Monday, June 20, 2016

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ’ரேண்டம்’ எண் வெளியீடு

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலை., இன்று வெளியிட்டது.

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, 1.35 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். இரண்டு வாரங்களாக, விண்ணப்பங்கள் பரிசீலனை முடிந்துள்ளது. தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான, ரேண்டம் எண் என்ற சம வாய்ப்பு எண்ணை, இன்று காலை, 9:30 மணிக்கு அண்ணா பல்கலை வெளியிட்டது.
ரேண்டம் என் ஏன்?
ரேண்டம் எண்மாணவர்களுக்கு மிக முக்கியத்துவம் இல்லாத எண்ணாக இருந்தாலும்தர வரிசையில்ஒரேகட் ஆப் மதிப்பெண் வரும் மாணவர்களில்முன்னுரிமை மாணவரை தேர்வு செய்ய பயன்படுகிறது. ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் இருந்தால்யாருக்கு தர வரிசையில் முன்னுரிமை வழங்குவது என்ற குழப்பம் ஏற்படும். இந்த குழப்பத்தை தீர்க்கஅண்ணா பல்கலையின் அதிகாரிகள்ரேண்டம் எண்ணை பயன்படுத்துகின்றனர்.
முதலில் ஒரேகட் ஆப் கொண்ட மாணவர்களின்கணித மதிப்பெண்ணில் யார் அதிகம் எனபார்த்து முன்னுரிமை தரப்படும். அதிலும்ஒரே மாதிரி இருந்தால்இயற்பியல் மதிப்பெண்அடுத்துநான்காவது பாடத்தின் மதிப்பெண் பார்க்கப்படும். 
அதிலும் ஒரே மதிப்பெண் என்றால்பிறந்த தேதியில் யார் மூத்தவர் என்று பார்க்கப்படும். அதிலும் சமமாக இருந்தால்ரேண்டம் எண்ணில்எந்த விண்ணப்பதாரரின் எண்ணின் கூட்டுத் தொகை அதிகமாக உள்ளதோ,அந்த மாணவருக்கு முன்னுரிமை தரப்படும்.
இதையடுத்துமாணவர்களின்கட் ஆப் மதிப்பெண்ணின் படிதர வரிசை பட்டியல்வரும், 22ல் வெளியாகும்; 24ல் விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 25ல்மாற்றுத் திறனாளிகளுக்கும் கவுன்சிலிங் நடக்கும். 
மற்ற மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங்வரும், 27ல் துவங்கும். பொது கவுன்சிலிங் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதுதர வரிசை பட்டியல் வெளியீட்டு நாளில் அறிவிக்கப்படும்.
மாணவர்கள் தங்களுக்கான ரேண்டம் எண் என்ன என்பதனை அண்ணா பல்கலை., இணையதளமான www.annauniv.edu என்ற இணையதள முகவரியில் பார்க்கலாம்

No comments:

Post a Comment