Monday, June 16, 2014

கவுன்சிலிங்கில் குளறுபடி கூடாது: பள்ளிகல்வித்துறை உத்தரவு

எந்த குளறுபடியும் இன்றி, ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி முடிக்க வேண்டும்,' என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஆசிரியர் பயிற்றுனர் பணிநிரவல், ஆசிரியர்கள் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்விற்கான கவுன்சிலிங், நேற்று துவங்கி, ஜூன் 29 வரை நடக்கிறது. இதற்காக ஆசிரியர்கள், அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களின் ஒப்புதலோடு, சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைகல்வி அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் செய்தனர். அதற்கான ஒப்புகை சீட்டு அவர்களிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், இக்கவுன்சிலிங்கை எந்த குளறுபடியும் இன்றி நடத்தி முடிக்க வேண்டும் என, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வித்துறை உயர்அதிகாரி ஒருவர் கூறுகையில்," கவுன்சிலிங்கிற்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்தபோதே, அவர்களது பெயர், பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, தற்போதைய பணியிடம், மாறுதல் கேட்கும் மாவட்டம், என்ன காரணம் என்பன போன்ற பல்வேறு விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கம்ப்யூட்டரில் டைப் செய்து, அவர்களிடம் பிரின்ட் அவுட் தரப்பட்டது. அதில் பிழை இருந்தால் திருத்தி, சரியான விபரங்களுடன், அவர்களது விண்ணப்பம் ஆன்லைனில் அப்லோடு செய்யப்பட்டது. அதனடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. சிபாரிசின் அடிப்படையில் வேண்டியவர்களுக்கு மட்டும் கேட்ட இடம் ஒதுக்கப்பட்டதாக, இதில் புகார் எழவாய்ப்பில்லை. எனினும், குளறுபடியின்றி கவுன்சிலிங் நடத்தி, மாறுதல் உத்தரவு வழங்க, பள்ளிகல்வித்துறையால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.

Saturday, June 14, 2014

எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: (வகுப்பு வாரியாக) 

ஓ.சி. 199.25

பி.சி. 198.25

பி.சி. (முஸ்லிம்) 197.00

எம்.பி.சி. 197.25

எஸ்.சி. 194.75

எஸ்.சி. (அருந்ததியினர்) 192.00

எஸ்.டி. 187.50

கடும் கட்-ஆஃப் போட்டி ஏன்?

எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200-ல் 132 பேர், 200-க்கு 199.75-ல் 105 பேர் 200-க்கு 199.50-ல் 188 பேர் என ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் ஏராளமான மாணவர்கள் இடம்பெற்றுள்ளதே கட்-ஆஃப் மதிப்பெண் போட்டிக்கு முக்கியக் காரணமாகும். மேலும் பி.இ. படிப்பை போன்று லட்சக்கணக்கில் எம்.பி.பி.எஸ். இடங்கள் இல்லாததும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டிக்குக் காரணமாகும்.

சென்னை மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூன் 14) வெளியிடப்பட்ட எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் 200-200-க்கு தொடங்கி ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம்:-

200-க்கு 200 - 132

200-க்கு 199.75 - 105

200-க்கு 199.67 - 1

200-க்கு 199.50 - 188

200-க்கு 199.33 - 1

200-க்கு 199.25 - 236

200-க்கு 199.00- 246

200-க்கு 198.75 - 274

200-க்கு 198.50 - 292

200-க்கு 198.25 - 308

200-க்கு 198.00 - 314

200-க்கு 197.75 - 335

200-க்கு 197.50 - 289

200-க்கு 197.34 - 1

200-க்கு 197.25 - 311

200-க்கு 197.00 - 307

200-க்கு 196.75 - 330

200-க்கு 196.50 - 298

200-க்கு 196.34 - 1

200-க்கு 196.25 - 299

200-க்கு 196.00 - 366
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 132 மாணவர்கள் எடுத்து இந்த ஆண்டு இடம்பெற்றுள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 7 மாணவர்களும், 2012-13-ஆம் கல்வி ஆண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 17 மாணவர்களும் மட்டுமே பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஆண்டு கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ 132 மாணவர்கள் பெற்றுள்ளதையடுத்து, எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஆர்வத்துடன் காத்திருக்கும் மாணவர்களுக்கு இடையே கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி உறுதியாகியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தரவரிசைப் பட்டியலை சனிக்கிழமை (ஜூன் 14) வெளியிட்டார். சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஆர்.ஜி.சுகுமார் ஆகியோர் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் குறித்து அளித்த தகவல்கள்:-
முதல் 10 மாணவர்கள்: கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200 எடுத்துள்ள 132 பேரில் (69 பேர் மாணவர்கள், 63 பேர் மாணவிகள்) தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கணிதம்-இயற்பியல்-வேதியியல்-உயிரியல் ஆகிய பாடங்கள் அனைத்திலும் 200-க்கு 200 பெற்றுள்ள 132 மாணவர்களில், 76 பேர் பிறந்த தேதி, ரேண்டம் எண் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக 132 மாணவர்களில் 15 மாணவர்கள் ரேண்டம் எண் அடிப்படையில் (கடந்த ஆண்டு 11 பேருக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது.) வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சென்னை கோபாலபுரம் டிஏவி பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ் உள்பட 10 பேர் முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
நாமக்கல் பள்ளி சாதனை: எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அபிஷேக், ஈரோடு பாரதி வி.பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.எஸ்.விஜயராம், நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மிதுன், நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.ஸ்ருதி, நாமக்கல் கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.நிவேதா, ஈரோடு அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர்.மைதிலி, நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.கரோலின் திவ்யா, நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல் தலைமுறை (குடும்பத்தில் முதல் பட்டதாரி) மாணவர் வி.கௌதம், நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.மைவிழி ஸ்ருதி ஆகியோர் 200-க்கு 200 பெற்று முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் நாமக்கல் கிரீன் பார்க் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விகிதம் 42 சதவீதம்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள 27,539 மாணவர்களில், 1,402 பேர் மட்டுமே முற்பட்ட வகுப்பை (எஃப்ஓசி) பிரிவைச் சேர்ந்தவர்கள்; 11,616 மாணவர்கள், அதாவது 42 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 1,427 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 5,944 மாணவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 6,031 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 903 மாணவர்கள் தாழ்த்தப்பட்ட (அருந்ததியினர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்; 216 மாணவர்கள் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
10,061 முதல் தலைமுறை மாணவர்கள்: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து தகுதியுள்ள 27,539 விண்ணப்பங்களில், 10,061 பேர் முதல் தலைமுறையை (குடும்பத்தில் முதல் பட்டதாரிகள்) பிரிவைச் சேர்ந்தவர்கள். கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ பெற்றுள்ள 132 மாணவர்களில், 19 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இணையதளத்தில்...: சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் (பி.இ.) படிப்புக்கு ரேண்டம் எண் ஜூன் 16 ஆம் தேதியும், மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவம் (பி.டி.எஸ்), வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகளுக்கு ரேண்டம் எண்கள் ஜூன் 18ஆம் தேதியும் வெளியிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15ஆம் ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் கடந்த மே 9ஆம் தேதி முதலும், பி.எஸ்.சி. வேளாண்மை, பி.எஸ்.சி. தோட்டக்கலைப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 12ஆம் தேதி முதலும் வழங்கப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் 11 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
÷அதன்படி, அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர 7,651 பேரும் பி.எஸ்.சி. வேளாண்மை, பி.எஸ்.சி. தோட்டக்கலை படிப்புகளில் சேர 1,16,544 பேரும் பி.இ. படிப்பில் சேர 2,545 பேரும் மருந்தியல் (பி.பார்மசி) பி.பி.டி., பி.எஸ்.சி. நர்சிங் படிப்புகளில் சேர 947 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2014-15ஆம் கல்வி ஆண்டில் பி.இ. படிப்புக்கு 3 ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்.சி. வேளாண்மைப் படிப்புக்கு ஆயிரம் மாணவர்களும், பி.எஸ்.சி. தோட்டக்கலை படிப்புக்கு 75 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள் என பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார்.
ரேண்டம் எண்கள் நாளை வெளியீடு: பொறியியல் படிப்பிற்கு ரேண்டம் எண் ஜூன் 16ஆம் தேதியும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம், வேளாண்மை, தோட்டக்கலை ஆகிய படிப்புகளுக்கு ஜூன் 18ஆம் தேதியும் ரேண்டம் எண்கள் வெளியிடப்படவுள்ளன.
அனுமதி சேர்க்கை முற்றிலும் தகுதி அடிப்படையிலும், அரசு விதிமுறைகள் இடஒதுக்கீடு முறையிலும் நடைபெறுகிறது.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படும்.
ரேண்டம் எண் குறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiauniversity.ac.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் உதவி மைய தொலைபேசி எண்கள் 04144-238348, 238349.
எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஊத்தங்கரை சாதனை மாணவி எஸ்.சுஷாந்திக்கு 191-வது இடம் கிடைத்துள்ளது.
பிளஸ் 2 தேர்வில் தமிழ் அல்லது மொழி, ஆங்கில பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் எம்.பி.பி.எஸ்.-பி.இ. படிப்பில் சேர உயிரியல்-இயற்பியல்-வேதியியல்-கணித பாடங்களுக்கு மிகுந்த முக்கியத்துவத்தை மாணவர்கள் அளித்துள்ளனர்.
சென்னையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 பெற்ற 132 மாணவர்களில், உயிரியல்-இயற்பியல்-வேதியியல்-கணிதம் ஆகிய நான்கிலும் 200-க்கு 200 பெற்று முதல் 10 இடங்களில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் பிளஸ் 2 மொத்த மதிப்பெண்ணே இதற்குச் சான்றாகும். இவர்கள் பிளஸ் 2 தேர்வில் ரேங்க் எடுத்த மாணவர்களை எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளனர்.
எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு மொத்த மதிப்பெண் விவரம்:-
சென்னை கோபாலபுரம் டிஏவி மேல்நிலைப் பள்ளி மாணவர் கே.சுந்தர் நடேஷ்-மொத்த மதிப்பெண் 1167; கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அபிஷேக்-1171; ஈரோடு பாரதி வி.பவன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் வி.எஸ்.விஜயராம்-1178; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.மிதுன்-1185; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.ஸ்ருதி-1189; நாமக்கல் கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.நிவேதா-1186; ஈரோடு அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர்.மைதிலி-1176; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி ஈ.கரோலின் திவ்யா-1181; நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் பெண்கள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல் தலைமுறை (குடும்பத்தில் முதல் பட்டதாரி) மாணவர் வி.கௌதம்-1179; நாமக்கல் ராசிபுரம் எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.மைவிழி ஸ்ருதி-1177. இவர்களில் மாணவி ஈ.ஸ்ருதி மட்டும் பிரெஞ்சு பாடத்தை மொழி பாடமாக எடுத்துப் படித்தவர்.
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டபோது, மாநிலத்தில் முதலிடம் பிடித்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி எஸ்.சுஷாந்தி எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 191-ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் இவரது மொத்த மதிப்பெண் 1200-க்கு 1193. இயற்பியல், உயிரியல் பாடங்களில் இவர் 200-க்கு 200 பெற்ற போதிலும், வேதியியல் பாடத்தில் 200-க்கு 199 பெற்றதால் இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 199.75. இதனால் இவர் தரவரிசைப் பட்டியலில் 191-ஆவது இடத்தில் உள்ளார்.
இதே போன்று இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1,200-க்கு 1,192 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்த தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.எல்.அலமேலு, எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 338-ஆவது இடத்தில் உள்ளார். இவர் இயற்பியல்-வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 பெற்றிருந்தாலும்கூட, உயிரியல் பாடத்தில் 200-க்கு 199 பெற்றதால் கட்-ஆஃப் மதிப்பெண் 199.50-ஆக நிர்ணயிக்கப்பட்டு 338-வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1191 பெற்று மாநிலத்தில் 3-ஆம் பிடித்த நாமக்கல் போதுப்பட்டி கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் டி.துளசிராஜன், எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியலில் 84-ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளார். உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய மூன்று பாடங்களில் 200-க்கு 200 பெற்றிருந்தாலும், பிறந்த தேதி மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் இவருக்கு 84-வது இடம்தான் கிடைத்துள்ளது.

நள்ளிரவில் வந்த மதிப்பெண் சி.டி.!

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-வேதியியல்-இயற்பியல் பாடங்களில் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் சி.டி.-ஐ மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நள்ளிரவு அளித்தனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து தகுதி பெற்றுள்ள 27,539 பேரில், மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்திருந்த 900 மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய சி.டி.-ஐ மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகளிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ரேங்க் பட்டியலை முழுமைப்படுத்தும் பணி சனிக்கிழமை அதிகாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
மறு மதிப்பீடு மூலம் திருத்தப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் இரண்டு மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ பெற்றதால், 200-க்கு 200-ஐப் பெற்றோரின் எண்ணிக்கை 130-லிருந்து 132-ஆக அதிகரித்தது. இதே போன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புள்ள 100 மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகரித்து மறு மதிப்பீடு மூலம் பலன் கிடைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்: இதே போன்று பி.இ. படிப்புக்கு உரிய கணிதம்-இயற்பியல்-வேதியியல் ஆகிய பாடங்களில் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அடங்கிய சி.டி.-ஐ அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் குழு அதிகாரிகளிடம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் அளிப்பார்கள் எனத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
எம்.பி.பி.எஸ் தரவரிசை பட்டியல்: நாமக்கல், ஈரோடு பள்ளிகள் ஆதிக்கம் 

எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.

தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவ–மாணவிகள் பெயர் விவரம் வருமாறு:–

1. கே.சுந்தர்நடேஷ்– மேற்கு மாம்பலம் (டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி, கோபாலபுரம்).

2. எஸ்.அபிஷேக்–தேனாம் பேட்டை (ஸ்ரீவித்யா மந்திரி மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை).

3. வி.எஸ்.விஜயராம்– ஈரோடு (பாரதி வித்யாபவன் பள்ளி, திண்டல்).

4. எம்.மிதுன்–நாமக்கல் (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).

5. ஈ.சுருதி–கோவை (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).

6. கே.நிவேதா– நெய்வேலி (கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல்).

7. கே.ஆர்.மைதிலி–நாமக்கல் (ஆதர்னல் வித்யாலயா பள்ளி, அந்தியூர்).

8. ஈ.கலோவின் திவ்யா– கோவை (கிரீன் பார்க் பள்ளி–நாமக்கல்).

9. வி.கவுதம்–நாமக்கல் (கிரீன்பார்க் பள்ளி, நாமக்கல்).

10. எம்.மைவிழி சுருதி– ராசிபுரம் (எஸ்.ஆர்.வி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம்).

மாணவர் சேர்க்கை கமிட்டி செயலாளர் டாக்டர் சுகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

எம்.பி.பி.எஸ் மற்றும் பல்மருத்துவ அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கு 28 ஆயிரத்து 53 விண்ணப்பங்கள் மாணவ–மாணவிகளிடம் இருந்து பெறப்பட்டன. இதில் 368 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 27 ஆயிரத்து 539 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதில் ஆண்கள் 10 ஆயிரத்து 105 பேர் பெண்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 434.

முதல் தலைமுறை பட்டதாரிகள் 10 ஆயிரத்து 61 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 132 மாணவ– மாணவிகள் 200–க்கு 200 மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

மருத்துவபட்டப் படிப்புக்கான முதல் கலந்தாய்வு 17–ந்தேதி காலை 9 மணிக்கு சிறப்பு பிரிவினருக்காக நடைபெறுகிறது. இதில் விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் பங்கேற்கிறார்கள்.

பொதுப் பிரிவு கலந்தாய்வு 18–ந்தேதி தொடங்கி 22–ந்தேதி வரை நடைபெறுகிறது. 19 அரசு மருத்துவ கல்லூரிகளில் 2555 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய இட ஒதுக்கீடு 383 போக மீதம் உள்ள 2172 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது.

அரசு பல்மருத்துவ கல்லூரியில் 85 இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரி களில் அரசு ஒதுக் கீட்டு இடங்கள் 993 உள்ளன. இந்த இடங்களும் பொது கலந்தாய்வில் நிரப்பப்படுகின்றன.

முதல் கட்ட கலந்தாய்வில் 400 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்க்கப்படவில்லை. அவை 2–வது கட்ட கலந்தாய்வில் எடுத்துக் கொள்ளப்படும். 2–வது கட்ட கவுன்சிலிங் ஜூலை 2–வது வாரம் நடைபெறும். செப்டம்பர் 1–ந்தேதி அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்கும்.

தினந்தோறும் நடைபெறும் கலந்தாய்வு பற்றிய விவரங்கள் மற்றும் காலி இடங்கள் பற்றியவிவரம் மருத்துவ கல்வி இணைய தளத்தில் இடம் பெறும். தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கான கல்வி கட்டணம் கடந்த ஆண்டு என்ன நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ இதுவரை அதில் எந்த மாற்றமும் இல்லை. 11 தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் தேர்வு செய்பவர்கள் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செலுத்த வேண்டும். இதை திரும்ப பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் கீதாலட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Wednesday, June 11, 2014

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் 18 ஆயிரத்து 115 மாணவ, மாணவிகள் மாநில அரசுகளின் கீழ் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (அரசு ஒதுக்கீடு) இடங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
அதே நேரம் நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது.
இந்த 15 சதவீத இடங்களில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இதுபோல் 2014-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு கடந்த மே 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 929 தேர்வு மையங்களில் இத் தேர்வு நடத்தப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்து 23 ஆயிரத்து 701 பேர் தேர்வை எழுதினர். இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூன் 7) வெளியிடப்பட்டன. இதில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்களில் மாநில அரசுகளின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு 18 ஆயிரத்து 115 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 716 பேர் மாணவர்கள்; 8 ஆயிரத்து 399 பேர் மாணவிகள்; தேர்வு முடிவுகள், தரவரிசைப் பட்டியல் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்துக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் www.aipmt.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூன் 14-இல் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) மாணவர்களைச் சேர்க்க சென்னையில் வரும் சனிக்கிழமை (ஜூன் 14) தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.

மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள பிளஸ் 2 மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்ணை பள்ளிக் கல்வித் துறை அளித்தவுடன், தரவரிசைப் பட்டியலை முழுமையாக தயாரிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இதனால்தான் தரவரிசைப் பட்டியலை வரும் 14-ஆம் தேதி வெளியிட அது முடிவு செய்துள்ளது.

2,172 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் சேர இந்த ஆண்டு மொத்தம் 27,907 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 2-ஆம் தேதி முடிவடைந்தது.

"ரேண்டம் எண்' ஒதுக்கீடு: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 27,907 மாணவர்களுக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி முன்னிலையில் கம்ப்யூட்டர் மூலம் 10 இலக்க

"ரேண்டம் எண்' (சம வாய்ப்பு எண்) திங்கள்கிழமை (ஜூன் 9) வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட சம வாய்ப்பு எண்ணை சுகாதாரத் துறை இணையதளம் www.tnhealth.org மூலம் தெரிந்து கொள்ளலாம்.

"ரேண்டம் எண்' எதற்காக? எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணை சில மாணவர்கள் பெற்றுள்ள நிலையில் தரவரிசைப் பட்டியலில் அவர்களை வரிசைப்படுத்த குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அதாவது பிளஸ் 2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் மதிப்பெண் சேர்த்து பெற்ற சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், பிளஸ் 2 தேர்வில் வேதியியல் பிரிவில் பெற்ற சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் சமமாக இருந்தால் பிளஸ் 2 தேர்வில் நான்காவது விருப்ப பாடப் பிரிவில் சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் சமமாக இருந்தால் மாணவர்களின் பிறந்த தேதி பார்க்கப்பட்டு, வயதில் மூத்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவை அனைத்திலும் மாணவர்கள் சமமாக இருக்கும் நிலையில், கம்ப்யூட்டர் அடிப்படையில் தயாராக உள்ள ரேண்டம் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அதிகப்படியான எண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள்.

கடந்த கல்வியாண்டில் 11 பேர்: மேலே குறிப்பிட்ட ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணை எத்தனை மாணவர்கள் எடுத்துள்ளனர் என்பது வரும் 14-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும்போதுதான் தெரிய வரும்.

அப்போது பயன்படுத்தவே இப்போது ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ரேங்க் பட்டியலில் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்ற 11 மாணவர்களுக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கலந்தாய்வு எப்போது? எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை ஜூன் 25-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு வரும் 18-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Monday, June 9, 2014

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்முறையாக ஆன்லைன் முறையில் நடைபெற்ற இத்தேர்வை 58 ஆயிரம் பேர் எழுதினர்.
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் 150 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12.30 மணி வரை நடந்தது. அகில இந்திய மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு அடிப்படையில் இத்தேர்வு நடந்தது.
நாடு முழுவதும் புதுச்சேரி, சென்னை, புதுதில்லி, கோவை, திருச்சி, நாமக்கல், கொல்கத்தா, சேலம், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், விஜயவாடா உள்பட 36 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 376 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடந்தது. இத்தேர்வை 58 ஆயிரம் பேர் எழுதினர். இத்தேர்வுக்கு 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்தாண்டு எண்ணிக்கையை விட 35 சதவீதம் அதிகம். புதுச்சேரியில் ஜிப்மர் வளாகத்தில் 4 மையங்கள் உள்பட மொத்தம் 13 மையங்களில் நுழைவுத் தேர்வு நடந்தது.
இயற்பியல், வேதியியல், உயிரியல் தலா 60 மதிப்பெண்களும், ஆங்கிலம் 20 மதிப்பெண்களும் என மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.
ஆள்மாறாட்டத்தைத் தடுக்க பயோமெட்ரிக் அடையாள அட்டையை ஜிப்மர் நிர்வாகம் வழங்கியிருந்தது. உரிய சோதனைக்குப்பின் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையங்களில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் வரும் 16-ஆம் தேதி இணைய தளம் மூலம் வெளியிடப்படும் என்று ஜிப்மர் வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் 18 ஆயிரத்து 115 மாணவ, மாணவிகள் மாநில அரசுகளின் கீழ் உள்ள 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். (அரசு ஒதுக்கீடு) இடங்களில், அந்தந்த மாநிலங்களில் உள்ள நடைமுறைகளின்படி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அதே நேரம் நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகிறது.

இந்த 15 சதவீத இடங்களில், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இதுபோல் 2014-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு கடந்த மே 4-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 50 நகரங்களில் 929 தேர்வு மையங்களில் இத் தேர்வு நடத்தப்பட்டது.

நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சத்து 23 ஆயிரத்து 701 பேர் தேர்வை எழுதினர். இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஜூன் 7) வெளியிடப்பட்டன. இதில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்க 46 ஆயிரத்து 271 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் மாநில அரசுகளின் கீழ் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு 18 ஆயிரத்து 115 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 716 பேர் மாணவர்கள்; 8 ஆயிரத்து 399 பேர் மாணவிகள்; தேர்வு முடிவுகள், தரவரிசைப் பட்டியல் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடத்துக்கான கட்-ஆஃப் மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் www.aipmt.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
410 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கையில் சிக்கல்: அரசு மருத்துவ கல்லூரிகளில் போதிய வசதியில்லை?

அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்களுக்கு ஏற்ப, போதிய வசதிகள் இல்லை' என, இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளதால், 410 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, மாணவர்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,550 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், மத்திய அரசு ஒதுக்கீடு இடங்கள், 15 சதவீதம் போக, மீதமுள்ள, 2,172 இடங்களுக்கு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.

கால அவகாசம்:

விண்ணப்பங்களை சமர்பிக்க, கால அவகாசம் முடிந்து விட்டது; 27,876 பேர் சமர்பித்துள்ளனர். 'முதற்கட்ட கலந்தாய்வு, வரும், 18ம் தேதி துவங்கும்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண்களை அள்ளியுள்ளதால், கடந்த ஆண்டை விட, 'கட் - ஆப்' மதிப்பெண் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்குமா என, மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டில், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு கூடுதலாக தரப்பட்ட, 410 இடங்களில், மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

போதிய வசதிகள் இல்லை:

கூடுதல் இடங்களாக, கடந்த ஆண்டு, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி - 100; சென்னை - 85; சேலம் - 25; திருச்சி - 50; தூத்துக்குடி - 50 என, ஒதுக்கப்பட்டன. இது தவிர, புதிதாக, திருவண்ணாமலை அரசு மருத்துக் கல்லூரிக்கு, 100 இடங்களுக்கு அனுமதி தரப்பட்டு, மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். கூடுதல் இடங்கள் அனுமதித்த கல்லூரிகளில், போதிய வசதிகள் உள்ளதா என, ஐந்து ஆண்டுகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்து, ஆண்டுதோறும் அனுமதி அளிக்கும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆய்வு நடந்து முடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, 'ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில், போதிய வசதிகள் இல்லை' எனக்கூறி, கூடுதல் இடங்களுக்கு அனுமதி தர மறுக்கப்பட்டுள்ளது. இதே போல், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கும் சிக்கல் வந்துள்ளது. பிற கல்லூரிகளின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. எனவே, கூடுதலாக, 410 இடங்களுக்கு மாணவர்களை சேர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதுதவிர, 2012ல், 100 இடங்களுடன் துவக்கப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில், போதிய வசதி இல்லை என, அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''ஸ்டான்லி உள்ளிட்ட சில மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில், சில குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. அவற்றை நிவர்த்தி செய்து, அறிக்கை அனுப்பி விட்டோம். விரைவில் உரிய அனுமதி கிடைத்துவிடும். சிவகங்கை மருத்துவக் கல்லூரிக்கும் உரிய அனுமதி கிடைக்கும். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை,'' என்றார்
பொறியியல் மாணவர்களுக்கு வரும் 11ம் தேதியும், மருத்துவத்திற்கு 12ம் தேதியும் ரேண்டம் எண் வழங்கப்படுகிறது. 17ம் தேதி பொறியியலுக்கு கவுன்சலிங்கும், 18ம் தேதி மருத்துவ கவுன்சலிங்கும் தொடங்குகின்றன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பதில் சிக்கல்: குறைபாடு இருப்பதால் எம்சிஐ தயக்கம்

அரசு மருத்துவ கல்லூரிகளில் 200 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைப்பதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 2,172 இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து மாநில அரசுக்கு சுமார் 900 இடங்கள் கிடைக்கிறது. இதே போல சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.

இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம் போக மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கும். தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 900-க்கும் மேற்பட்ட இடங்கள் மாநில அரசுக்கு கிடைக்கிறது.

இந்நிலையில் 2014-2015-ம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் வரும் 18-ம் தேதி கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் தொடங்குகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) குழுவினர் கடந்த ஆண்டு ஆய்வு செய்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்களையும், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 85 இடங்களையும் ஒதுக்கினர். இதன் மூலம் இந்த இரண்டு கல்லூரிகளிலும் உள்ள எம்பிபிஎஸ் இடங்கள் தலா 250 ஆக உயர்ந்தது. மேலும் 100 இடங்களுடன் புதிதாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும் எம்சிஐ அனுமதி அளித்தது. இவ்வாறு கூடுதல் இடங்கள் அதிகரித்த கல்லூரிகளிலும், புதிய கல்லூரிகளிலும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கிறதா என்பதை எம்சிஐ குழுவினர் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு எம்சிஐ குழுவினர் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் உள்கட்டமைப்பு வசதியில் சிறிது குறைபாடு இருப்பதாக தெரிவித்தனர். அந்த குறைபாடுகள் சரி செய்யப்பட் டதற்கான அறிக்கை எம்சிஐக்கு அனுப்பப்பட்டுள்ளது. எம்சிஐ குழுவினர் மீண்டும் வந்து ஆய்வு செய்ய உள்ளனர். அதனால், எவ்வித பிரச்சினையும் இல்லை. 200 எம்பிபிஎஸ் இடங்களும் கட்டாயம் கிடைத்துவிடும். எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதல்கட்ட கவுன்சலிங் வரும் 18-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும். மொத்தம் 4 கட்டங்களாக கவுன்சலிங்கை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Sunday, June 8, 2014

எம்.பி.பி.எஸ்.: 2,172 இடங்களுக்கும் எம்.சி.ஐ. அனுமதி கிடைத்து விடும்

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களிலும் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) அனுமதி கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களிடையே கடும் கட்-ஆஃப் மதிப்பெண்

போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இருந்த எம்.பி.பி.எஸ். இடங்களில் எண்ணிக்கை குறைந்தால் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சம் பெற்றோரிடம் எழுந்துள்ளது.

410 கூடுதல் இடங்கள்: சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் எம்.பி.பி.எஸ். இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கான முயற்சியை தொடர்ந்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளும் மருத்துவக் கல்வி அதிகாரிகளும் எடுத்து வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் (2013-14) இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது. மேலும் திருவண்ணாமலையில் கடந்த கல்வி ஆண்டில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கும் எம்.சி.ஐ. ஒப்புதல் அளித்து அது செயல்பட்டு வருகிறது. அதாவது கடந்த கல்வி ஆண்டில் (2013-14) அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்தது.

புதுப்பித்தல் நடைமுறை என்ன? ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டால் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை அந்த மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்து புதுப்பிக்கும் நடைமுறையை இந்திய மருத்துவக் கவுன்சில் வகுத்துள்ளது. இதே நடைமுறை கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும் பின்பற்றப்படுகிறது. அந்த வகையில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் குறித்து இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்து சில குறைபாடுகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர். இதே போன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியையும் இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு (ஜூன் 18) தொடங்குவதற்குள்ளும் அதன் பிறகும் படிப்படியாக கடந்த கல்வி ஆண்டைப் போலவே மேலே குறிப்பிட்ட கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கும் இந்தக் கல்வி ஆண்டிலும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்து விடும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய அனைத்து 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் அனுமதி கிடைத்து விடும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி...: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஜூன் 25-ஆம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை முடிக்க வேண்டும். எனவே தரவரிசைப் பட்டியலை ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 16-ஆம் தேதிக்குள் வெளியிட்டு, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூன் 18-ஆம் தேதியன்று எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.



கோவையில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி

கோயம்புத்தூரிலும் நடப்புக் கல்வி ஆண்டில் மத்திய தொழிலாளர் நலத் துறை சார்பில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.

சென்னை கே.கே. நகரில் கடந்த கல்வி ஆண்டில் (2013-14) 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்களைச் சமர்ப்பித்து ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.24,000-த்தை நிர்ணயித்துள்ளது.

இதே போன்று கோயம்புத்தூரில் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் தொடங்கப்பட உள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியை (தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவன மருத்துவக் கல்லூரி) இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து முடித்துள்ளனர். இந்தக் கல்லூரிக்கு நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) அனுமதி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த மருத்துவக் கல்லூரி மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, June 6, 2014

மருத்துவக் கல்வியை வெறும்வர்த்தகமாக்கியதன் விளைவு

தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் 2014-15 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவப் படிப்பில் சேரு வோருக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதற்காக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.5 லட்சம் வரை செலவிடப்படுகிறது. தனியார் கல்லூரிகளிலோ அடிப்படைக் கட்டமைப்புகள் இருக்கிறதோ இல்லையோ கோடிக்கணக்கில் பண வசூல் மட்டும் நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒராண்டு கல்விக்கட்டணம் வெறும் 11,500 ரூபாய்தான். 5 ஆண்டுகளில் ரூ.55,000 முதல் ரூ.60,000 வரையிலான செலவில் தரமான மருத்துவப் படிப்பைப் பெற்றுவிடலாம்.

ஆனால் தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் மருத்துவக் கல்லூரிகளில் இந்த நிலை இல்லை. உதாரணத்திற்கு சென்னை அருகே உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஒராண்டுக்கு கல்விக்கட்டணமாக ரூ.9 லட்சமும், எஸ்.ஆர்.எம் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.7லட்சமும் வசூலிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் மொத்தமாக ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட மாணவர்கள் செலுத்தவேண்டிய கல்விக்கட்டணம் மட்டும் அரைக் கோடியைத் தொடுகிறது. இவையல்லாமல் நன்கொடை என்ற பெயரில் ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வசூலிக்கப்படுகிறது.

முதுகலை மருத்துவப்படிப்பு என்றால் நன்கொடையாக ரூ.2 கோடி வரையும் கல்விக்கட்டணமாக ரூ.30 லட்சம் வரையும் வசூலிக்கப்படுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த இதுவரை எந்த உருப்படியான ஏற்பாடுகளும் இல்லை. கல்விக் கட்டணக் கொள்ளை குறித்து ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் வரும் போது நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு போடும். அப்போது வேறுவழியில்லாமல் மாநில அரசால் நியமிக்கப்படும் குழு கல்விக் கட்டணத்தை மட்டுமே ஆய்வு செய்கிறது. நன்கொடை என்ற பெயரில் மறைமுகமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க அதற்கு அதிகாரம் இல்லை. தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை 25 விழுக்காடு உயர்த்திவிட்டன. இப்படி பலகோடி ரூபாய் கொடுத்து படித்து முடித்துவருவோரிடம் சேவை உணர்வை எதிர்பார்க்க முடியுமா? உலகிலேயே மருத்துவப் பணியை பல நாடுகள் சேவை அடிப்படையில் செய்கின்றன.

சின்னஞ்சிறிய நாடான கியூபா இலவசமாக மருத்துவப் படிப்பை வழங்கி தனது மருத்துவர்களை பல ஏழை நாடுகளுக்கு சேவை செய்ய அனுப்புகிறது. அந்நாட்டில் 170 பேருக்கு ஒரு மருத்துவரும் அமெரிக்காவில் 390 பேருக்கு ஒரு மருத்துவரும் உள்ளனர்.

ஆனால் இந்தியாவில் இதெல்லாம் ஒரு கனவாகவே உள்ளது.மக்களின் அடிப்படைத் தேவையாகிய சுகாதாரத்துறையிலும் கல்வித்துறையிலும் அரசு தனது கடமையை படிப்படியாக குறைத்துக் கொண்டே வந்ததன் விளைவு சேவைத்துறைகள் அனைத்தும் இன்று லாப - நட்டம் பார்க்கும் துறைகளாக மாறியுள்ளன. கல்வித்துறையும் சுகாதாரத் துறையும் அரசின் வசம் இருந்தால்தான் இத்தகைய கொள்ளைகளை ஒழிக்கமுடியும், மக்களின்நலன்களைப் பாதுகாக்க முடியும்.
பொறியியல் கல்லூரிகளின் தரம் வீழ்ச்சி தேர்ச்சியில் ஒற்றை இலக்கத்தை தாண்டாத கல்லூரிகள்
அதிர்ச்சியில் பெற்றோர்

தமிழகத்தில் கல்வி தொடர்ந்து வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் ஈசல் புற்றிலிருந்து ஈசல்கள் கிளம்பி வெளிவருதைப் போல பொறியியல் கல்லூரிகள் பக்கம் பக்கமாக கலர் விளம்பரங்கள் செய்து, ஊடகங்களில் பெரிய பெரிய கட்டிடங்களைக் காட்டி விளம்பரம் செய்து வெளிவருகின்றன.அதுவும் 2014-2015ம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் உண்டு என அண்ணா பல்கலைக்கழகம் பெருமையோடு கூறிக்கொள்கிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தனது மகனும், தனது மகளும் பொறியியல் வல்லுநராக வரவேண்டும். மற்றவர்கள் மெச்சத்தக்க அளவிற்கு சம்பளம் பெறவேண்டும் என ஆசையோடு நிலத்தில் தொடங்கி தனது மனைவியின் காதில் கிடக்கும் குண்டுமணி அளவு தங்கம் வரை அடகு வைத்து கல்லூரிகளில் சேர்த்துவிடுகின்றனர். ஒரு மாணவர் நான்காண்டு பொறியியல் கல்வி முடித்து வெளியே வருவதற்கு பல லட்சங்கள் செலவாகிறது.லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் பொறியியல் கல்லூரிகளின் தரம் எப்படி உள்ளது. ஒவ்வொரு பொறியியல் கல்லூரியிலும் எத்தனை மாணவர்கள் தேர்வெழுதினார்கள். எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள். தேர்ச்சி சதவீதம் எவ்வளவு என்பதை அண்ணா பல்கலைக்கழம் அம்பலப்படுத்திவிட்டது.

அண்ணா பல்கலைக்கழகம் 2012 நவம்பர்-டிசம்பர், 2013 ஏப்ரல்-மே, 2013-நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வுகளில் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப்பட்டியலை வெளியிட்டுள்ளது 2012 நவம்பர்-டிசம்பரில் 496 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இதில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியிலிருந்து 4,463 பேர் தேர்வெழுதியுள்ளனர். மிகக்குறைவாக திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றிலிருந்து ஒரு மாணவர் தேர்வெழுதியுள்ளார்.மொத்தமுள்ள 496 கல்லூரிகளில் ஒரு கல்லூரி கூட 100 சதவீத தேர்ச்சியை எட்டிப்பிடிக்கவில்லை. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் படிக்கும் மாணவர்களில் 88.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒப்பீட்டளவில் 70.11 சதவீதத்திலிருந்து 79.93 சதவீதம் வரை -31, கல்லூரிகள் 60.21 சதவீதத்திலிருந்து 69.46 சதவீதம் வரை-68 கல்லூரிகள், 50.06 சதவீதத்திலிருந்து 59.93 சதவீதம் வரை- 71 கல்லூரிகள், 40.20 சதவீதத்திலிருந்து 49.94 சதவீதம் வரை- 89 கல்லூரிகள், 30.17 சதவீதத்திலிருந்து 39.93 சதவீதம் வரை-84 கல்லூரிகள், 20 சதவீதத்திலிருந்து 29.94 சதவீதம் வரை-64 கல்லூரிகள், 10.64 சதவீதத்திலிருந்து 19.94 சதவீதம் வரை-57 கல்லூரிகள், 2.94 சதவீதத்திலிருந்து 9.89 சதவீதம் வரை- 16 கல்லூரிகள் என்ற அளவிலேயே தேர்ச்சி விகிதம் உள்ளது.2013 ஏப்ரல்-மே நடைபெற்ற தேர்வில் 20.8 சதவீதத்திலிருந்து 35.87 சதவீதம் வரை-76, 1.82 சதவீதத்திலிருந்து 19.80 சதவீதம் வரை 27 கல்லூரிகள் பெற்றுள்ளன.

இந்தக் காலத்தில் தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 390 பேரில் 40 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இன்னும் மோசமான தேர்ச்சிவிகிதமும் உள்ளது.ஈரோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 120 பேரில் 11 பேரும், திருவண்ணாமலையில் உள்ள கல்லூரியில் தேர்வெழுதிய 173 பேரில் 15 பேரும், அரியலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 396 பேரில் 34 பேரும், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 46 பேரில் 3 பேரும், வேலூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 236 பேரில் 13 பேரும், தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 143 பேரில் 4 பேரும், விழுப்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 55 பேரில் ஒரே ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் ஒரே ஒரு மாணவர் மட்டும் தேர்வெழுதி தோல்வியை தழுவியுள்ளார்.

அதிர்ச்சியில் பெற்றோர்

2013 நவம்பர்-டிசம்பரில் நடைபெற்ற தேர்வில் 10.10 சதவீதத்திலிருந்து 18.55 சதவீதம் வரை-46, 1.82 சதவீதத்திலிருந்து 9.65 சதவீதம் வரை-19 கல்லூரிகளும் தேர்ச்சி பெற்றுள்ளன.இந்தக் காலத்தில் சிவகங்கையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 515 பேரில் 32 பேரும், மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 532 பேரில் 57 பேரும், தேனியில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 323 பேரில் 42 பேரும், திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 341 பேரில் 60 பேரும், இராமநாதபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் தேர்வெழுதிய 581 பேரில் 45 பேர் என்ற அளவிலேயே தேர்ச்சி விகிதம் உள்ளது.

முட்டையில் சாதனை

விழுப்புரத்தில் உள்ள மற்றொருகல்லூரியில் தேர்வெழுதிய 140பேரில் ஒருவர் கூட வெற்றிபெறவில்லை.

ஒற்றை இலக்கத்தை தாண்டாத கல்லூரிகள்

தேர்ச்சி விகிதத்தில் (மூன்று கட்டங்களாக நடைபெற்ற தேர்வில்) 42 கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் பெற்றோர்களையும் கல்வியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.70 சதவீதத்திலிருந்து 90 சதவீத தேர்ச்சியை சுமார் 90 கல்லூரிகளேபெற்றுள்ளன. இவ்விவரங்களைhttp://www.annauniv.edu/ இணையதளத்தில் வெளியான தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன

Thursday, June 5, 2014

பி.இ. காலியிடங்கள் அதிகரிப்பு: படிப்புகளை கைவிடும் கல்லூரிகள் உயர்வு
பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து வருவதைத் தொடர்ந்து, பல்வேறு படிப்புகளை கைவிடும் நிலைக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன.
பி.டெக். தகவல் தொழில்நுட்பம், இசிஇ, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. போன்ற படிப்புகளை கைவிட 2014-15 கல்வியாண்டில் 80-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பு நடவடிக்கைகள், கல்லூரி வளாகத் தேர்வுக்கு வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்து கல்வித் தரம் குறைந்தது ஆகியவையே இதற்குக் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
ரூ. 5 லட்சம், ரூ. 7 லட்சம், ரூ. 10 லட்சம், ரூ. 13 லட்சம் வரை இசிஇ, சிஎஸ்இ படிப்புகள் விலை போயிக்கொண்டிருந்த காலம் மாறி, கடந்த 2012-13, 2013-14 கல்வியாண்டுகளில் பிரபல பொறியியல் கல்லூரிகள் அண்டை மாநிலங்களுக்குச் சென்று மாணவர்களைப் பிடித்தத் தகவலும் இப்போது தெரியவந்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீடு இடங்களை முழுமையாக நிரப்புவதற்காக ஆந்திர மாநிலத்துக்குச் சென்று மாணவர்களைப் பிடித்துள்ளனர்.
இதுபோல் கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிகள் கேரளத்துக்குச் சென்று மாணவர்களைப் பிடித்து வந்துள்ளனர். இதில் சில கல்லூரிகள் வகுப்புகள் தொடங்கி ஒரு மாதத்துக்குப் பிறகுகூட நன்கொடையை வெகுவாகக் குறைத்து மாணவர் சேர்க்கையை நடத்தியுள்ளன.
நிலைமை இப்போது மேலும் மோசமாகியிருப்பதால், பல கல்லூரிகள் படிப்புகளை இழுத்து மூடும் நிலைக்கும், மாணவர் சேர்க்கை இடங்களை குறைக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளன. சில பிரபல கல்லூரிகள் நன்கொடை தொகையை வெகுவாகக் குறைப்பதற்கும் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலை காரணமாக, பல்வேறு படிப்புகளை இழுத்து மூடும் கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக பி.டெக். தகவல் தொழில்நுட்ப படிப்பை கடந்த ஆண்டில் 19 கல்லூரிகள் இழுத்து மூடின. இப்போது 2014-15 கல்வியாண்டில் இந்தப் படிப்பை இழுத்து மூட 39 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இசிஇ, எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளை இழுத்து மூட விண்ணப்பித்திருக்கும் கல்லூரிகளின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் என்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள்.
இதுபோல் இசிஇ, சிஎஸ்இ போன்ற முக்கியப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைத்துக் கொள்ள 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இம்முறை விண்ணப்பித்துள்ளன.
வரும் கல்வியாண்டில் மண்டலம் வாரியாக கைவிடப்படும் படிப்புகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை விவரம்:
படிப்புகள் சென்னை கோவை திருச்சி மதுரை திருநெல்வேலி
பி.டெக். - ஐ.டி. 11 15 5 2 6
பி.இ. - சி.எஸ்.சி. 2 0 0 1 0
எம்.சி.ஏ. 12 5 1 3 1
எம்.பி.ஏ. 7 6 0 2 0
படிப்புகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை 240-லிருந்து 120 ஆகவும், 120-லிருந்து 60-ஆகவும் குறைக்கும் கல்லூரிகள் விவரம்:
படிப்புகள் சென்னை கோவை திருச்சி மதுரை திருநெல்வேலி
பி.டெக். - ஐ.டி. 0 2 0 0 0
பி.இ. - சி.எஸ்.சி. 5 2 1 2 1
பி.இ. - இசிஇ 3 2 1 0 0

Wednesday, June 4, 2014

495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு

கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின் அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் தர நிலவரம் தெரியாமல், கலந்தாய்வில், கல்லூரியை தேர்வு செய்ய வேண்டிய நிலையை சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொறியியல் கல்லூரிகளின், தேர்ச்சி சதவீத அடிப்படையில், கல்லூரிகளின் தர வரிசை பட்டியலை வெளியிட, அண்ணா பல்கலைக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனடிப்படையில், 2012 மற்றும் 13ல், அரசு பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என, 495, கல்லூரிகளில் நடந்த பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின், தேர்ச்சி அடிப்படையில், தர வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை, நேற்று, தன் இணையதளத்தில் (www.annavuiv.edu) வெளியிட்டது. அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், நான்கு கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற, 28 பொறியியல் கல்லூரிகள் விவரம், பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 'இந்த கல்லூரிகளை, தர வரிசை பட்டியலில் சேர்க்க, உயர் நீதிமன்றம் உத்தரவிடப்படாததால், சேர்க்கவில்லை' என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது. ஒரே பெயர் கொண்ட கல்லூரிகளின் பெயர் பட்டியலும், அண்ணா பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அகர வரிசைப்படி, கல்லூரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து, அண்ணா பல்கலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், வெங்கடேசன் கூறியதாவது: இரு ஆண்டுகளிலும், இறுதி, 'செமஸ்டர்' தேர்வு அடிப்படையில், தர வரிசை பட்டியல் வெளியிடவில்லை. 2012, நவம்பர், டிசம்பரில் நடந்த, 1, 3, 5, 7 ஆகிய, 'செமஸ்டர்' தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும், 2013ல், 2, 4, 6, 8 ஆகிய, 'செமஸ்டர்' தேர்வு முடிவுகளின் அடிப்படையிலும், தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அடையாளம் காண உதவும்:

ஒவ்வொரு கல்லூரியின், வெறும் தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கணக்கிடாமல், அந்த கல்லூரியின், உள்கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள், பணி நியமனத்திற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட, அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, அதனடிப்படையில், தர வரிசை பட்டியலை வெளியிட்டால் மட்டுமே, மாணவர்களுக்கு பலன் கிடைக்கும். நேற்று வெளியான பட்டியல், அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது இல்லை என்பதால், மாணவர்களுக்கு, பெரிய அளவில், பயன் கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். எனினும், ஓரளவிற்கு, நல்ல கல்லூரியை அடையாளம் காண, இந்த பட்டியல் உதவும்.
அண்ணா பல்கலை இணையதளத்தில் பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் வெளியீடு

அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளின் ரேங்க் பட்டியல் அண்ணா பல்கலைக் கழக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக் கழகத்தில் 542 பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் குறித்து அண்ணா பல்கலைக் கழகம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தனி நபர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி வீதம் குறித்து பட்டியல் ஒன்றை அண்ணா பல்கலைக் கழகம் நேற்று வெளியிட்டது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் மொத்தம் 542 பொறியியல் கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன. அவற்றில் 506 கல்லூரிகள் பிஇ மற்றும் பி.டெக் படிப்புகளை நடத்துகின்றன. 36 கல்லூரிகள் பி.ஆர்க் படிப்பை நடத்துகின்றன. இந்த கல்லூரிகளில் 2012ல் நடந்த தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், தேர்ச்சி வீதம், ரேங்க் (பெர்பாமன்ஸ்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
அதேபோல 2013ல் ஜூன், ஜூலை மாதங்களில் நடந்த தேர்வுகள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் விவரங்களும் இடம் பெற்றுள்ளன. இவை தவிர 2013ம் ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையில் விண்ணப்பித்து இருந்த மாணவர்களின் கட்ஆப் விவரங்கள், ஒவ்வொரு கல்லூரியை பற்றிய தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றையும் அண்ணா பல்கலைக் கழகம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் மூலம் இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர உள்ள மாணவர்கள், தாங்கள் சேர உள்ள கல்லூரியின் தரம் குறித்து ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம்.
5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்: ஒரு தனியார் கல்லூரியில் ஒருவர்கூட தேர்ச்சி இல்லை

பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதுபோல் 5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் உள்ளது. இந்த தேர்ச்சி விகிதம் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரே மாதிரி பெயரில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளின் பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

2012 நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வில் இணைப்புக் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் 2013 ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் மாத பல்கலைக்கழக தேர்வுகளில் உறுப்புக் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் 2013-ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் பல்கலைக்கழக தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 506 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் 140 மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இந்தக் கல்லூரி பூஜ்ஜியம் தேர்ச்சி விகிதத்துடன் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

இதேபோல 5 பொறியியல் கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம் உள்ளது. பெரம்பலூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 55 பேர் தேர்வெழுதியதில் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார்.

திண்டுக்கலைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியில் 21 பேர் தேர்வெழுதி ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 86 பேர் தேர்வெழுதி 5 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவையைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் 25 பேர் தேர்வெழுதியதில் 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரியலூரைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 86 பேர் தேர்வெழுதி 7 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் இந்தப் பருவத் தேர்வில் 333 பொறியியல் கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. 88 கல்லூரிகள் 60 சதவீதத்துக்கு குறைவாகவும், 50 பொறியியல் கல்லூரிகள் 70 சதவீதத்துக்கு குறைவாகவும், 25 கல்லூரிகள் 80 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 506 பொறியியல் கல்லூரிகளில் 10 கல்லூரிகளில் மட்டுமே 80 சதவீதத்துக்கும் மேல் மாணவர் தேர்ச்சி விகிதம் உள்ளது.

திருச்சியைச் சேர்ந்த ஒரு தனியார் கல்லூரி அதிக மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்று 2013 ஏப்ரல்-மே மற்றும் நவம்பர்-டிசம்பர் ஆகிய இரு பல்கலைக்கழக தேர்வுகளிலும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பின்னடைவை சந்தித்துள்ள பிரபல கல்லூரிகள்: கடந்த சில ஆண்டுகளாக மாணவர் தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகித்து வந்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல கல்லூரிகள், இப்போது தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவை சந்தித்துள்ளன.

இந்த மாவட்டங்களைச் சேர்ந்த சில கல்லூரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை 88 சதவீதத்துக்கும் மேல் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்தன. ஒருசில கல்லூரிகள் முதலிடத்தையும் பிடித்து வந்தன.

இந்த நிலையில் 2013 பல்கலைக்கழகத் தேர்வில் இந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த பிரபல கல்லூரிகள் 80 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.

மேலும் பல்கலைக்கழகத் தேர்வில் எந்தவொரு பொறியியல் கல்லூரியும் 100 சதவீத தேர்ச்சியை எட்டவில்லை.

பி.ஆர்க்.: பி.ஆர்க். படிப்பை 38 கல்லூரிகள் வழங்குகின்றன. 2013 நவம்பர்-டிசம்பர் பல்கலைக்கழகத் தேர்வில் 17 கல்லூரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.

இரண்டு கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன. திருச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரியில் 45 மாணவர்கள் தேர்வெழுதியதில் 8 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்லூரியில் 11 பேர் தேர்வெழுதி 4 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Tuesday, June 3, 2014

எம்.பி.பி.எஸ். படிப்புக்கு 18-ந் தேதி கலந்தாய்வு: மருத்துவ கல்வி இயக்குனர் தகவல்

தமிழ்நாட்டில் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி, கோவை அரசு மருத்துவக்கல்லூரி, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி என்பது உள்பட 19 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு 2 ஆயிரத்து 555 இடங்கள் உள்ளன. பிளஸ்-2 தேர்வில் மாணவ-மாணவிகள் உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும், இடஒதுக்கீடு அடிப்படையிலும் இந்த இடங்களில் சேர்க்கப்படுவார்கள்.

இதற்கான மாணவர்கள் சேர்க்கையை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குனரகம் மேற்கொண்டு வருகிறது. எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பான பி.டி.எஸ். வகுப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்ப படிவங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் வழங்கப்பட்டன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு வந்துசேர நேற்று கடைசி நாள் ஆகும்.

இதுவரை 30 ஆயிரத்து 380 விண்ணப்ப படிவங்கள் விற்பனை ஆகியுள்ளன. அதில், 27 ஆயிரத்து 876 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. மேலும் சில விண்ணப்பங்களும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பித்த மாணவ- மாணவிகள் அனைவருக்கும் தரவரிசை பட்டியல் (ரேங்க்) 12-ந் தேதி வழங்கப்படும். அதைத் தொடர்ந்து தகுதியான மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டு 18-ந் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும். பிளஸ்-2 முடித்த மாணவர்கள் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிந்துவிட்டால், மேற்கண்ட தேதிகளில் திட்டமிட்டப்படி, தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடைபெறும்.

இந்த தகவலை மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி தெரிவித்தார்.

Monday, June 2, 2014

2,172 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 27,876 பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர மொத்தம் 27,876 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் மொத்தம் 29,569 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரித்துள்ளதையடுத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைக்காது என்ற அச்சத்தில் 1,693 பேர் குறைவாக, மொத்தம் 27,876 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர கடும் கட்-ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 14-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடு கடந்த மே 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 30,380 மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றனர். பூர்த்தி செய்த விண்ணப்பம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு வந்து சேர திங்கள்கிழமை (ஜூன் 2) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கடைசி நாளில் 5,254 மாணவர்கள்: இதையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு ஏராளமானோர் திங்கள்கிழமை நேரடியாக வந்து அங்கு வைத்திருந்த பெரிய மரப் பெட்டியில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தனர். கடைசி நாளான திங்கள்கிழமை மட்டும் 5,254 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.
தொடர்ந்து ரேண்டம் எண் வெளியீடு, தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு குறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:
ஜூன் 9-இல் ரேண்டம் எண்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில், ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்தி சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 27,876 மாணவர்களை வரிசைப்படுத்த வரும் 9-ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும்.
முதல் கட்ட கலந்தாய்வு: மாணவர்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் வரும் 12-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கும். எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 27-ஆம் தேதியும் இறுதிக்கட்ட கலந்தாய்வு செப்டம்பர் முதல் வாரத்திலும் தொடங்கும் என்றார் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி.

Sunday, June 1, 2014

ஜிப்மர் நுழைவுத் தேர்வு வரும் 8ம் தேதி நடக்கிறது

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு, வரும் 8ம் தேதி நடக்கிறது. இத்தேர்வினை, 93 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், பொதுப் பிரிவு 50 இடங்கள், ஓ.பி.சி.,28, பழங்குடியினர்11 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. புதுச்சேரி மாணவர்களுக்கு பொதுப் பிரிவு23, ஓ.பி.சி.,11, எஸ்.சி., 6 இடங்கள் என மொத்தம் 40 இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த இடங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடந்த மாதம் 2ம் தேதி வரை ஜிப்மர் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டது. 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் 36 நகரங்களில், வரும் 8ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, ஆன் லைன் மூலம் நடக்கிறது. கடந்த 20ம் தேதி வரை ஹால் டிக்கெட் வழங்கப் பட்டது. இதுவரை ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், நாளை 2 ம் தேதி வரை புதுப்பிக்கப்பட்ட ஹால் டிக்கெட்டினை டவுன்லோடு செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப் பட்டுள்ளது.

பி.இ. விண்ணப்ப செய்திகள்

ரேண்டம் எண் ஜூன் 11ல் வெளியீடு பொறியியல் படிப்புக்கு ஜூன் 27ல் கவுன்சலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொது கவுன்சலிங் ஜூன் 27ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. வருகிற 11ம் தேதி ரேண்டம் எண்ணும், 16ம் தேதி ரேங்க் பட்டியலும் வெளியிடப்படுகிறது. ஜூலை 28ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு கவுன்சலிங் நடக்கிறது. தமிழகத்தில் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்காக அண்ணா பல்கலை மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் உட்பட 570 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 5 ஆயிரத்து 463 இடங்கள் உள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கடந்த மே 3ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டது. இதற்காக, 2 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டது. முதலில் மே 20ம் தேதி விண்ணப்பங்கள் வினியோகிப்பது கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்கள் வேண்டுகோளின்படி மேலும் ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது, மே 27ம் தேதி வரை விண்ணப்ப வினியோகம் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

மொத்தம் பொறியியல் படிப் பில் சேர 2 லட்சத்து 12 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில், 1 லட்சத்து 72 ஆயிரத்து 500 பேர் மட்டுமே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். கடந்த ஆண்டில் 2 லட்சத்து 35,211 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் ஒரு லட்சத்து 90,850 பேர். இவர்களில் ஒரு லட்சத்து 84,930 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக் கது. இது, கடந்த ஆண்டை விட 20 ஆயிரத்து 350 விண்ணப்பங்கள் குறைவு.

இந்நிலையில், வருகிற ஜூன் 23ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலை நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் வருகிற ஜூன் 11ம் தேதியும், ரேங்க் பட்டியல் 16ம் தேதியும் வெளியிடப்படும். விளை யாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்த் தல் வருகிற 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறும். விளை யாட்டு வீரர்களுக்கான ரேங்க் பட்டியல் 17ம் தேதி வெளியிடப்படும்.

இதையடுத்து விளை யாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். 25ம் தேதி மாற்று திறனாளிகளுக்கான கவுன்சலிங், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் ஜூன் 27ல் தொடங்கி ஜூலை 28ம் தேதி வரை ஒரு மாதம் நடக்கிறது. தொழிற்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி முதல் ஜூலை20ம் தேதி வரை நடக்கிறது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் முடிந்ததும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கவுன்சலிங் விவரம்:

ரேண்டம் எண் வெளியீடு ஜூன் 11
ரேங்க் பட்டியல் ஜூன் 16
விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 23, 24
மாற்று திறனாளிகளுக்கு ஜூன் 25
பொதுப் பிரிவினருக்கு ஜூன் 27 முதல் ஜூலை 28 வரை