Wednesday, May 25, 2016

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம்!

மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை இன்று (மே 25) முதல் ஜூன் 6ம் தேதி மாலை வரை ஆன்லைனில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

நாளை முதல் மருத்துவக் கல்லூரி வளாகங்களிலும், மாணவர்கள் நேரில் சென்று மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம்.
ஜூன் 7ம் தேதி மாலை வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படும். ஜூன் 17 ம் தேதி மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 
ஜூன் 20ல் முதல் கட்ட கவுன்சிலிங்கும், ஜூலை 18ல் இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கும் நடத்தப்படும் என மருத்துவ கல்வி இயக்குனர் கமலா தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை  www.tnhealth.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment