Saturday, June 18, 2016

எம்.பி.பி.எஸ்., ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்கள் சாதனை!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலில், கேரளாவில் படித்த மாணவி ஆதித்யா மகேஷ், முதலிடம் பெற்றுள்ளார். மூன்று பேர் மட்டுமே, 200க்கு, 200, கட்ஆப் பெற்றுள்ளனர்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, 20ல் துவங்குகிறது. தமிழகத்தில்மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., -பி.டி.எஸ்.,சுக்கு, 26 ஆயிரத்து, 17 விண்ணப்பங்கள் வந்தனதகுதி இல்லாதவை போக, 25 ஆயிரத்து, 379 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கானரேண்டம் எண், 14ம் தேதி வெளியான நிலையில்கட் - ஆப் மதிப்பெண் அடிப்படையிலானதர வரிசை பட்டியல்நேற்று வெளியிடப்பட்டது. சென்னைகீழ்ப்பாக்கம்,மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில்நடந்த நிகழ்ச்சியில்தர வரிசை பட்டியலைசுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்டார். துறையின் சிறப்பு செயலர் செந்தில்குமார்மருத்துவக் கல்வி இயக்குனர் கீதாலட்சுமிமாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முழு கட் - ஆப் குறைவு: கடந்த, 2015 - 16ம்கல்வி ஆண்டில், 17 மாணவமாணவியர், 200க்கு, 200 கட் - ஆப் மதிப்பெண் எடுத்து இருந்தனர். இந்த முறைமூன்று பேர் மட்டுமே, 200க்கு, 200 கட் - ஆப் பெற்றுள்ளனர். கன்னியா குமரி மாவட்டம்விளவங்கோட்டைச் சேர்ந்த மாணவி ஆதித்யா மகேஷ் தர வரிசையில் முதல் இடம் பெற்றுள்ளார். இவர் கேரளாவில் படித்தவர்.
தஞ்சாவூர் மாவட்டம்திருவையாறைச் சேர்ந்த விக்னேஷ் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் ஈரோட்டில் படித்தவர். மூன்றாம் இடம் பெற்ற திருவள்ளூரைச் சேர்ந்த ஞானவேல்ஆந்திராவில் படித்தவர். அடுத்ததாக ஏழு பேர், 199.75 கட் - ஆப் பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில்மாநில அளவில் முதலிடம் பெற்ற,ஊத்தங்கரை மாணவி ஆர்த்திதர வரிசை பட்டியலில், 10ம் இடம் பெற்றுள்ளார்.
பெண்களே அதிகம்:
எம்.பி.பி.எஸ்.,  பி.டி.எஸ்.படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலில், 25 ஆயிரத்து, 379 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், 9,017 பேர் ஆண்கள்; 16 ஆயிரத்து, 361 பேர் பெண்கள்மூன்றாம் பாலினம் - 1.பெண்களின் சதவீதம், 64.5. மூன்றாம் பாலினத்தவர் வயது, 50 ஆக உள்ளதாலும்தர வரிசையில் முன்னிலையில் இல்லை என்பதாலும்படிப்பில் சேர வாய்ப்பு இல்லை எனகூறப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளில்பிளஸ் 2 படித்த, 3,266 மாணவமாணவியரும் விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பித்தோரில்பாடத்திட்டம் வாரியான விவரம்: 
மாநில பாடத்திட்டம் - 29,966; மத்திய அரசு கல்வித் திட்டமான சி.பி.எஸ்.இ., - 1,158; மத்திய மேல்நிலை சான்றிதழ் படிப்பான ஐ.சி.எஸ்.இ., - 129; மற்றவர்கள் - 126 பேர். இவர்களில்முதல் பட்டதாரிகள் - 9,401 பேர்.
விண்ணப்பித்தோர்தங்களின் தர வரிசை விவரங்களை, www.tnhealth.org மற்றும், www.tn.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுசென்னை ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில்ஜூன் 20 முதல் 25ம் தேதி வரை நடக்கும் எனமருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ்.தர வரிசையில் முதலிடம் பெறுவது எப்படி?
பிளஸ் 2 தேர்வில்மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஆர்த்திஎம்.பி.பி.எஸ்.தர வரிசை பட்டியலில், 10ம் இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளார். மாநில ரேங்க் பெறாத மாணவர்தர வரிசையில்,இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்ஊத்தங்கரைவித்யாமந்திர் பள்ளி மாணவியான ஆர்த்திபிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். கணிதம்வேதியியல் மற்றும் உயிரியலில்தலா, 200 மதிப்பெண்களும்;இயற்பியலில், 199 மதிப்பெண்ணும் எடுத்தார். இவரது கட் - ஆப் மதிப்பெண், 199.75 ஆனதால், 10ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் என்ற மாணவர்பிளஸ் 2 தேர்வில்மாநில அளவில்முதல் இடம் பெற்றார். இவரும்கணிதம்வேதியியல் மற்றும் உயிரியலில்தலா, 200 மதிப்பெண்களும்இயற்பியலில், 199 மதிப் பெண்ணும் எடுத்தார். இவரது கட் - ஆப் மதிப்பெண், 199.75. இவர் பொதுப் பிரிவான ஓ.சி.,யைச் சேர்ந்தவர் என்பதாலும்பிறந்த தேதி அடிப்படையிலும்முதல், 10 இடங்களில் வர முடியாமல், 17வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல்தஞ்சாவூர் மாவட்டம்திருவையாறு பகுதி மாணவர் விக்னேஷ்பிளஸ் 2 தேர் வில்,மாநிலத்தில் முதல் இடம் என்றாலும்தர வரிசையில்இரண்டாம் இடமே கிடைத்துள்ளது.
இதன் மூலம் மாநில ரேங்க் பெறுவதை விடமருத்துவம்இன்ஜி.படிப்புக்கான கட் - ஆப் மதிப் பெண் பெறும் வகையில்அதற்கான முக் கிய பாடங்களில் முதலிடம் பெறுவதேஉயர் கல்வியில் முதலிடம் தரும் என்பதை மாணவர்களும்பெற்றோரும் புரிந்துகொள்ள வேண்டும் எனகல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2015-2016ல் எம்.பி.பி.எஸ்.மற்றும் பி.டி.எஸ்.கட் - ஆப் விவரங்களுக்கு http://kalvimalar.dinamalar.com/tamil/StatisticsDetails.asp?id=164 மற்றும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் பற்றின தகவல்களுக்குhttp://kalvimalar.dinamalar.com/tamil/StatisticsDetails.asp?id=163 என்ற இணையதளங்களை பார்க்கவும்.

No comments:

Post a Comment