Wednesday, May 10, 2017

முதுநிலை மருத்துவ படிப்பு; பொது பிரிவில் 374 பேர் தேர்வு

முதுநிலை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில், பொது பிரிவில், 374 பேர் இடங்கள் பெற்றனர். 

தமிழகத்தில், 13 அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு, 1,489 இடங்கள் உள்ளன. இதில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 762 இடங்கள் உள்ளன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம் துவங்கியது. 

முதல் நாளில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான, கலந்தாய்வு நடந்தது. நேற்று, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. அழைக்கப்பட்ட, 104 பேரில், 379 பேர் பங்கேற்றனர். இதில், 374 பேர் இடங்கள் பெற்றனர்; ஐந்து பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். 

நேற்று முன்தினம் சிறப்பு பிரிவில், 10பேருக்கு இடங்கள் கிடைத்தன. வரும், 11ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கிறது.

’ஏசி’ பழுதால் தவிப்பு 

கலந்தாய்வு நடந்த அரங்கில், மாணவர்கள், அலுவலர்கள் என, 400க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். ஆனால், அரங்கில், ’ஏசி’ பழுதானதால், அவர்கள், வெப்பத்தாக்கம், காற்றோட்டம் இன்றி தவித்தனர்.

No comments:

Post a Comment