Friday, June 3, 2016

பி.இ., - பி.டெக்., விண்ணப்பம் அனுப்ப ஜூன் 4ம் தேதி கடைசி நாள்

அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550 இன்ஜி.கல்லுாரிகளில்,பி.இ., - பி.டெக்.படிப்புகளில் சேரதமிழக அரசு சார்பில்ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு ஏப்ரல், 15 முதல்ஆன்லைனில் விண்ணப்ப பதிவு துவங்கியதுமே, 31ல் முடிந்தது; 2.52லட்சம் பேர் பதிவு செய்தனர்அவர்களில், 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். நேற்று வரை, 1.25 லட்சம் பேரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்அண்ணா பல்கலைக்கு வந்துள்ளன. 
விண்ணப்பங்களை அனுப்பஇன்று கடைசி நாள்இன்று மாலை, 6:00 மணிக்குள் வழங்கலாம். கடந்த ஆண்டுகளில்கடைசி நாளில் தபாலில் அனுப்பப்பட்ட விண்ணப்பங்களும்ஒரு சில நாட்கள் தாமதமாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதேபோல்இந்த ஆண்டும்ஜூன், 4ம் தேதி தபாலில் பதிவு செய்த விண்ணப்பங்களையும் ஏற்க வேண்டும் எனபெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment