மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவு தேர்வில் இருந்து, தமிழக மாணவ, மாணவியருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு
தனியார் பள்ளி சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இளங்கோவன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மருத்துவ படிப்புக்கு, 90 வகையான நுழைவு தேர்வுகள் இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. ஆனால்,
தமிழகத்தில், இம்மாதியான தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் அகில இந்திய
நுழைவு தேர்வு ஏற்புடையதல்ல. மாநில அரசு, தேசிய கல்வி வாரிய
அறிவியல் பாடத்திட்டத்தை, உடனடியாக பிளஸ், 1, பிளஸ், 2 வகுப்புக்களில் நடைமுறை படுத்த
வேண்டும். பாட புத்தகங்களும் அதை சார்ந்தே இருக்க வேண்டும்.
கற்பித்தலும், திறனறிதழும் மாணவர்களுக்கு நடைமுறை படுத்துவதுடன், அறிவியல் பாட புத்தகங்களை தமிழ் வழியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழ் மொழியில் மொழி பெயர்க்க
வேண்டும். தேசிய கல்வி வாரிய திட்டத்திற்கு இணையான வகுப்புக்களை, 6ம் வகுப்பில் இருந்து செயல்படுத்த வேண்டும். மாநில அரசு பாட
திட்டத்தில் மாணவர்களுக்கு விருப்பத்தை உண்டாக்க, குஜராத் மாநிலத்தில் நடைமுறையில் உள்ள விகிதாச்சார ஒதுக்கீட்டை
தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
மேலும், இதன் மூலம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு,
அதன் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான
இடஒதுக்கீடு விகிதாச்சாரத்தை உண்டாக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, மருத்துவ படிப்புக்கான பொது
நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment