Friday, May 20, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரவிருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகஅமைச்சர் நட்டா கூறியதாவது:
அகில இந்திய அளவிலான மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு சிறப்பு சட்டம் கொண்டு வர இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது. 
அந்த தகவல் அடிப்படை ஆதாரமற்றது. திட்டமிட்டபடி 2ம் கட்ட நீட் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment