Friday, June 3, 2016

மாணவர்களுக்கு பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு

அண்ணா பல்கலை மாணவர்களுக்குஇன்ஜினியரிங் படிப்பில் பயிற்சி தர விரும்பும் தொழில் நிறுவனங்கள்ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனஅண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள இன்ஜி.கல்லுாரிகளில்தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்துமாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல்,தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தொழில்நுட்ப பணியாளர்களுக்குஅண்ணா பல்கலையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
இந்த திட்டத்தின் கீழ்நடப்பு கல்வியாண்டில் தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற்கான அறிவிப்பைஅண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. தொழிற்கல்வி பயிற்சி திட்டத்தில் பல்கலையுடன் இணைந்து செயல்பட உள்ள நிறுவனங்கள்தங்கள் பெயர் மற்றும் முகவரியுடன்ஜூன், 15ம் தேதிக்குள்,அண்ணா பல்கலைக்கு விண்ணப்பிக்கலாம் எனபல்கலை பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை, https:/www.annauniv.edu/pdf/consortium_advt_2016.pdf என்ற இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment