Tuesday, May 2, 2017

50% இடங்களை ஒதுக்க தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு உத்தரவு

கன்னியாகுமரியை சேர்ந்த ஷாரோன் மற்றும் காமரான் ஆகியோர்தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பட்ட மேற்படிப்பில் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைகழக மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும். 

இந்த இடங்களை கவுன்சிலிங் மூலம் நிரப்ப வேண்டும். சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் இடங்களை ஒதுக்க தேவையில்லை. தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களை இணையதளங்களில் வெளியிட வேண்டும். 

50 சதவீத இடங்களை பெற நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் தலா ரூ.1 கோடி அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டது.

No comments:

Post a Comment