Friday, May 20, 2016

இன்ஜி., ’கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டஇன்ஜி.கல்லுாரிகளின் கடந்த ஆண்டுகட்ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. 

ஆனால்தொழில்நுட்ப கோளாறால்இணையதளத்தில் மதிப்பெண்ணை பார்க்க முடியாமல்மாணவர்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். அண்ணா பல்கலைக்குட்பட்ட, 550 இன்ஜி.,கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைதமிழக அரசு சார்பில்ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம் நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில்இந்த கவுன்சிலிங் நடக்க உள்ளது.
தற்போதுஆன்லைன் பதிவு மூலம்இன்ஜி.விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அண்ணா பல்கலையின், https:/www.annauniv.edu/tnea2016 இணையதளத்தில்மாணவர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம். பின்ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்திவிண்ணப்பத்தை நகல் எடுத்துஉரிய சான்றிதழ் நகலுடன்தமிழக இன்ஜி.மாணவர் சேர்க்கை செயலருக்குதபாலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யமே 24ம் தேதி கடைசி நாள். விண்ணப்பங்கள்மே 27ம் தேதிக்குள்அண்ணா பல்கலைக்கு கிடைக்கும் வகையில்தபாலில் அனுப்ப வேண்டும்.
இதற்கிடையேபிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளதால்கடந்த ஆண்டின்கட் - ஆப் மதிப்பெண்ணை அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. ஒவ்வொரு இன்ஜி.கல்லுாரியும்கடந்த ஆண்டுஎந்த கட் - ஆப் மதிப்பெண் வரைமாணவர்களை சேர்த்தது என்ற விவரம்கல்லுாரி வாரியாக,மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படிமாணவர்கள் தங்களின் தற்போதையகட் - ஆப் மதிப்பெண்ணின் படிஎந்த கல்லுாரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இந்த கட் - ஆப் மதிப்பெண்ணை பார்க்கமாணவர்களும்பெற்றோரும் முயற்சித்தனர். ஆனால்,இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால்நேற்று இரவு வரைமதிப்பெண் பட்டியலை பார்க்க முடியாமல் தவித்தனர்.
நேற்று மாலை வரைஇன்ஜி.படிப்பில் சேர, 2 லட்சத்து, 7,512 பேர்ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஆனால், 1.36 லட்சத்து, 364 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணம் செலுத்திவிண்ணப்பங்களை தபாலில் அனுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment