Tuesday, May 26, 2015

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு: 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்


பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின்மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 19 கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம் ஒற்றை இலக்கத்திலேயே இருப்பது தெரியவந்துள்ளது. மொத்தம் 525 இணைப்புப் பொறியியல் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் w‌w‌w.a‌n‌na‌u‌n‌i‌v.‌e‌d‌u இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மேற்கொண்டுள்ளது.2014-ஆம் ஆண்டு ஏப்ரல்- மே, நவம்பர்- டிசம்பர் ஆகிய இரு பருவத் தேர்வுகளின் (செமஸ்டர்) மாணவர் தேர்ச்சி விகிதங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
அதிர்ச்சி அளிக்கும் விவரம்:
இந்தத் தேர்ச்சி விகிதப் பட்டியலின் அடிப்படையில், சில கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர் தேர்ச்சி விகிதம் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தஞ்சையிலுள்ள ஒரு தனியார் கல்லூரி இரு பருவத் தேர்வுகளிலும் மிகக் குறைந்ததேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. ஏப்ரல்- மே தேர்வில் 4.58 சதவீத தேர்ச்சியையும், நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வில் 3.02 சதவீத தேர்ச்சியையும் இந்தக் கல்லூரி பெற்றிருக்கிறது. இந்தக் கல்லூரியில் நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வை எழுதிய 563 பேரில் 17 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தைச் சேர்ந்த கல்லூரியில் 231 பேர் தேர்வெழுதி14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுபோல, மொத்தம் 19 கல்லூரிகளில் ஒற்றை இலக்க தேர்ச்சி விகிதம் உள்ளது. கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி 96.95 மாணவர் தேர்ச்சி விகிதத்துடன் 2014 ஏப்ரல்- மே பருவத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ளது. கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 98.33 தேர்ச்சி விகிதத்துடன் நவம்பர்- டிசம்பர் பருவத் தேர்வில் முதலிடம் பிடித்திருக்கிறது.இந்தப் பட்டியலின்படி 5 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே 90 சதவீத தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருக்கின்றன.
20 கல்லூரிகள் 80 சதவீதத்துக்கு மேலும், 37 கல்லூரிகள் 70 சதவீதத்துக்கு மேலும், 74 கல்லூரிகள் 60 சதவீதத்துக்கு மேலும், 85 கல்லூரிகள் 50 சதவீதத்துக்கு மேலும் மாணவர் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளன.மீதமுள்ள 309 பொறியியல் கல்லூரிகளிலும் 50 சதவீதத்துக்கும் குறைவான மாணவர் தேர்ச்சி விகிதமே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர் தேர்ச்சி விகிதப் பட்டியல் பொறியியல் கல்லூரிகளின் கல்வித் தரம் குறித்து அறிந்துகொள்ள மாணவர்களுக்கு ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்று பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள்


பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க 29-ம் தேதி கடைசி நாள் ஆகும்.இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப் படிவங்கள் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகள் ஆர்வத்தோடு விண்ணப்பங்களை வாங்கிச் செல்கின்றனர்.
நேற்றைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 13 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை 65 ஆயிரம் பேர் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த மாணவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்ற விவரத்தை இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015) தெரிந்துகொள்ளலாம்.

Tuesday, May 19, 2015

பி.இ. சேர்க்கை: 10 ஆயிரம் பேர் விண்ணப்பம் சமர்ப்பிப்பு:இதுவரை 1.75 லட்சம் விநியோகம்


பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், திங்கள்கிழமை வரை 10 ஆயிரம் பேர் மட்டுமே பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே நேரம், விண்ணப்ப விநியோகம் 1.75 லட்சத்தை எட்டியுள்ளது.
தமிழகத்தில் 570-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1.80 லட்சத்துக்கும் அதிகமான பி.இ. இடங்களில், 2015-16-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 28-ஆம் தேதி தொடங்க உள்ளது.முதல் நாளில் விளையாட்டுப் பிரிவினருக்கும், ஜூன் 29-இல் மாற்றுத் திறனாளிகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.பொதுப் பிரிவு கலந்தாய்வை ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி ஜூலை 31-ஆம் தேதியில் முடிக்க பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதி தொடங்கியது.
பிற மையங்களில் மே 27-ஆம் தேதி வரையிலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக மையங்களில் மட்டும் மே 29-ஆம் தேதி வரையிலும் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 60 மையங்களில் திங்கள்கிழமை மாலை 5 மணி வரை 1 லட்சத்து 74 ஆயிரத்து 714 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும்.அதன்படி, விண்ணப்பிக்க இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 10 ஆயிரம் பேர் சமர்ப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.விண்ணப்பங்களை www.annauniv.edu என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்தும், பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

Friday, May 15, 2015

பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்


பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், 1.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 8 லட்சத்திற்கு மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
இதில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய முக்கிய பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்தது.
எனவே எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்பில் சேருவதற்கு தாங்கள் பெற்றுள்ள கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்ததால், விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில், பள்ளிகளில் இணையம் மூலம் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பணி மே 8-ஆம் தேதி தொடங்கி மே 14-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் சுமார் 1.09 லட்சம் மாணவர்கள் விடைத்தாள் நகல் (scan copy) கோரியும், மறுகூட்டல் செய்யக் கோரி 1880 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 87 ஆயிரம் பேர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

Wednesday, May 13, 2015

பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பம்


டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்தவர்கள், பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம் இன்று துவங்குகிறது. தமிழகம் முழுவதும் 34 மையங்களில் (அரசுப் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள்) இன்று முதல் ஜூன் 9 வரை வழங்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வழங்கப்படும். ஜூன் 9 மாலைக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.டிப்ளமோ மாணவர்களை பொறுத்த வரை, கடந்த ஆண்டுகளில் கடைசி இரண்டு பருவத் தேர்வுஅடிப்படையில், 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு, ஆறு பருவ தேர்வு முடிவு அடிப்படையில் 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்பட்டு அழைக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம் ரூ.300; ஆதிதிராவிடர்களுக்கு இலவசம். முதற்கட்டமாக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 'செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, காரைக்குடி' என்ற முகவரிக்கு தபால் அல்லது நேரில் அனுப்பலாம். ''பி.எஸ்சி., யில் கணிதம் மற்றும் கணிதத்தை துணைப் பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே இரண்டாம் ஆண்டில் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த ஆண்டு பிளஸ் 2வில் கணித பாடம் எடுத்து, பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல் படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்'' என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.

ஒரே பெயரில் 460 கல்லூரிகள்: பட்டியல் வெளியிட்டது அண்ணாபல்கலை


மாணவர்களைக் குழப்பும் விதமாக, ஒரே பெயர் கொண்டுள்ள, 460 கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டு உள்ளது. கவுன்சிலிங்கின் போது, கல்லூரிகளின் பெயரை விட, கல்லூரிக் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியர், பொறியியல் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தனியார் சுயநிதிப் பல்கலைகள் தவிர, 570 பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பின் கீழ் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் சேர, அண்ணா பல்கலை மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையில், ஜூன் 28ம் தேதிமுதல், கவுன்சிலிங் துவங்குகிறது; ஜூலை, 1ம் தேதி பொது கவுன்சிலிங் நடத்தப்படும். இந்நிலையில், உயர்தர வரிசையிலுள்ள கல்லூரிகளைப் போன்று, பல கல்லூரிகளுக்கு பெயர் வைத்துள்ளனர்.
இதனால், கவுன்சிலிங்கின் போது மாணவர்கள்,தரமற்ற அல்லது ஒரே பெயரிலுள்ள, வேறு கல்லூரியை குழப்பத்தில் தேர்வு செய்து, சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். எனவே, ஒரே பெயரிலான கல்லூரிகளின் பட்டியலை,அண்ணா பல்கலை தனியாக வெளியிட்டு உள்ளது; இதில், 460 கல்லூரிகள் இடம் பிடித்துள்ளன. பெரும்பாலான கல்லூரிகளின் பெயர்கள், ஒரே மாதிரியாக இருக்கின்றன; அதனால், கல்லூரிகளின் கவுன்சிலிங் எண்ணை தெரிந்து கொள்ளுமாறு, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்ப வினியோகம் துவக்கம்: ஜூன் 19ல் முதற்கட்ட கலந்தாய்வு?'கட் - ஆப்' குறைகிறது


தமிழகம் முழுவதும், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. ''ஜூன், 19ம் தேதி, முதற்கட்ட கலந்தாய்வு நடக்க வாய்ப்புள்ளது,'' என, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகள், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 100 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீதம் இடங்கள் போக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 85 பி.டி.எஸ்., இடங்கள் மாநிலத்திற்கு கிடைக்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலிங் அனுமதிக்கு ஏற்ப, சுயநிதி கல்லூரிகளில் இருந்தும் இடங்கள் கிடைக்கும். இந்த இடங்களுக்கு, 'கட் - ஆப்' மதிப்பெண் அடிப்படையில், கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது.
சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில், விண்ணப்ப வினியோகத்தை, மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி துவக்கி வைத்து கூறியதாவது:
அரசின், 19 மருத்துவக் கல்லூரிகள், சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், விண்ணப்பங்கள், 28ம் தேதி வரை கிடைக்கும். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், 29க்குள் கிடைக்க வேண்டும். தர வரிசைப் பட்டியலை, ஜூன், 12ம் தேதி வெளியிடவும்; முதற்கட்ட கலந்தாய்வை, ஜூன், 19ம் தேதி துவக்கவும் திட்டமிட்டு உள்ளோம். மறு கூட்டல் முடிவுகள் கிடைக்க தாமதமானால், இதில் மாற்றம் வரும். கடந்த ஆண்டு, வினியோகிக்கப்பட்ட, 30,380 விண்ணப்பங்களில், 28,053 விண்ணப்பங்கள் வந்து சேர்ந்தன. இதில், 27,907 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரிக்கு, சில நாட்களில் அனுமதி கிடைக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.முதல் நாளில், 9,238 விண்ணப்பங்களை, மாணவ, மாணவியர் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், 1,406 விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இம்மாதம், 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் கிடைக்கும்.
'கட் - ஆப்' குறைகிறது:
பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், எம்.பி.பி.எஸ்., 'கட் - ஆப்' மதிப்பெண்ணை நிர்ணயிக்கும், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில், கடந்த ஆண்டைவிட, 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால், 'கட் - ஆப்' மதிப்பெண், கடந்த ஆண்டை விட குறைகிறது

Sunday, May 10, 2015

என்ஜினீயரிங் கல்லூரிகளின் கடந்த ஆண்டு கட்–ஆப் மார்க் விவரம் வெளியீடு


என்ஜினீயரிங் கல்லூரிகளின் கடந்த ஆண்டு கட்–ஆப் மார்க் விவரம்: அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு
2015–16–ம் ஆண்டிற்கு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூலை 1–ந்தே
தி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் நலன் கருதி கடந்த ஆண்டு பொறியியல் கட்–ஆப் மார்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிகளிலும் பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்ச கட்–ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வசதியாக முழு விவரங்களைwww.tnea.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். கட்–ஆப் மார்க் குறைவதால் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வாய்ப்பு!!


பிளஸ்–2 தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வருடம் பிளஸ்–2 உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் 200–க்கும் 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகும்.
இதனால் மருத்துவ கட்–ஆப் மார்க் 0.5 அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் 200–க்கு 200 கட்–ஆப் மதிப்பெண் 132 மாணவர்கள் எடுத்து இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு 200–க்கு 200 மதிப்பெண் 5 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.
மேலும் 200–க்கு 199.75 கட்–ஆப் மதிப்பெண்ணில் தொடங்கி 199 வரை கட்–ஆப் மதிப்பெண் போட்டி குறைவாக இருக்கும்.
200–க்கு 199–க்கு கீழே 198.75 முதல் 197.75 வரை வழக்கமான கட்–ஆப் மதிப்பெண் பெற்றவர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்படும்.
இந்த ஆண்டு 197.5 கட்–ஆப் மதிப்பெண் எடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடியாமல் போன 1266 மாணவர்கள் இந்த வருடம் சேர முயற்சி செய்கின்றனர். மருத்துவ கட்–ஆப் மார்க் குறைவதால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
இவர்களில் பலர் என்ஜினீயரிங், பல் மருத்துவம் உள்ளிட்ட பல படிப்புகளை தேர்வு செய்து ஒரு ஆண்டு படித்து வந்த போதிலும் ஒரு மார்க் 0.5 கட்–ஆப்பில் அரசு மருத்துவ கல்லூரி வாய்ப்பை இழந்தவர்கள்.
அதனால் பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்தே தற்போது பிளஸ்–2 முடித்துள்ள மாணவர்களுக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்குமா? என்பதை உறுதி செய்யும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே 197.50 கட்–ஆப் மார்க் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது பழைய மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து அமைந்துள்ளது.
400 பழைய மாணவர்கள் இந்த வருடம் மருத்துவ படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பொறியியல் படிப்பை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு 9710 மாணவர்கள் கணிதத்தில் 200–க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும் 200–க்கு 198 மதிப்பெண் 15 ஆயிரம் மாணவர்கள் எடுத்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கு உரிய இயற்பியல், வேதியியல் பாடங்களில் மதிப்பெண்ணை, பிரதான கணிதப் பாடத்தில் மாணவர்கள் எடுத்துள்ள அதிக மார்க் சமன் செய்து விட்டது.
இதனால் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பி.இ, கட்–ஆப் 200–க்கு 0.25 மதிப்பெண் அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Saturday, May 9, 2015

பி.இ., பி.டெக்., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு புதிய விதிமுறைகள்


பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு, கடந்த ஆண்டுகளில், டிப்ளமோ படிப்பின் ஐந்து மற்றும் ஆறாம் பருவ தேர்வு மட்டுமே கணக்கிடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஒன்று முதல் ஆறு பருவ தேர்வு முடிவு மதிப்பெண் அடிப்படையிலேயே ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்” என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலாளர் மாலா தெரிவித்தார்.

டிப்ளமோ மற்றும் பி.எஸ்.சி., முடித்தவர்கள் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் 34 மையங்களில், வருகிற 13 முதல் அடுத்த மாதம் (ஜூன்) 9ம் தேதி வரை வழங்கப்படுகிறது. இதற்கான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்ப செட்டியார் இன்ஜி.,கல்லூரியில் ஜூன் கடைசி வாரத்தில் தொடங்கி, ஜூலை 2வது வாரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து, ஒரு லட்சம் இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டன. 28 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். இந்த ஆண்டு 630 கல்லூரிகள் உள்ளதால் 1.25 லட்சம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக 35 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.
நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை செயலர் மாலா கூறியதாவது: விண்ணப்பங்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும். கடந்த ஆண்டுகளில் டிப்ளமோ படிப்பின் கடைசி ஐந்து, ஆறு பருவ தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு முதல் அனைத்து பருவ தேர்வு முடிவுகளையும் கணக்கில் கொண்டு, ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். எனவே மாணவர்கள் விண்ணப்பத்தை அனுப்பும்போது, அவர்களது ஆறு பருவ தேர்வு முடிவுகளின் சான்று நகலை அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அளிக்க கடைசி நாள் ஜூன் 13ம் தேதி. விண்ணப்பங்களை செயலர், நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை, அழகப்ப செட்டியார் இன்ஜி., கல்லூரி, காரைக்குடி என்ற முகவரிக்கு தபாலிலோ, நேரிலோ அனுப்பலாம்.
பி.எஸ்.சி., கணிதம், கணிதத்தை துணை பாடமாக எடுத்தவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிளஸ் 2வில் கணித பாடம் படித்தவர்கள், பி.எஸ்.சி.,யில் தாவரவியல், விலங்கியல் எடுத்திருந்தாலும் அவர்களும் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமன்றி, கடந்த ஆண்டு அவர்கள் கவுன்சிலிங்கிற்கு முதலில் அழைக்கப்பட்டனர்.
இதனால் அவர்களுக்கு 900 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு கிடைத்தது. இந்த ஆண்டு, அவர்களுக்கு டிப்ளமோ மாணவர்களுக்கு பிறகு, கடைசியில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. எனவே கூடுதல் இடங்கள் கிடைக்கும். திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு ஆண், பெண் இருபாலர் பயிலும் கல்லூரியில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். சான்றிதழ் நகல்களில் அரசு அலுவலர் சான்று ஒப்பம் தேவையில்லை. மாணவரின் சுய சான்றொப்பமே போதும். இணையதள முகவரி www.accet.edu.com என மாற்றம் செய்யப்பட்டுள்ளது, என்றார்.

Wednesday, May 6, 2015

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்
Ariyalur
University College
of Engineering,
Ariyalur – 621 704.
Centre for Entrance
Examinations & Admissions,
Anna University, Chennai – 600 025.
Madras Institute of
Technology,
Chennai
Chrompet, Chennai – 600
044.
Government
Polytechnic College,
Purasawalkam, Chennai – 600012.
Bharathi Govt. Women’s
College (Autonomous),
Broadway, Chennai – 600 108.
Regional Office –
Anna University, Coimbatore
Region, Jothipuram,
Coimbatore – 641 047.
Government College
of Technology,
Coimbatore
Thadagam Road, Coimbatore –641 013.
Government
Polytechnic College for Women,Gandhipuram, Coimbatore – 641044.
Government Polytechnic College for Men, Aerodrome Post, Coimbatore – 641014.
Padalesuwarar Polytechnic
College Cuddalore – 607 001.
Cuddalore
Muthiah Polytechnic
College, Annamalai Nagar,
Chidambaram – 608 002.
University College
of Engineering,
Panruti – 607 106.
Dharmapuri
Government Arts
College,Dharmapuri –
636 705.
University College
of Engineering,
Dindigul – 624 622.
Arulmigu Palani Andavar Polytechnic College for
Men, Palani– 624 601.
Institute of Road
and Transport Technology, Erode– 638 316.
Chikkaiah Naicker College, Erode – 638 004.
University College
of Engineering,
Kancheepuram – 631 552.
Rajeswari Vedachalam Govt. Arts College,
Chengalpet – 603 001.
University College
of Engineering,
Kanyakumari
Konam – 629 004.
Pioneer Kumarasamy College,Nagercoil – 629 003.
Karur
Government Arts
College (Autonomous),
Karur – 639 005.
Government Arts
College for Men,
Krishnagiri – 635 001.
Government College of Engineering,Bargur –
635 104.
Thiagarajar College of
Engineering, Madurai –
625 015.
Madurai Tamil Nadu
Polytechnic College,
Madurai – 625 011.
Sri Meenakshi Govt. College for Women (Autonomous), Madurai – 625 002.
Nagapattinam
ADJ Dharmambal Polytechnic College,
Nagapattinam – 611 001.
Namakkal N.K.R. Government
Arts College for Women,
Namakkal – 637 001.
Perambalur Sri Saradha College for Women,
Perambalur – 621 113.
Govt. Arts College
for Women (Autonomous),
Pudukkottai – 622 001.
Government Polytechnic College, Aranthangi – 614 616.
Ramanathapuram
Government Arts
College for Women,
Ramanathapuram – 623 501.
Government College
of Engineering, Salem –
636 011.
Salem Government Arts
College for Women,
Salem – 636 008.
Arignar Anna Government
Arts College, Athur 636 121.
Government Arts
College for Women,
Sivagangai – 630 561.
A.C. College of
Engineering & Technology,
Karaikudi – 630 004.
Kunthavai Naacchiyaar Govt. Arts College for
Women (Autonomous),
Thanjavur – 613 007.
Government Arts
College (Autonomous)
Kumbakonam – 612 001.
The Nilgiris
Government
Polytechnic College,
The Nilgiris– 643 006.
Thangam Muthu Polytechnic College, Theni
Periyakulam – 625 604.
Cardamom Planters
Association College,
Bodinayakanur – 625 513.
Tiruvallur
Murugappa Polytechnic
College, Avadi, Chennai – 600062.
Tiruvannamalai
Government Arts College,
Tiruvannamalai – 606 603.
Tiruvarur Thiru-vi-ka Government Arts College,
Tiruvarur – 610 003.
University VOC
College of Engineering,
Thoothukudi – 628 008.
B.C.M. Government
Polytechnic College for
Women, Ettayapuram
– 628 902.
Regional Office –
Anna University, Tirunelveli
Tirunelveli Region, Tirunelveli – 627 007.
Rani Anna
Government College for Women Tirunelveli – 627 008.
Tiruppur LRG Government Arts College for Women,
Tiruppur – 641 604.
Jamal Mohammed
College, Tiruchirappalli –
620 020.
Tiruchirappalli
Government
Polytechnic College,
Tiruchirappalli – 620 022.
Regional Office
Anna University,
Tiruchirappalli Region

Saturday, May 2, 2015

எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்: தவறான கேள்விக்கு ‘மைனஸ் மார்க்’ வழங்க புதிய முறை


எம்இ, எம்டெக், எம்பிஏ, எம்சிடி படிப்புகளுக்காக நடத்தப்படும் ‘டான்செட்’ நுழைவுத் தேர்வுக்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். நுழைவுத் தேர்வில் தவறான கேள்விக்கு மைனஸ் மார்க் வழங்குவதில் இந்த ஆண்டு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.தமிழ்நாட்டில் முதுநிலை பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளிலும் (எம்இ, எம்டெக், எம்.ஆர்க், எம்.பிளான்) எம்பிஏ, எம்சிஏ படிப்புகளிலும் சேர ‘டான்செட்’ எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு நடத் தப்படுகிறது.
இந்த ஆண்டு எம்சிஏ படிப் புக்கான டான்செட் நுழைவுத் தேர்வு மே 16-ம் தேதிகாலையும், எம்சிஏ நுழைவுத்தேர்வு அன்றைய தினம் மதியமும், எம்இ, எம்டெக், எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு மே 17-ம் தேதி காலையும் நடைபெற உள்ளன. அண்ணா பல்கலைக் கழகம் இந்த தேர்வுகளை நடத்துகிறது.டான்செட் நுழைவுத் தேர் வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக இயக்குநர் (மாணவர் சேர்க்கை) பேராசிரியர் ஜி.நாகராஜன் கூறி யதாவது:டான்செட் நுழைவுத் தேர் வுக்கு இந்த ஆண்டு 40 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். டான்செட் நுழைவுத்தேர்வு தமி ழகம் முழுவதும் 86 மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டு உள்ளிட்டவை தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதுகுறித்து விண்ணப்ப தாரர்களுக்கு விளக்கம் அளிக்க ஒவ்வொரு தேர்வு மையத்திலும் மே 15-ம் தேதி அன்று தகவல் மையம் இயங்கும். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு மையத்தில் மட்டும் மே 14, 15 இரு நாட்கள் அந்த மையம் செயல்படும்.டான்செட் நுழைவுத் தேர்வில் தவறாக அளிக்கப்படும் விடை களுக்கு மைனஸ் மார்க் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரையில் 4 கேள்விகளுக்கு தவறாக விடை அளித்திருந்தால் ஒரு மதிப்பெண் மைனஸ் செய்யப்பட்டு வந்தது.இந்த ஆண்டு, ‘மேட்’ உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளைப் போன்று 3 கேள்விகளுக்கு தவறாக பதில் அளித்திருந்தால் 1 மதிப்பெண் மைனஸ் செய்யப்படும்.இவ்வாறு பேராசிரியர் நாகராஜன் கூறினார்

இன்ஜி., தரவரிசை பட்டியல் ஜூனில் வெளியீடு


பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை, ஜூன் முதல் வாரத்தில், அண்ணா பல்கலை வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, போலி தர வரிசைப் பட்டியல்களை நம்ப வேண்டாம் என, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
வரும் கல்வி ஆண்டில், இன்ஜினியரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், வரும் 6ம் தேதி முதல், சென்னை அண்ணா பல்கலை உட்பட, தமிழகம் முழுவதும், 60 மையங்களில் வழங்கப்படுகின்றன. மொத்தம், 2.40 லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழகம் முழுவதும், 596 இன்ஜினியரிங் கல்லூரிகளில், கடந்த ஆண்டில், இரண்டு லட்சம் இடங்கள் இருந்தன. ஆனால், கவுன்சிலிங் முடிவில், 80 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.இந்த ஆண்டு, இன்ஜினியரிங் படிப்புக்கான இடங்கள் கூடுமா அல்லது குறையுமா என்பது, இம்மாத இறுதியில் தெரிய வரும். ஏற்கனவே, மூன்று கல்லூரிகள் தங்கள் கல்லூரியை மூடுவதற்கான கடிதத்தை, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையில் கொடுத்துள்ளன. இதற்கு இரண்டு அமைப்புகளும் அனுமதி அளித்து, தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் பாதிக்காமல், படிப்படியாக புதிய மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேநேரம், பல கல்லூரிகள் சில படிப்புகளை முடித்துக் கொள்ளவும், சில புதிய படிப்புகளை சேர்க்கவும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் அண்ணா பல்கலையில் அனுமதி கேட்டுள்ளன. இதற்கான ஆய்வுகள் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் கல்லூரிகள் மற்றும் படிப்புகளுக்கான அனுமதியை, அண்ணா பல்கலையிடம், ஏ.ஐ.சி.டி.இ., வழங்கும். பின், கல்லூரிகளுக்கான இணைப்பு ஆணையை, இம்மாத இறுதியில், அண்ணா பல்கலை பிறப்பிக்கும்.
இதுகுறித்து, அண்ணா பல்கலை வட்டாரங்கள் கூறியதாவது:மே முதல் வாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரப் பட்டியல் வந்ததும், அந்தக் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கும் அனுமதி, மே இறுதி வாரத்திற்குள் வழங்கப்படும். அதன்பின், எந்தெந்த கல்லூரிகள் இந்த ஆண்டு செயல்படும், அவற்றிலுள்ள படிப்புகள் எவை என்ற விவரம் தெரியும். அதற்குள், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகி, மாணவர்களின் விண்ணப்பங்கள் பெறப்படும். இதையடுத்து, இந்த ஆண்டு அதிகபட்ச, 'கட் ஆப்' மதிப்பெண் கணக்கிடப்பட்டு, கல்லூரிகளின் தர வரிசை நிர்ணயிக்கப்படும். பின், ஜூன் முதல் வாரத்திற்குள், கல்லூரிகளின் 'கட் ஆப்' மற்றும் தர வரிசைப் பட்டியல், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.ஜூன் இறுதி அல்லது ஜூலை 1ம் தேதி, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கும்.அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ பட்டியல் தவிர, தற்போதே பல போலி தர வரிசைப் பட்டியல்கள் வெளியாவதாக, தகவல்கள் வந்துள்ளன. மாணவர்களும், பெற்றோரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு, அண்ணா பல்கலை அதிகாரிகள் தெரிவித்தனர்

கவுன்சிலிங்குக்கு 'ஆன் - லைன்' கடிதம்: அண்ணா பல்கலை புதிய திட்டம்


பொறியியல் கல்லூரி கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதம் மற்றும் நுழைவுத்தேர்வு அனுமதி சீட்டை, 'ஆன் - லைனில்' அனுப்ப, அண்ணா பல்கலை திட்டமிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம், வரும், 6ம் தேதி முதல், அண்ணா பல்கலை மற்றும் 59 மையங்களில் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கவுன்சிலிங் அழைப்பு கடிதம் தபால் மூலம் மாணவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இதேபோல், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு மற்றும் கவுன்சிலிங் கடிதங்களும் தபால் மூலமே அனுப்பப்படும். ஆனால், தபாலில் அனுப்புவதில் முகவரி மாற்றம், வீட்டில் ஆள் இல்லாமல் இருப்பது போன்ற பல பிரச்னைகளால், கடிதங்கள் கிடைக்காமல், நகல் கேட்டு பல்கலைக்கு வருகின்றனர். இதனால் கூடுதல் வேலைப்பளு ஏற்படுகிறது. எனவே, இந்த ஆண்டு முதல், 'ஆன் - லைன்' முறையை படிப்படியாக கொண்டு வர, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, முதுகலை படிப்புக்கான, 'டான்செட்' தேர்வுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வுக்கான அனுமதி சீட்டை, 'ஆன் - லைனில்' அனுப்ப, பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதேபோல், கவுன்சிலிங் வரும் மாணவர்களுக்கான அழைப்பு கடிதத்தையும், 'ஆன் - லைனில்' அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த முறை படிப்படியாக, இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் கொண்டு வர வாய்ப்புள்ளதாக, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன. பொறியியல் கவுன்சிலிங்கை, இந்த ஆண்டு ஜூன் இறுதி வாரம் அல்லது ஜூலை 1ம் தேதி துவங்க, அண்ணா பல்கலை முடிவு செய்துள்ளது. மேலும், கவுன்சிலிங்கை வேகமாக முடித்து, ஜூலை 31க்குள் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடவடிக்கையை முடிக்கவும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகளை துவங்கவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில்தொடங்க முடிவு


பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.தமிழகத்தில் 570-க்கும் மேற் பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இதில் அண்ணா பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அடங்கும். பிஇ, பிடெக் படிப்பில் சுமார் 2 லட் சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள், மே 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் மே 6-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. இதற்காக 2.4 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பொறியியல் படிப் புக்கு விண்ணப்பிக்கும் திருநங்கைகள், தங்கள் பாலினத்தை குறிப் பிட விண்ணப்பத்தில் இந்த ஆண்டு முதல்முறையாக வசதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.விண்ணப்ப விநியோகம், கட் ஆப் மதிப்பெண் வெளியீடு, கலந்தாய்வு உள்ளிட்ட மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக் கான முன்னேற்பாடுகள், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகின்றன.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தொழில்கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை களை ஜூலை 31-ம் தேதிக்குள் நடத்தி முடித்துவிட வேண்டும். எனவே,பொது கலந்தாய்வு மட்டுமல்லாமல், பிளஸ் 2 துணைத் தேர்வெழுதி வெற்றி பெறும்மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வையும் அதற் குள் அண்ணா பல்கலைக்கழகம் முடித்தாக வேண்டியுள்ளது.இதையெல்லாம் கருத்தில் கொண்டு பொறியியல் கலந் தாய்வை ஜூலை முதல் வாரத் தில் தொடங்க ஏற்பாடு செய் திருப்பதாக தமிழ்நாடு பொறி யியல் மாணவர் சேர்க்கை செய லாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

எஞ்சினியரிங்கில் எது பெஸ்ட்?


மருத்துவத்தை அடுத்து மாணவர்களை அதிகம் வசீகரிக்கும் துறை என்றால் அது பொறியியல்தான். முன்பு பொறியியல் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது. இப்போது தமிழகத்தில் நுழைவுத்தேர்வு இல்லை. குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று +2வில் தேர்ச்சி பெற்றாலே, கலந்தாய்வில் பங்கேற்று பொறியியல் படிப்பில் சேர்ந்து விட முடியும். ஆனால் எல்லோருக்கும் பொறியியல் படிப்பு பொருந்துமா...?
இடம் கிடைக்கிறது என்பதற்காக எல்லோரும் இந்தப் படிப்பை தேர்வு செய்வது சரியா? சரியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு சுயம் இருக்கிறது. தனித்திறன் இருக்கிறது. அந்த திறனை அடையாளம் கண்டு, அதற்கேற்ற துறையைத் தேர்வு செய்வது தான் எதிர்காலத்துக்கு நல்லது.
மருத்துவத்துக்கு உயிரியலும் வேதியியலும் முக்கியம். பொறியியலுக்கு கணிதமும் இயற்பியலும் முக்கியம். குறிப்பாக, எந்த அளவுக்கு கணிதத்தின் மீது ஆர்வமும் புலமையும் இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர் பொறியியலில் சாதிக்கலாம். (அதனால்தான் அண்ணா பல்கலை நடத்தும் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் +2 மதிப்பெண்கள், இயற்பியலுக்கும் வேதியியலுக்கும் தலா 50 ஆக இருக்க, கணக்குக்கு மட்டும் 100 ஆக இருக்கிறது) கணிதத்தை பொறியியல் உள்ளிட்ட எல்லா அறிவியலுக்கும் தாய் (Mother of all sciences) என்றும், சுருங்கச் சொல்லும் அறிவியல் (Science of brevity) என்றும் சொல்வதைக் கவனியுங்கள். பொறியியலை `Applied Mathematics’ என்றும், கணிதத்தை `Theoretical Engineering’ என்றும் என் போன்றோர் குறிப்பிடுவோம். ஆய்லர் போன்ற கணித அறிஞர்கள், கணிதத்தோடு மட்டும் நிற்காமல் பொறியியலின் பல துறைகளிலும் வியத்தகு உண்மைகளைக் கண்டறிந்து உதவியதற்குக் காரணம் அவர்களது கணித அணுகுமுறை தான். ஆகவே, கணக்கு எனக்கு பிணக்கு’ என்பவர்கள் பொறியியலுக்கு வணக்கம் சொல்லிவிடலாம்.
அடுத்த கேள்வி, தமிழ்நாட்டில் 600க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 80க்கு மேற்பட்ட பாடப்பிரிவுகள் வழங்கப்படுவதால், எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பது.
இதற்கு, சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ எஞ்சினியரிங்... என்ற அடிப்படைப் பிரிவுகளில் வகைப்படுத்துவது பலன் அளிக்கும். இதே காலவரிசையில்தான் இவை தோன்றின.கீழே சில பிரிவுகளை தொகுத்து தந்திருக்கிறேன். பொறியியலில் உள்ள எல்லாப் பிரிவுகளையும் வைத்துக்கொண்டு குழம்புவதைவிட தமக்கு ஆர்வமுள்ள பிரிவுகளின் தொகுப்பில் மட்டும் கவனம் செலுத்த கீழ்க்கண்ட பட்டியல் உதவும். முக்கியமான, வேலைவாய்ப்பு குறையாத துறைகளில் உள்ள சிறப்புப் பாடப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
Civil:
Civil (Engineering), Geo Informatics, Architecture, Planning, Arch (Interior Design), Transportation.
Mechanical:
Mechanical, Aeronautical, Aerospace, Automobile, Industrial, Mechatronics, Manufacturing, Printing, Design & Manufacturing, Energy, Industrial Engineering & Management, Production, Mining, Material Sc.&Engg, Industrial & Production Engg.
Electrical:
Electrical & Electronics, Instrumentation & Control.
Electronics:
Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication, Electronics & Instrumentation, Medical Electronics.
Computer Sc:
Computer Sc.& Engg, Computer Sc.& Information Tech, Computer Software, Information Tech, Information Tech & Management, Communication and Computer Engg, Computer Sc & Information Tech.
Bio Sc:
Bio energy, Biotechnology, Industrial Biotechnology, Biomedical, Biomedical Instrumentation, Bioinformation, Pharmaceutical Technology, Pharmaceutical Engg.
Chemical:
Chemical Engg, Chemical Tech, Metallurgical Engg, Metallurgical Engg & Material Sc., Chemical & Electrochemical Engg, Ceramic Tech, Petroleum Engg, Petroleum Tech, Petro refining & Petrochem Tech, Plastic Tech, Rubber& Plastic Tech, Fertilizer and Chemical Tech.
Others:
Food Tech, Leather Tech. Fashion Tech, Apparel Tech, Paper & Pulp Tech, Carpet & Textile Tech, Medical Nanotech.
மேலும் சில விஷயங்களை கேள்வி - பதில் பாணியில் பார்க்கலாம்?
எஞ்சினியரிங் (BE), டெக்னாலஜி (B.Tech) என்று இருவகைகளில் பாடப்பிரிவுகள் இருப்பதும், சில பாடப்பிரிவுகள் இரண்டு வகையிலும் வழங்கப்படுவதும் மேற்கண்ட பட்டியலிலிருந்து தெரியும். அப்படியானால், BE/B.Tech இரண்டுக்கும் வேறுபாடு உண்டா?
பொதுவாக BE படிப்பில் அடிப்படைத் தத்துவங்கள் அதிகமாகவும், B.Tech படிப்பில் பயன்பாடுகள் அதிகமாகவும் கற்பிக்கப்படும். அதாவது, முன்னதில் ஆழம் மிகுதியாகவும், பின்னதில் அகலம் அதிகமாகவும் இருக்கும். இதனால், அடிப்படை ஆராய்ச்சிக்கு BE-யும், பயன்பாட்டுக்கு B.Tech-ம் மிகுதியாக உதவும். கணினி அடிப்படையிலான CSE (BE), IT(B.Tech) ஆகிய இரண்டில் முன்னது அதிகமாக விரும்பப்படுவதற்கு இது ஒரு காரணம். ஆனால், இந்த அடிப்படை வேறுபாட்டின்படியே எல்லா BE/B.Tech பிரிவுகளுக்கும் பெயர் இடப்படுவதில்லை. IIT போன்ற Institutes of Technology எனப் பெயர் கொண்ட கல்லூரிகளில் எல்லாப் பிரிவுக்கும் B.Tech பட்டமும் CEG போன்ற College of Engineering எனப் பெயர் கொண்ட கல்லூரிகளில்் BE பட்டமும் முதலில் இவ்வாறே பெயரிடப்பட்டன.
ஆகவே, BE/B.Tech என்ற வேறுபாடுகளை அவ்வளவாக கவனிக்க வேண்டியதில்லை.அண்ணா பல்கலை நடத்தும் கலந்தாய்வுக்கான தகவல் கையேட்டில் சில பாடப்பிரிவுகளின் பெயர்களின் முடிவில் (SS) என இருக்கும். அதன் பொருள் என்ன?
விடை: `Self Supporting’ என்பதன் சுருக்கமே `SS’. அதாவது அந்தப் பாடப்பிரிவு, அரசின் பொருள் உதவி பெறாமல் நடத்தப்படுவது. எனவே அத்தகைய பாடப் பிரிவுக்குக் கட்டணம் கூடுதலாக இருக்கும்.
சில கல்லூரிகளில் சில பாடப்பிரிவுகள் `Accredited’ என்ற தகுதி பெற்றிருக்கும். அதற்கு என்ன பொருள்?
விடை: NBA(National Board of Accreditation) என்ற அரசு அமைப்பில் தரம் ஆராயப்பட்டுத் தரச்சான்று வழங்கப்பட்ட பாடப்பிரிவு என்பது பொருள். இதைத் தேர்வு செய்தாலும் கட்டணம் அதிகம் இருக்கும். தாம் விரும்பிய கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவில், SS / Accredited தகுதி பெற்றதும், பெறாததுமான இருவகை இடங்களும் இருந்தால், அத்தகுதிகள் பெறாத இடத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.
சிவில், மெக்கானிக்கல் பிரிவுகள் பெண்களுக்கு ஏற்றவையா?
ஏற்றவையே. தமிழ்நாட்டில் மரைன் எஞ்சினியரிங், மைனிங் எஞ்சினியரிங் பிரிவுகள் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றன. உடற்கூறு மற்றும் பாதுகாப்பு குறித்தே இந்த வரையறை. மரைன் எஞ்சினியரிங் படிக்க விழையும் ஆண்களுக்கு கூடுதலான கட்டுப்பாடுகளும் உண்டு. வயது (25), எடை (7/45kg), உயரம், மார்பு அளவு, பார்வைத்திறம் ஆகியவை வரம்புக்குள் இருக்க வேண்டும். கப்பலில் சிலகாலம் பாடம் சொல்லித் தரப்படுவதால், கூடுதல் கட்டணமும் உண்டு. மற்றபடி இது பலராலும் விரும்பப்படுவது. பிறர் செலவில் (சம்பளத்தில்) ஊர் சுற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக ஏற்றது. கணிசமாகவும் வரியில்லாமலும் சம்பாதிக்கலாம். மாலை 6 மணிக்கு மேல் பெண்கள் தரை மட்டத்திற்குக் கீழ் சுரங்கங்களில் பணியாற்றக் கூடாது எனச் சுரங்க அமைச்சகத்தின் விதி இருப்பதால் பெண்களுக்குச் சுரங்கவியலில் (தமிழ்நாட்டில்) இடம் மறுக்கப்படுகிறது. மற்றபடி சிவில், மெக்கானிக்கல் பிரிவுகளில் எல்லாம் விதிவிலக்குகள் இல்லை. தாராளமாகப் படிக்கலாம்.
புதிய, அதிக வேலைவாய்ப்புகள் கொண்ட பாடப்பிரிவுகள் எவை?
கெமிக்கல் மற்றும் மெட்ரோ கெமிக்கல் எஞ்சினியரிங், உணவுத் தொழில்நுட்பம், ஃபார்மாசூட்டிகல் டெக்னாலஜி, பெட்ரோலியம் ரீஃபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் எஞ்சினியரிங், மெட்டீரியல் சயின்ஸ், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனப் பொறியியல், ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்பம் ஆகியவை அண்மையில் தோன்றியுள்ள சில கவனத்தை ஈர்க்கும் பாடப்பிரிவுகள். பெட்ரோலியம் சார்ந்த படிப்புகளுக்கு அரபு நாடுகளில் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன.
பேராசிரியர் ப.வே.நவநீதகிருஷ்ணன்
முன்னாள் இயக்குநர், அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு