Wednesday, June 29, 2016

சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்

 தமிழகத்தில் சென்னைமதுரைநாகர்கோவிலில் உள்ளஆறு அரசு கல்லூரிகளில் சித்தாஆயுர்வேதாயுனானிநேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. 

இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம்நேற்று துவங்கியது. முதல் நாளில், 541 பேர் நேரில் விண்ணப்பம் பெற்றனர். ஜூலை, 28 வரை விண்ணப்பங்கள் கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள்ஜூலை, 29க்குள் அனுப்ப வேண்டும். 
மேலும் விவரங்களைwww.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனஇந்திய மருத்துவம் மற்றும் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment