புதுச்சேரி: மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வை ரத்து செய்யக் கோரி, பெற்றோர்கள், மாணவர் சங்க நிர்வாகிகள் மரப்பாலத்தில் மறியல் செய்ய முன்றனர்.
மருத்துவ படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவு தேர்வு நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து புதுச்சேரியில் நேற்று 10 மையங்களில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நடந்தது.
மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வை ரத்து செய்யக் கோரி,மாணவர்களின் பெற்றோர் மரப்பாலம் சிக்னல் அருகில் மறியல் செய்ய முன்றனர். போலீசார் அவர்களை நடத்து நிறுத்தியதை தொடர்ந்து அங்கேயே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெற்றோர்கள் கூறுகையில் ஏ.ஐ.எம்.இ.டி., நுழைவு தேர்வை, மருத்துவ நுழைவு தேர்வாக மாற்றி அமைத்துள்ளனர். இரண்டாம் கட்டமாக ஜூலை 24ம் நடக்கும் இந்த தேர்வில், நேற்று (1ம் தேதி) தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு அனுமதி கிடையாது என கூறியுள்ளனர்.
இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ நுழைவு தேர்வுக்கு மாணவர்கள் தயராராக கால அவகாசம் கொடுத்து, 2ம் கட்ட தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றனர்.
போராட்டத்தில் பெற்றோர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment