மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் மூன்று மணி நேரம் தாமதமாக வழங்கப்பட்டதால் பெற்றோர், மாணவர்கள் அவதியுற்றனர்.
மாநிலம் முழுவதும் நேற்று மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. மதுரையில் விண்ணப்பங்கள் மூன்று மணி நேரம் தாமதமாக வழங்கப்பட்டது.
டீன் வைரமுத்து ராஜூ கூறியதாவது: வாகன கோளாறு காரணமாக தாமதம் ஏற்பட்டது. தற்போது3000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. தேவைப்பட்டால் மேலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வழங்கப்படும்,என்றார்.
விண்ணப்பம் வாங்க வந்த மாரியப்பன் கூறியதாவது: சங்கரன்கோவிலில் இருந்து வந்துள்ளேன். காலை8.30 மணியிலிருந்து 3 மணி நேரமாக காத்திருக்கிறோம். அமர பெஞ்ச், குடிநீர் வசதி கூட இல்லை. விண்ணப்பங்கள் குறித்த சரியானதகவலும் அளிக்கப்படவில்லை, என்றார்.
No comments:
Post a Comment