Wednesday, June 22, 2016

தனியார் இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி.கல்லுாரிகளின்அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குதமிழக அரசின் சார்பில்அண்ணா பல்கலையில் ஒற்றை சாளர முறையில்கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த கவுன்சிலிங்கில் மாணவர்கள்தங்களுக்கான பாடப்பிரிவு மற்றும் கல்லுாரிகளை தேர்வு செய்ய வசதியாககல்லுாரிகளின் செயல்திறன் தேர்ச்சி பட்டியலை வெளியிடஇரு ஆண்டுகளுக்கு முன்,சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படிஇந்த ஆண்டும் இன்ஜி.கல்லூரிகளின் செயல்திறன் மற்றும் தேர்ச்சி சதவீத தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதிக தேர்ச்சி பெற்ற கல்லுாரிகள்குறைந்த தேர்ச்சி பெற்ற கல்லூரிகளுக்கு எதிராக பிரசாரம் செய்வதாகவும்தேர்ச்சி சதவீதத்தைதங்களது நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்குவணிக ரீதியாக பயன்படுத்துவதாகவும்அண்ணா பல்கலைக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்துஅண்ணா பல்கலையின் தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி உமாதனியார் இன்ஜி.,
கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். அதில்மாணவர் தேர்ச்சியை அடிப்படையாக கொண்டுகல்லுாரிகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால்சில கல்லுாரிகள்இந்த பட்டியலை வணிக நோக்குக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அவ்வாறு ஈடுபடுவது,விதிகளுக்கு முரணானது. எந்த கல்லூரியாவது இப்படி செயல்படுவது தெரியவந்தால்நடவடிக்கை எடுக்கப்படும் எனஎச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment