Friday, December 30, 2016

எம்பிபிஎஸ் முடித்தாலும் தகுதி தேர்வு உண்டு

எம்பிபிஎஸ் படிப்பை முடித்தவர்கள் டாக்டராக பணிபுரிய தகுதி தேர்வு எழுத வகை செய்யும் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது.

நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை; சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

புதுச்சேரியில் நீட் மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர்சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்டோருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Wednesday, December 28, 2016

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு குறித்து மாணவர்களிடம் குழப்பம்

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஆன்-லைன் விண்ணப்பம் குறித்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள சூழ்நிலையில், புதுச்சேரி அரசின் நிலைபாடு குறித்து விரைவாக முடிவெடுக்க வேண்டும்.

எழுதுங்கள் ஜே.இ.இ.,!

நாட்டின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெற எழுத வேண்டிய தேசிய நுழைவுத் தேர்வான, ஜாயின்ட் என்டரன்ஸ் எக்சாமினேஷன் (ஜே.இ.இ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

Wednesday, December 21, 2016

’நீட்’ தேர்வு எதிர்கொள்வது எளிது!

மருத்துவ நுழைவு தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வது குறித்து திருப்பூரில் நடந்த கருத்தரங்கில் விளக்கப்பட்டது.

ஒரே பாடத்திட்டம் வருமா?

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பியுள்ள மனு: 

Friday, December 16, 2016

'NEET' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Friday, December 9, 2016

நீட் தேர்வை தமிழிலும் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் பொதுநுழைவுத் தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Friday, December 2, 2016

ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்

ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு, நேற்று துவங்கியது. இதில், ஆதார் எண் இல்லாதோர் விண்ணப்பிக்க முடியாது.

Tuesday, November 22, 2016

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற

மாணவர்களுக்கு ’நீட்’ மாதிரி வினாத்தாள்!

அகில இந்திய ஒதுக்கீட்டிலும், தமிழக மாணவர்கள் மருத்துவம் படிக்க உதவும் வகையில், ’நீட்’ என்ற மருத்துவ நுழைவு தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் புத்தகம், ’ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

Friday, November 18, 2016

தமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு: மாணவர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் நடக்கும். அதற்காக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்போவதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்

Sunday, November 13, 2016

தமிழக மருத்துவ பல்கலைக்கு இந்திய அளவில் முதலிடம்!

இந்திய அளவில், தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது, என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் துணைவேந்தர் திலகர் பேசினார்.
3வது இடம்

Thursday, November 10, 2016

அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை ’சீட்’ அதிகரிப்பு

கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ - கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது

Wednesday, November 9, 2016

இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கவுன்சில் கெடு.

இன்ஜி., கல்லுாரிகள் பேராசிரியர்கள் விபர பட்டியலை, வரும், 20ம் தேதிக்குள் திருத்தம் செய்ய, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., 'கெடு' விதித்துள்ளது.

Tuesday, November 1, 2016

எம்.டி., சித்தா கலந்தாய்வு 88 இடங்களும் நிரம்பின

 அரசு சித்த மருத்துவ கல்லுாரிகளில்எம்.டி.படிப்புக்கான கலந்தாய்வில், 88 பேருக்கு இடங்கள் கிடைத்தன. 

Friday, October 28, 2016

எம்.பி.பி.எஸ்., காலியிடங்கள்; சுப்ரீம் கோர்ட்டில் மனு

நாடு முழுவதும்எம்.பி.பி.எஸ்.,எனப்படும்மருத்துவ படிப்பு மற்றும் பி.டி.எஸ்.எனப்படும்பல் மருத்துவ படிப்புக்கான காலியிடங்களை நிரப்பக்கோரிசுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

பி.எஸ்.எம்.எஸ்., ’ரேண்டம்’ எண்

அரசு மற்றும் தனியார்இந்திய முறை மருத்துவக் கல்லுாரிகளில்நடப்பாண்டு

எம்.டி., சித்தா 31ல் கலந்தாய்வு

எம்.டி.சித்தாமருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கானஒற்றை சாளர முறை கலந்தாய்வுசென்னைஅரும்பாக்கம்அண்ணா மருத்துவமனை வளாகத்தில் உள்ளதேர்வுக் குழு அலுவலகத்தில், 31ல் நடைபெற உள்ளது. 

Monday, October 24, 2016

சித்தா கலந்தாய்வு நடக்குமா? வரும் 31ல் முடியுது அவகாசம்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு மாதங்களாக தவம் கிடக்கின்றனர்.

Thursday, October 13, 2016

மருத்துவ மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள்

நவீன மருத்துவத்தில், முதுநிலை பட்டப்படிப்பு அல்லது சிறப்பு பட்டய படிப்பு படிக்க விரும்பும் மருத்துவ பட்டதாரிகள், தேசிய தேர்வுகள் வாரியம் (என்.பி.இ.,) நடத்தும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

Wednesday, October 5, 2016

சித்தா கலந்தாய்வு நடத்துவதில் தாமதம்; தவிக்கும் மாணவர்கள்!

மூன்று மாதங்கள் ஆகியும், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்னும் துவக்கப்படாதது, மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tuesday, September 27, 2016

நீட் தரவரிசை பட்டியல் வெளியிட வலியுறுத்தல்

நீட் தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என,புதுச்சேரி மருத்துவ மாணவர்கள் நல வாழ்வு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Saturday, September 24, 2016

நுழைவு தேர்வுகளுக்கு தனி ஆணையம்?

'இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்த, தனி ஆணையம் அமைக்கலாம்' என, மத்திய அரசுக்கு, சி.பி.எஸ்.இ., ஆலோசனை தெரிவித்துஉள்ளது.

Friday, September 23, 2016

எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். கலந்தாய்வு: காலியிடங்கள் - 1,331


தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் வியாழக்கிழமை முடிவில் 1,331 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு கூடுதலாக 1,000 எம்.பி.பி.எஸ்., இடம்

தமிழகத்தில், ஏழு சுய நிதி கல்லுாரிகளில், 1,000 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த முடியாது’!

மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு, மாநில அரசுகள் மட்டுமே கவுன்சிலிங் நடத்த முடியும்; தனியார் கல்லுாரிகள், பல்கலைகள், கவுன்சிலிங் நடத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.

Tuesday, September 20, 2016

எம்.பி.பி.எஸ்., 'அட்மிஷன்:' யு.ஜி.சி., எச்சரிக்கை

அனைத்து நிகர்நிலை மருத்துவ பல்கலைகளும், 'நீட்' மதிப்பெண்படியே, மாணவர்களை சேர்க்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது

ஐஐஎம்-களில் மாணவர் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

இந்திய நிர்வாகயியல் பயிலகங்களில் (ஐஐஎம்) மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களை சமர்ப்பிக்கும்படி அக்கல்வி நிறுவனங்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Monday, September 19, 2016

’நீட்’ தேர்வு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு!

நீட் தேர்வு தொடர்பாகசுப்ரீம் கோர்ட்டில்புதுச்சேரி பெற்றோர்மாணவர் நல சங்கம் தொடர்ந்த வழக்குஇன்று (19ம் தேதி) விசாரணைக்கு வருகிறது.

Wednesday, September 14, 2016

ஜே.இ.இ., தேர்வு முறையில் மாற்றம்!

உயர் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வை, இந்த ஆண்டு, சென்னை ஐ.ஐ.டி., நடத்த உள்ளது.

Tuesday, September 13, 2016

எம்.டி., சித்தா படிப்பு தரவரிசை வெளியீடு

எம்.டி., சித்தா படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Wednesday, September 7, 2016

மருத்துவ மாணவர் சேர்க்கை; சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி!

 சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதல்எம்.சி.ஐ.எனும்இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின் படிசுயநிதி மருத்துவ கல்லுாரிகளில்மாணவர் சேர்க்கை நடத்ததமிழக அரசு அமைத்த கண்காணிப்புக் குழு அனுமதி அளித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., செப்., 21ல் 2ம் கட்ட கலந்தாய்வு!

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, செப்., 21ம் தேதி நடத்தப்படுகிறது.

Friday, September 2, 2016

பாரா மெடிக்கல் படிப்பு கலந்தாய்வு நிறைவு

தமிழகத்தில், பாரா மெடிக்கல் எனப்படும், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு கல்லுாரிகளில், 555 இடங்கள் உள்ளன.

Tuesday, August 30, 2016

சித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா?

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Monday, August 29, 2016

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை புதிய விதிகள்!

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.

’கேட்’ தேர்வு செப். 1ல் பதிவு

ஐ.ஐ.டி.மற்றும் அண்ணா பல்கலையில்,முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கானகேட் தேர்வுக்குவரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.

Wednesday, August 24, 2016

’நீட்’ தேர்வு முடிவை எதிர்த்து வழக்கு

நீட் எனப்படும் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்துசுப்ரீம் கோர்ட்டில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

’நீட்’ தேர்வில் முறைகேடு; 72 பேருக்கு நிரந்தர தடை

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, நீட் நுழைவுத் தேர்வில், காலர் மைக் வைத்திருந்த ஒரு மாணவர் உட்பட, 72 பேருக்கு, மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத, நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.

எம்.டி., சித்தா நாளை கடைசி

தமிழகத்தில்சென்னை மற்றும் நெல்லையில் உள்ளஅரசு சித்த மருத்துவக் கல்லுாரிகளில்எம்.டி.படிப்புக்கு, 94 இடங்கள் உள்ளன. 

Sunday, August 14, 2016

தேர்வு கட்டணம் பாக்கி; பி.இ., ரிசல்ட் நிறுத்தம்!

தேர்வு கட்டண பாக்கியால், ஒன்பது தனியார் இன்ஜி., கல்லுாரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. 

Monday, August 8, 2016

டி.பார்ம்., படிப்புக்கு நாளை கலந்தாய்வு

 டிப்ளமோ இன் பார்மசி, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான கலந்தாய்வு, நாளைநடக்கிறது.

Sunday, August 7, 2016

மருத்துவம் சார் பட்டப்படிப்பு 18,000 பேர் விண்ணப்பம்

பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்டமருத்துவம்சார்ந்த பட்டப் படிப்புகளில் உள்ள, 7,745இடங்களுக்கு, 18 ஆயிரத்து, 324 பேர்விண்ணப்பித்துள்ளனர்

Monday, August 1, 2016

அடுத்த ஆண்டு முதல் ’நீட்’ கட்டாயம்; மசோதா நிறைவேறியது!

அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், ’நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும் மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

Sunday, July 31, 2016

இன்ஜி., கல்லூரிகளில் பிளஸ் 1 வகுப்பு; பேராசிரியர்கள் முடிவு

இன்ஜி., கல்லுாரிகள் இன்று திறக்கப்படும் நிலையில், முதல் ஒரு வாரத்திற்கு பிளஸ் 1 பாடங்களை நடத்த, பேராசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஒரே பாடத்திட்டத்தால் நுழைவுத்தேர்வு எளிதாகும்

புதிய கல்விக்கொள்கை உள்ளீட்டில்நாடு முழுக்க ஒரே பாடத்திட்டத்தை பின்பற்றும் அறிவிப்பால்தேசிய அளவிலான நுழைவுத்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்வதில்சிக்கல் இருக்காது என்ற கருத்து வலுத்துள்ளது.

பி.டெக்., இறுதி கட்ட கவுன்சிலிங்!

 பி.டெக்.இறுதி கட்ட கவுன்சிலிங்இன்று (1ம் தேதி) துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது.

எட்டு மாநில இன்ஜி., கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள்!

எட்டு மாநிலங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 9,060 போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாககண்டறி யப்பட்டு உள்ளது.

Friday, July 29, 2016

மருத்துவ நுழைவுத்தேர்வு கேள்வித்தாள் ’அவுட்’

தெலுங்கானாவில் நடந்த மருத்துவ நுழைவுத்தேர்வில்,முன்கூட்டியேகேள்வித்தாள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானாவில்முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலானதெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. 

சித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை

'சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது; இன்றே கடைசி நாள்' என, இந்திய மருத்தும் மற்றும் ஓமியோபதி இயக்குனரகம் தெளிவுபடுத்தி உள்ளது.

Tuesday, July 26, 2016

இந்திய மருத்துவத்தில் மருந்தாளுனர் படிப்பு!

இந்திய மருத்துவப் படிப்புகளில்,இரண்டரை ஆண்டு கால ஒருங்கிணைந்த மருந்தாளுனர்நர்சிங் தெரபிஸ்ட் படிப்புகளுக்கு,விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது. 

Friday, July 22, 2016

பி.ஆர்க்., ’ரேங்க்’ பட்டியல் வெளியீடு

அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41க்கும் மேற்பட்ட பி.ஆர்க்.கல்லுாரிகளில்ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். 

இன்ஜி., கல்லூரிகளில் 1.01 லட்சம் இடங்கள் காலி

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
அண்ணா பல்கலையின் இன்ஜி.பொது கவுன்சிலிங்நேற்று மாலையுடன் முடிந்தது. இதன்படிஒரு லட்சத்து, 92 ஆயிரத்துஒன்பது அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 84 ஆயிரத்து, 352இடங்கள் நிரம்பியுள்ளன. ஒரு லட்சத்து,ஆயிரத்து, 318 இடங்கள் காலியாக உள்ளன.
கடந்த ஆண்டு
விளையாட்டுப் பிரிவில், 358 இடங்களும்மாற்றுத் திறனாளிகள் பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.கடந்த ஆண்டு, 89 ஆயிரம் இடங்களே காலியாக இருந்தன.

Monday, July 18, 2016

இன்ஜி., கல்லூரிகளில் இன்று முதல் ’அட்மிஷன்’

அண்ணா பல்கலை கல்லுாரிகளில்இன்று முதல் இன்ஜி.மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த, மருத்துவ படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Saturday, July 16, 2016

மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கு கட்- ஆப் மதிப்பெண்கள் வெளியீடு.


நாகப்பட்டினம், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக மீன்வளப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான கட் - ஆப் மதிப்பெண்கள் புதன்கிழமை

Friday, July 15, 2016

பி.டெக்., லேட்ரல் என்ட்ரி சேர்க்கை கவுன்சிலிங்!

பி.டெக்.லேட்ரல் என்ட்ரி கவுன்சிலிங் இன்று நடக்கிறது.

அரசு மருத்துவ கல்லூரிகளில் 969 புதிய பணியிடங்கள்

அரசு மருத்துவ கல்லுாரிகளில், 969 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Thursday, July 14, 2016

ஜூலை இறுதியில் பி.ஆர்க்., கவுன்சிலிங்!

அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில் சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஜூலை இறுதியில் பி.ஆர்க்., கவுன்சிலிங்!

அண்ணா பல்கலை மூலம் பி.ஆர்க்., படிப்பில் சேர, 2,600 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

Wednesday, July 13, 2016

கால்நடை மருத்துவ படிப்பு கவுன்சிலிங் துவக்கம்!

தமிழக கால்நடை மருத்துவக் கல்லுாரியில், இளநிலை படிப்புகளில் சேர, மாணவர்களுக்கான கவுன்சிலிங், இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

Saturday, July 9, 2016

ஜிப்மர் மாணவர் சேர்க்கை விதிகளில் திருத்தம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில்நடப்பு கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்.படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கான விவர குறிப்பேட்டில்புதிய திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

பி.இ., இரண்டாம் ஆண்டு சேர்க்கை; மெக்கானிகலுக்கு ’மவுசு’

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் எலக்ட்ரிகல் பிரிவில் 54 ஆயிரத்து 863 இடங்கள் காலியாக உள்ளன.

Wednesday, June 29, 2016

மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பின்னடைவு ஏன்?

அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங் ஜூன், 27ல் துவங்கியது. இதில், விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவுக்கான அரசு இட ஒதுக்கீடு இடங்களை தவிர, பொதுப்பிரிவுக்கு, 1.83 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கான கவுன்சிலிங் நடந்த இரு நாட்க

சித்தா, ஆயுர்வேதாவுக்கு 541 விண்ணப்பம்

 தமிழகத்தில் சென்னைமதுரைநாகர்கோவிலில் உள்ளஆறு அரசு கல்லூரிகளில் சித்தாஆயுர்வேதாயுனானிநேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. 

பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங் துவக்கம்

பாலிடெக்னிக் டிப்ளமோபி.எஸ்சி.முடித்தவர்களுக்கான,பி.இ., - பி.டெக்.இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கலந்தாய்வு,காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி.கல்லூரியில் இன்று துவங்குகிறது. 
காலை, 9:00 மணிக்கு சிறப்பு பிரிவினருக்கும், 3:00 - 4:30 லெதர்பிரின்டிங் பிரிவினருக்கும்

Monday, June 27, 2016

சித்தா, ஆயுர்வேதம்: நாளை முதல் விண்ணப்பம்

தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் நாளை துவங்குகிறது. ஒரு மாதம் வரை விண்ணப்ப வினியோகம் தொடரும்.

Wednesday, June 22, 2016

ஐ.ஐ.டி., கவுன்சிலிங் நாளை மறுநாள் துவக்கம்

தேசிய உயர்கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி.மற்றும் என்.ஐ.டி.,ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்நாளை மறுநாள் துவங்குகிறது.

தனியார் இன்ஜி., கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள இன்ஜி.கல்லுாரிகளின்அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்குதமிழக அரசின் சார்பில்அண்ணா பல்கலையில் ஒற்றை சாளர முறையில்கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இன்ஜி., தரவரிசைப் பட்டியல் வெளியீடு; 7 பேர் முதலிடம்

பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.

Monday, June 20, 2016

இன்ஜினியரிங் கவுன்சிலிங் ’ரேண்டம்’ எண் வெளியீடு

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான ரேண்டம் எண்ணை அண்ணா பல்கலை., இன்று வெளியிட்டது.

Saturday, June 18, 2016

எம்.பி.பி.எஸ்., தர வரிசையில் முதலிடம் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வில்மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஆர்த்தி,எம்.பி.பி.எஸ்.தர வரிசை பட்டியலில், 10ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மாநில ரேங்க் பெறாத மாணவர்தர வரிசையில்,இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்கள் சாதனை!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான தர வரிசை பட்டியலில், கேரளாவில் படித்த மாணவி ஆதித்யா மகேஷ், முதலிடம் பெற்றுள்ளார். மூன்று பேர் மட்டுமே, 200க்கு, 200, கட்ஆப் பெற்றுள்ளனர்.

Monday, June 13, 2016

சித்தா, ஆயுர்வேத படிப்பு; விண்ணப்பம் எப்போது?

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு ஜூன், 20ம் தேதி துவங்குகிறது.

ஜே.இ.இ., தேர்வில் பின்தங்கும் தமிழகம்!

ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன பொது நுழைவுத் தேர்வில், தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளதால், அரசு பள்ளிகளில் இதற்கான இலவச பயிற்சி அவசியம் என்ற கருத்து எழுந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., படிப்பு இன்று ’ரேண்டம்’ எண் வெளியீடு

தமிழகத்தில்எம்.பி.பி.எஸ்.பி.டி.எஸ்.படிப்புகளுக்கு விண்ணப்பித்தோருக்கானரேண்டம் எண் இன்று வெளியிடப்படுகிறது.

Thursday, June 9, 2016

இ.எஸ்.ஐ., கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி

இ.எஸ்.ஐ.மருத்துவக் கல்லுாரியில்நடப்பு ஆண்டில், 100எம்.பி.பி.எஸ்.இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தஇந்திய மருத்துவக் கவுன்சிலானஎம்.சி.ஐ.அனுமதி அளித்துள்ளது. இதனால்,அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆகவும்;எம்.பி.பி.எஸ்.இடங்களின் எண்ணிக்கை, 2,760 ஆகவும் உயர்ந்துள்ளன.

Tuesday, June 7, 2016

எம்.பி.பி.எஸ்., சேர 25,000 பேர் விண்ணப்பம்

தமிழகத்தில்மாநில ஒதுக்கீட்டில் உள்ள, 2,853 எம்.பி.பி.எஸ்.,இடங்களுக்கு, 25 ஆயிரத்து, 470 பேர் விண்ணப்பித்துள்ளனர். தர வரிசை பட்டியல், 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

தொழில்நுட்ப பிரச்னையால் 50 ஆயிரம் பேர் தவிப்பு!இன்ஜி., இடங்கள் நிரம்புமா? கல்லூரிகள் அச்சம்.


அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்காக, 1.84 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ள நிலையில், 1.33 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பங்கள் அளித்துள்ளதால்,

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி

.கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில்,நடப்பு ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

Monday, June 6, 2016

கல்லூரி பெயரை விட கவுன்சிலிங் குறியீடு முக்கியம்!

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கல்லுாரி பெயர்களை விட,கல்லுாரிகளின் குறியீட்டு எண்ணை தெரிந்து கொள்ள வேண்டும்என,கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறினார். அண்ணா பல்கலையின் இன்ஜி.கவுன்சிலிங்கில் பங்கேற்பது குறித்தவழிகாட்டும் நிகழ்ச்சியானதினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சிநேற்று சென்னை பெரம்பூரில் நடந்தது.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்; ஜூன் 6 கடைசி நாள்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.படிப்புகளுக்கான விண்ணப்பம் பெற இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 550 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர். 

இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறை தீர்க்க 20 பேர் குழு

அண்ணா பல்கலையில்இன்ஜி.,கவுன்சிலிங் சந்தேகங்களை தீர்க்ககுறைதீர் குழுவில், 20 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

Friday, June 3, 2016

பி.இ., - பி.டெக்., விண்ணப்பம் அனுப்ப ஜூன் 4ம் தேதி கடைசி நாள்

அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 550 இன்ஜி.கல்லுாரிகளில்,பி.இ., - பி.டெக்.படிப்புகளில் சேரதமிழக அரசு சார்பில்ஒற்றை சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

இன்ஜி., கவுன்சிலிங் விளக்கம் அளிக்க யாரும் இல்லை

இன்ஜி., கவுன்சிலிங் தொடர்பாக, அண்ணா பல்கலை அறிவித்த தொலைபேசி எண்கள், ஒரு மாதமாகவே செயல்படாததால், விண்ணப்பதாரர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மாணவர்களுக்கு பயிற்சி; விண்ணப்பம் வரவேற்பு

அண்ணா பல்கலை மாணவர்களுக்குஇன்ஜினியரிங் படிப்பில் பயிற்சி தர விரும்பும் தொழில் நிறுவனங்கள்ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனஅண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

Tuesday, May 31, 2016

பி.இ., பி.டெக்., படிக்க 1.84 லட்சம் பேர் விண்ணப்பம்

பி.இ.பி.டெக்.படிப்பில் சேர்வதற்கு,ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. 

Monday, May 30, 2016

MBBS ADMISSION 2016 | எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு 26.5.2016 முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது

MBBS ADMISSION 2016 | எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு 26.5.2016 முதல் ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யப்படுகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Friday, May 27, 2016

இரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை விண்ணப்பிக்க அவகாசம்


நாடு முழுவதும் மாணவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' இரண்டாம் கட்ட தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு விண்ணப்பம் வழங்குவதில் தாமதம்

மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் நேற்று மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் மூன்று மணி நேரம் தாமதமாக வழங்கப்பட்டதால் பெற்றோர்மாணவர்கள் அவதியுற்றனர்.

நுழைவுத்தேர்வு அவசர சட்டம்; தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது. 

Wednesday, May 25, 2016

மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம்!

மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்களை இன்று (மே 25) முதல் ஜூன் 6ம் தேதி மாலை வரை ஆன்லைனில் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவுத்தேர்வு ரத்தால் மாணவர்கள் மகிழ்ச்சி!

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார்.

Sunday, May 22, 2016

பொது நுழைவுத்தேர்வு அவசியமா? நிபுணர்களுடன் ஜனாதிபதி ஆலோசனை

இந்தாண்டு, ஸ்டேட் போர்டு எனப்படும், மாநிலக் கல்வி முறையில் படித்து, பிளஸ் 2 தேர்வானவர்களுக்கு, மருத்துவ கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வகை செய்யும், மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பாக, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சட்ட நிபுணர்களின் கருத்தை கேட்டுள்ளார்.

Friday, May 20, 2016

பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை ’ஆன்லைனில்’ விண்ணப்பம்!

காரைக்குடி: பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்!

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ஒத்திவைக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரவிருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.

மருத்துவ நுழைவுத் தேர்வு; ரத்துராமச்சந்திரா பல்கலை தகவல்

 மே 22ம் தேதி நடத்த இருந்த மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுஒத்தி வைக்கப்பட்டு உள்ளது எனசென்னை ராமச்சந்திரா பல்கலை அறிவித்துள்ளது.

இன்ஜி., ’கட் ஆப்’ மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டஇன்ஜி.கல்லுாரிகளின் கடந்த ஆண்டுகட்ஆப் மதிப்பெண் வெளியிடப்பட்டு உள்ளது. 

பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்?

: தேசிய அளவிலான நுழைவுத் தேர்வா? மாநில அளவிலான நுழைவுத் தேர்வா? என, கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த போராட்டத்தில் இருந்த, மருத்துவக் கல்லுாரியில் சேரத் துடிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Saturday, May 14, 2016

முதுநிலை மருத்துவம்: 27 இடங்கள் காலி

தமிழகத்தில்எம்.எஸ்.,- எம்.டி., - எம்.டி.எஸ்.,படிப்புகளுக்கான கலந்தாய்வுஏப்ரலில் நடந்தது. 

Wednesday, May 11, 2016

மருத்துவ நுழைவு தேர்வு; தனியார் பள்ளி கூட்டமைப்பு எதிர்ப்பு

அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வால்தமிழ் வழி கல்வி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்எனவேஅதை அனுமதிக்க கூடாது எனபள்ளி கல்வி துறை செயலர் சபீதாவிடம்,தமிழக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

மருத்துவ நுழைவு தேர்வுக்கு தடை விதிக்கும் சட்டம் தேவை

மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்புக்கு தடை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு உடனடியாக, தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என, ராஜ்யசபாவில், தி.மு.க., தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சட்டசபை தேர்தலை

Tuesday, May 10, 2016

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு


பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமத மாக வெளியாவதாலும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாவதாலும்

Friday, May 6, 2016

தமிழகத்தில் கவுன்சிலிங் முறையில் மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் 2016-2017ம் ஆண்டிற்கான மருத்துவப் படிப்புக்கு மாணவர் சேர்க்கையை கலந்தாய்வு மூலம் நடத்த அனுமதிக்கலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் ஆக்கப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மருத்துவ நுழைவு தேர்வு; மாநில அரசுகளை அனுமதிக்கலாம்

மருத்துவ பொது நுழைவு தேர்வு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது .

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு நுழைவுதேர்வு கட்டாயம்; சுப்ரீம் கோர்ட்

 தனியார் மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Thursday, May 5, 2016

ருத்துவ நுழைவு தேர்வில் இருந்து விலக்களிக்க கோரிக்கை!

மருத்துவ படிப்பிற்கான பொது நுழைவு தேர்வில் இருந்து, தமிழக மாணவ, மாணவியருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Monday, May 2, 2016

மருத்துவ நுழைவு தேர்வை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வை ரத்து செய்யக் கோரிபெற்றோர்கள்மாணவர் சங்க நிர்வாகிகள் மரப்பாலத்தில் மறியல் செய்ய முன்றனர்.

திட்டமிட்டபடி நடந்தது பொது மருத்துவ நுழைவு தேர்வு!

திட்டமிட்டபடி, நேற்று நடந்த, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வில், தமிழகத்தில், 26 ஆயிரம் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்

தமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர்.

மாணவர்கள் பதற்றம்; பெற்றோர் அதிகாரிகள் வாக்குவாதம் மருத்துவ பொது நுழைவுத் தேர்வில் குளறுபடி


இந்த ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வில் அதிகாரிகள் பலத்த கெடுபிடிகளுடன் நடந்து கொண்டதால், தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் பதற்றம் அடைந்தனர்.

Thursday, April 28, 2016

ஜே.இ.இ., ’ரிசல்ட்’ வெளியீடு; குறைந்தபட்ச ’கட் ஆப்’ 100

உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற வற்றில் பி.இ., - பி.டெக்., படிப்பதற்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வு முடிவு, நேற்று வெளியானது.

ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ படிப்புகள்!

ஜிப்மர் பி.எஸ்சி.நர்சிங் படிப்புகளுக்கு ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு!

புதுடில்லி: மருத்துவ படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வை இந்தாண்டே நடத்த, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.

கட்டாய நுழைவுத் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்!

மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என, சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளதால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை, நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில்

Thursday, April 21, 2016

மருத்துவ படிப்புக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்.

மருத்துவ படிப்புகளுக்கு, 'ஆன்லைன்' விண்ணப்பமுறை, அமலுக்கு வருகிறது. குழப்பங்களை தடுக்க, வழக்கமான காகித விண்ணப்ப முறையையும் தொடர, மருத்துவ கல்விஇயக்ககம் திட்டமிட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாக பதிவு: அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைப்பு.

பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Monday, April 18, 2016

இரண்டு நாட்களில் 40 ஆயிரம் பேர் இன்ஜி., படிக்க விண்ணப்பம்.

பொறியியல் படிப்புகளில் சேர, இரண்டு நாட்களில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அண்ணா பல்கலையின் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

நம் மாணவர்கள் மத்தியில், எப்போதுமே இந்த சதவீதம்தான் அதிகம் எனலாம். ஆனாலும், முதல் ரேங்க், கோல்ட் மெடலிஸ்ட் இவர்களையெல்லாம் விட, 60% முதல் 80% வரை மதிப்பெண்கள் வாங்கியவர்கள், பிற்காலத்தில், வாழ்வில் வெற்றி

Wednesday, April 13, 2016

மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தஉச்சநீதிமன்றம் அனுமதி.

இளநிலை, முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு அனைத்துக் கல்லூரிகளிலும், தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வு நடத்த ...2013 தீர்ப்பை மறுஆய்வு செய்கிறது சுப்ரீம் கோர்ட்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது

Sunday, April 10, 2016

JEE தேர்வில் புதிய முறை அறிமுகம்:பள்ளிக்கல்விக்கு மீண்டும் முக்கியத்துவம்.

அடுத்த கல்வியாண்டு முதல், பிளஸ் 2வில், 75 சதவீத மதிப்பெண் பெறுவோர் மட்டுமே, ஐ.ஐ.டி.,க்களில் சேர்வதற்கான, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான ஜே.இ.இ., தேர்வை எழுத முடியும்.

Saturday, April 9, 2016

'சென்டம்' குறைவதால் இன்ஜி.,க்கு கடும் போட்டி?தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு.


பிளஸ் 2 கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை மற்றும் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் எண்ணிக்கை சரியும் என்பதால், தொழிற்கல்விமாணவர்கள், இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், முன்னணி பெற வாய்ப்புள்ளது.

MBBS / BDS படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இருக்காது: தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு.


கிராமப்புற மாணவர்கள் பாதிக் கப்படுவார்கள் என்பதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு ஆன்லைன் மூலம் விண் ணப்பிக்கும் முறை கொண்டுவரப் படாது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Thursday, April 7, 2016

முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்

முதுநிலை மருத்துவம் 360 பேருக்கும் இடம்

சென்னை: பொது பிரிவில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில், 360 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

Tuesday, April 5, 2016

தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் அண்ணா பல்கலைக்கு இடமே இல்லை

இந்தியாவில் உள்ள பல்கலைகளின் தரவரிசை பட்டியலை முதல்முறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது

Sunday, April 3, 2016

இன்ஜினியரிங் விண்ணப்பத்துக்கு டி.டி., தேவையா?

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்துக்குடி.டி.எடுக்க வேண்டும் என்பதால்மாணவர்களின் பணம், 1.5 கோடி ரூபாய் வீணாகும் எனபெற்றோர் தெரிவித்துள்ளனர். 
எனவேநேரடியாக வங்கியில் கட்டண தொகையை செலுத்தும் முறை

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாமா?

எம்.பி.பி.எஸ்., படிப்பதற்காக ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம்! இதற்கு முக்கிய காரணம், இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் காணப்படும் மருத்துவப் படிப்பு மீதான மோகம்!

முதுநிலை மருத்துவ படிப்பு; கலந்தாய்வு நாளை(04-03-2016) துவக்கம்

தமிழகத்தில்எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்டமுதுநிலை மருத்துவ படிப்புகளுக்குமாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,203இடங்கள் உள்ளன
இதற்கான தகுதித்தேர்வு முடிந்து, 7,580 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்மாணவர் சேர்க்கைகலந்தாய்வுசென்னைஓமந்துாரார் தோட்டத்தில் உள்ளஅரசு பல்நோக்கு மருத்துவமனை யில்நாளைதுவங்குகிறது
வரும், 12ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்மேலும் விவரங்களுக்கு, www.tn.health.org என்றஇணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் எனமருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது

முதுநிலை பல்மருத்துவ பட்டம் மற்றும் பட்டயப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு ஏப்.4-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கர்நாடக தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கர்நாடகத்தில் உள்ள முதுநிலை பல்மருத்துவ பட்டம் மற்றும் பட்டய பயிற்சியில் சேர்ந்து படிக்க ஏற்கெனவே அறிவித்தப்படி இரண்டாவது கலந்தாய்வு முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களுக்கு பொதுநுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது

Wednesday, March 30, 2016

இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கை,இனி 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது

.இன்ஜினியரிங், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையில், காகித வழியில் விண்ணப்பிக்கும் நடைமுறைமுடிவுக்கு வருகிறது. இனி, 'ஆன்லைன்' வழியாக, விண்ணப்பிக்கும் நவீன நடைமுறை செயல்பாட்டுக்கு வருகிறது.

இன்ஜினியரிங்-'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிப்பது எப்படி?


* ஏப்., 14ல், இன்ஜினியரிங் படிப்பு மாண வர் சேர்க்கைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Tuesday, March 29, 2016

இன்ஜி., விண்ணப்பம் எப்போது?ஒருங்கிணைப்பு குழு இன்று ஆலோசனை.

இன்ஜி., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் எப்போது என்பது குறித்து, இன்று நடக்கும் இன்ஜி., மாணவர் சேர்க்கை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Friday, March 25, 2016

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி., நடத்திய, முதுகலை பட்டப்படிப்புக்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது

.பி.இ., - பி.டெக்., - பி.எஸ்சி., போன்ற அறிவியல் தொடர்பான, இளநிலை முடித்தவர்கள், ஐ.ஐ.டி., நிறுவனங்களில், எம்.எஸ்சி., முதுகலை மற்றும் பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வான, 'ஜாம்' தேர்வை எழுத வேண்டும்

Thursday, March 24, 2016

சென்னை ஐ.ஐ.டி., 'ஜாம் ரிசல்ட்' வெளியீடு.

இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான, சென்னை ஐ.ஐ.டி.,நடத்திய, முதுகலை பட்டப்படிப்புக்கான, 'ஜாம்' நுழைவுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.

Friday, March 18, 2016

ஐஐடி கட்டணம் 3 மடங்கு உயர்வு!

அனைத்து ஐஐடி.,க்களிலும் ஆண்டு கட்டணத்தை ரூ.90,000லிருந்து ரூ.லட்சமாக உயர்த்த ஐஐடி குழு தீர்மானித்துள்ளது. 

Thursday, March 17, 2016

எஸ்.ஆர்.எம். பொறியியல் நுழைவுத் தேர்வு: மார்ச் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வுக்கு (எஸ்.ஆர்.எம்.ஜே.இ.இ.இ.) விண்ணப்பிக்கும் தேதி மார்ச் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Wednesday, March 9, 2016

மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்: முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்


மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த நினைக்கும் திட்டத்தை கைவிட வேண்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

Tuesday, March 1, 2016

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள்

ஜிப்மர் நுழைவு தேர்வு விண்ணப்பம்: 7ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவு
ஜிப்மர் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் வரும், 7ம் தேதி முதல், ஆன்லைனில் வினியோகிக்கப்பட உள்ளது.

Thursday, February 25, 2016

போலி மருத்துவ கல்லூரி; நடவடிக்கை எடுக்க சி.ஐ.சி., உத்தரவு

போலி டாக்டர்கள், போலி மருத்துவ சான்றிதழ்கள் விவகாரம் பற்றி மத்திய தகவல் கமிஷன் விசாரித்து வருகிறது.

Saturday, February 20, 2016

முதுநிலை மருத்துவம் தரவரிசை வெளியீடு

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில்மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,163 முதுநிலை மருத்துவப் படிப்புகள், 40 முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன.

Tuesday, February 16, 2016

மருத்துவ நுழைவு தேர்வு; 96 சதவீதம் பேர் ஆர்வம்

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில்மாநில ஒதுக்கீட்டின் கீழ், 1,163 முதுநிலை மருத்துவப் படிப்புகள், 40 முதுநிலை பல் மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. 

Monday, February 15, 2016

முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு: அனுமதிச் சீட்டை பதிவிறக்கலாம்

முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டை மாணவர்கள் வியாழக்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தொலைநிலை கல்வி இன்ஜினியர் படிப்புக்கு தடை!

இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு, திறந்த நிலை மற்றும் தொலைநிலை கல்வியில் வகுப்புகள் நடத்த, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., தடை விதித்துள்ளது.

Friday, February 12, 2016

70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் முடிவு

மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.

Thursday, February 11, 2016

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் பணியிடங்களை நிரப்ப 12-இல் கலந்தாய்வு

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட 4 பணியிடங்களை நிரப்புவதற்கான இடமாறுதல் கலந்தாய்வு சென்னையில் பிப்ரவரி 12-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.

Tuesday, February 9, 2016

மருத்துவ படிப்பில் சேர பொது நுழைவு தேர்வு?

புதுடில்லி:தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

Monday, February 8, 2016

மருத்துவ உயர் படிப்புகள்; பிப்., 14ல் நுழைவு தேர்வு

மருத்துவ உயர் படிப்புகளுக்கான, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, பிப்., 14ல் நடக்கிறது.

Saturday, January 30, 2016

மருத்துவ படிப்பு; 12 ஆயிரம் கோடி அளவிற்கு கறுப்பு பணம்

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளி்ல் .சேருவதற்கு கோடிக்கணக்கான அளவில் கறுப்பு பணம் புழங்கி வருவதாக கூறப்படுகிறது.

Sunday, January 24, 2016

பி.இ. சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் எப்போது? அண்ணா பல்கலை.யில் ஆலோசனை

பி.இ. மாணவர் சேர்க்கை விண்ணப்ப விநியோகம் எப்போது என்பது குறித்து அண்ணா பல்கலை.யில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இன்ஜி., படிக்க புதிய திறன் தேர்வு;மத்திய அரசு அடுத்த அதிரடி

தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.

Wednesday, January 20, 2016

பொறியியல் படிப்புகளில், இளநிலைப் பட்டப் பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க ஆப்லைன் முறையா - ஆன்லைன் முறையா?

இந்தாண்டிற்கான ஜே.இ.இ., மெயின் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடக்கிறது. அத்தேர்வின் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் உள்ள சாதக - பாதகங்களை தெளிவாக அறிந்தால், நமக்கானதை தேர்வு செய்ய வசதியாக இருக்கும்.

Thursday, January 14, 2016

இன்ஜி., மாணவர் சேர்க்கை பிப்ரவரியில் ஆலோசனை

தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 535க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு, சென்னை, அண்ணா பல்கலையில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மொத்தம், 2.15 லட்சம் பி.இ., - பி.டெக்., படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

அதிரடி மாறுதல்களுடன் வருகிறது ‘சென்டாக் கவுன்சிலிங்’

சென்டாக் கவுன்சிலிங்கை வெளிப்படையாக நடத்த, இந்தாண்டு பல்வேறு அதிரடி முடிவுகளை அரசு எடுத்துள்ளது. அத்துடன், மருத்துவம், பொறியியல் படிப்புகளோடு, சட்டப் படிப்பிற்கு கவுன்சிலிங் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.