Wednesday, May 11, 2016

மருத்துவ நுழைவு தேர்வு; தனியார் பள்ளி கூட்டமைப்பு எதிர்ப்பு

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வால்தமிழ் வழி கல்வி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்எனவேஅதை அனுமதிக்க கூடாது எனபள்ளி கல்வி துறை செயலர் சபீதாவிடம்,தமிழக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்துகூட்டமைப்பின் மாநில செயலர் இளங்கோவன் அளித்த மனு: 
அரசு மருத்துவ கல்லுாரியிலும்அரசு இட ஒதுக்கீடு உள்ள தனியார் கல்லுாரிகளிலும் இடம் பெறநாடு முழுவதும், 90 வகையான நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால்தமிழகத்தில்அவ்வகை தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால்அகில இந்திய நுழைவு தேர்வு ஏற்புடையதல்ல.
அகில இந்திய நுழைவு தேர்வுஆங்கிலம்ஹிந்தி மொழிகளில் இருப்பதால்தமிழ் வழி மாணவர்கள்,அந்த தேர்வை எழுதுவது கடினமாக இருக்கும் சிறந்த மருத்துவ கல்லுாரிகளானஎய்ம்ஸ்,ஜிப்மர் போன்றவற்றுக்குதேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்போதுஅதே விலக்குஏன் தமிழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.பல்கலைக்கு வழங்க கூடாது?
மருத்துவ நுழைவு தேர்வுதேசிய பாட திட்டத்தை சார்ந்து உள்ளதால்மாநில அரசு பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்குஅந்த தேர்வு மிகவும் கடினமாக இருக்கும். 2012ல்மருத்துவ நுழைவு தேர்வு அறிவித்தபோதுஆந்திர மாநிலம்தம் மாணவர்களுக்குஇரண்டு ஆண்டு அவகாசம் அளித்தது. இதேபோல்தமிழகத்திற்கும்கால அவகாசம் அளிக்க வேண்டும்
மாநில அரசுதேசிய அறிவியல் பாட திட்டத்தை உடனடியாகபிளஸ் 1, பிளஸ் 2 பாட திட்டங்களில் அறிமுகம் செய்ய வேண்டும். பாட புத்தகங்களும் அதை சார்ந்தே இருக்க வேண்டும். அறிவியல் பாட புத்தகங்கள்தமிழ் வழி மாணவர்களுக்காகதமிழ் மொழியில் மொழி பெயர்த்தல் வேண்டும். 
தேசிய கல்வி திட்டத்திற்கு இணையான வகுப்புகள், 6ம் வகுப்பில் இருந்தே செயல்படுத்த வேண்டும். மாநில அரசுபாட திட்டத்தில் மாணவர்களுக்கு விருப்பத்தை உண்டாக்ககுஜராத் மாநிலம் ஏற்படுத்திய முறையைதமிழகத்திலும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment