படிப்பு ’கட் - ஆப் மார்க்’ குறைப்பு

தேசிய அளவிலான முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான, ’கட் - ஆப்’ மதிப்பெண்ணை, மத்திய சுகாதார அமைச்சகம் குறைத்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, தேசிய அளவிலான கவுன்சிலிங் நடந்து வருகிறது. பொதுவாக, ’நீட்’ தேர்வில் மாணவர் எடுக்கும் அதிகபட்ச மதிப்பெண்ணில், பொது பிரிவினருக்கு, ௫௦ சதமானம், பிற ஒதுக்கீடு பிரிவினருக்கு, 40 சதமானம் என, ’கட் - ஆப்’ கணக்கிடப்படுகிறது.

இந்நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., உடன் ஆலோசித்த, மத்திய சுகாதார அமைச்சகம், இந்த கல்வியாண்டு முதல், முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்கான, ’கட் - ஆப்’ மதிப்பெண்ணை குறைத்துள்ளது.

இது குறித்து, தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர் செல்வராஜ் கூறுகையில், ”தேசிய அளவிலான பல் மருத்துவப் படிப்புகளுக்கான, ’கட் - ஆப்’ மதிப்பெண், 7.5 சதமானம் குறைக்கப்பட்டு உள்ளது. 

இதனால், பொது பிரிவினருக்கு, 42.5 சதமானம், இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 32.5 சதமானமாக, ’கட் - ஆப்’ மதிப்பெண் கணக்கிடப்படும்,” என்றார்

No comments:

Post a Comment