Friday, June 3, 2016

இன்ஜி., கவுன்சிலிங் விளக்கம் அளிக்க யாரும் இல்லை

இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக, அண்ணா பல்கலை அறிவித்த தொலைபேசி எண்கள், ஒரு மாதமாகவே செயல்படாததால், விண்ணப்பதாரர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி.கல்லுாரிகளில் சேரதமிழக அரசு சார்பில்அண்ணா பல்கலை மூலம்ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. பல வகையிலும் பாராட்டை பெற்ற இந்த கவுன்சிலிங்இந்த ஆண்டு பல குழப்பங்களை சந்தித்து வருகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங் நடத்தபேராசிரியை இந்துமதியை அரசு நியமித்தது. அத்துடன்ஆன்லைன் விண்ணப்ப முறையைஎந்த வித ஒத்திகையுமின்றி நேரடியாகஅண்ணாபல்கலை அறிமுகம் செய்தது. ஏப்., 15ல் ஆன்லைன் விண்ணப்பம் இருந்தாலும்விண்ணப்ப கட்டணத் துக்காகடி.டி.எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 
அதனால்மாணவர்கள் வங்கிகளில் காத்துக் கிடந்துடி.டி.எடுத்தனர். டி.டி.கமிஷனாக கூடுதல் பணம் செலுத்த வேண்டி இருந்தது. இதுகுறித்துநமது நாளிதழில் செய்தி வெளியானதும்ஆன்லைனில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது.
இதிலும்பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. பலர் பணம் செலுத்தியும்அது அண்ணா பல்கலையின் இன்ஜி.பிரிவில் பதிவு செய்யப்படவில்லை. அதனால்ஏற்கனவே பணம் செலுத்தினாலும்மீண்டும் பணம் செலுத்திவிண்ணப்பங்கள் அனுப்பியுள்ளனர்.
விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களை தெரிந்து கொள்ளபலர் அண்ணா பல்கலைக்கு நேரிலும்,போனிலும்தொடர்பு கொள்கின்றனர். ஆனால்அவர்களுக்கு உரிய பதில் கிடைப்பதில்லை.
செயல்படாத தொலைபேசி: 
உதாரணமாககவுன்சிலிங் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற, 044 - 2235 8041, 2235 8042, 2235 8043, 2235 8044ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனஅறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால்இந்த போன் எண்களை தொடர்பு கொண்டால்உபயோகத்தில் உள்ளதுபின்னர் அழைக்கவும் என்ற ஒலி எப்போதும் கேட்கிறது எனபெற்றோர்மாணவர் புகார் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து விசாரித்த போதுகுறைகளை கேட்க போதிய ஆட்கள் இல்லாததால்குறை கேட்பு பணியில் நியமிக்கப்பட்ட சிலர்போன் ரிசீவரை எடுத்து கீழே வைத்து விட்டுவேறு பணிகளை கவனிப்பதாக தெரியவந்தது.
இதேபோல், tneaenq2016@annauniv.edu என்றஇ - மெயில் முகவரிக்கு ஆயிரக்கணக்கானோர் மெயில் அனுப்பியுள்ளனர். அவற்றுக்கும்எந்த பதிலும் இல்லை எனபெற்றோர் புகார் தெரிவித் துள்ளனர்

No comments:

Post a Comment