Wednesday, July 30, 2014

சென்னை: பொதுப்பிரிவு பொறியியல் கவுன்சிலிங்கில், இதுவரை ஒதுக்கீடு பெற்ற 81,083 பேரில், 47,103 பேர் ஆண்கள் மற்றும் 33,980 பேர் பெண்கள்.
மொத்த எண்ணிக்கையான 81,083 பேரில், முதல் தலைமுறை பட்டதாரிகள் மட்டும் 43,559 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பாடப்பிரிவுகளையும் சேர்த்து, ஜுலை 28 நிலவரப்படியான பொறியியல் இடங்கள் 2,04,079.
இவற்றில், இதுவரை 39.73% இடங்கள் நிரம்பியுள்ளன. மாணவர்கள் அதிகம் தேர்வு செய்ததில், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் மற்றும் சிவில் இன்ஜினியரிங் ஆகிய பாடங்கள் முறையே, முதல் மூன்று இடங்களைப் பெறுகின்றன.
நான்காவது இடத்தில் கணிப்பொறி அறிவியல் பாடம் வருகிறது. ஐந்தாவது இடத்தில், எலக்ட்ரிகல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் படிப்பும், ஆறாவது இடத்தில் ஐ.டி. படிப்பும் வருகிறது.
முக்கியப் பாடங்கள் தவிர்த்த இதர பாடப்பிரிவுகளை இதுவரை மொத்தம் 5,106 பேர் தேர்வு செய்துள்ளனர். தமிழ் வழியில் வழங்கப்படும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் 147 பேரும், சிவில் படிப்பில் 187 பேரும் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
தமிழ் வழி சிவில் படிப்பை அதிகளவாக 111 பெண்கள் தேர்வு செய்துள்ளனர். அதேசமயம் மெக்கானிக்கல் படிப்பை 14 பெண்கள் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.
சென்னை: கால்நடை மருத்துவம் தொடர்பான இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஜுலை 30ம் தேதி காலை 9 மணிமுதல் சென்னையில் நடைபெறுகிறது. மொத்தம் 3 நாட்கள் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 30ம் தேதி காலை 9 மணி முதல்,
BVSc & AH படிப்பில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங்
காலை 11 மணிமுதல்,
BVSc & AH படிப்பிற்கு, பள்ளிப் படிப்பில் தொழிற்பிரிவு படித்தவர்களுக்கான கவுன்சிலிங். மாணவர்களின் இனப்பிரிவு கட்-ஆப் மதிப்பெண் வாரியாக இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
ஜுலை 31ம் தேதி
BVSc & AH படிப்புகளுக்கு, பள்ளி படிப்பில் அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங். இது முதல் batch கவுன்சிலிங் ஆகும். இங்கும், இனப்பிரிவுக்கேற்ற கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
மதியம் 2 மணிமுதல் அதே அகடமிக் பிரிவு மாணவர்களுக்கு, BVSc & AH படிப்பிற்கான, இரண்டாம் batch கவுன்சிலிங் நடத்தப்படும்.
ஆகஸ்ட் 1ம் தேதி
காலை 9 மணிக்கு, பி.டெக்., உணவு தொழில்நுட்பம் மற்றும் பி.டெக்., கோழி வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிள்ளைகள் ஆகியோருக்கான கவுன்சிலிங் நடைபெறும்.
அதே நாளில், காலை 11 மணிமுதல், மேற்கூறிய இரண்டு படிப்புகளுக்கும், பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடைபெறும்.
விரிவான விபரங்களை அறிய http://www.tanuvas.tn.nic.in/ugadmission/counselling.html.
பொறியியல் கலந்தாய்வு முடிவதற்கு வியாழக்கிழமையுடன் (ஜூலை 31) சேர்த்து 5 நாள்களே உள்ள நிலையில் 86 ஆயிரம் பேர் பல்வேறு பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
இதில், அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ள பிரிவுகளில் தொடர்ந்து மெக்கானிக்கல் பிரிவே முதலிடம் வகிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதியோடு முடிவடையவுள்ளது.
கலந்தாய்வில் மொத்தமுள்ள 2,04,079 இடங்களில் 86,031 இடங்கள் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளன.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 1,27,858 பேரில், 41,485 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.
இதில், எப்போதும் இல்லாத அளவுக்கு புதன்கிழமை அதிகமானோர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர். மொத்தம் அழைக்கப்பட்ட 8,832 பேரில் 3,866 மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளனர்.
இதுவரை இடங்களைத் தேர்வு செய்தவர்களில் 20,932 பேர் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்தப் பிரிவில் மொத்தம் 43,210 இடங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு அடுத்தபடியாக இசிஇ பிரிவில் மொத்தமுள்ள 41,484 இடங்களில் 16,388 இடங்கள் நிரம்பியுள்ளன.
இதுவரை நான்காம் இடத்தில் இருந்து வந்த சிவில் பிரிவு, மூன்றாம் இடத்துக்கு வந்துள்ளது. இந்தப் பிரிவில் உள்ள 28,674 இடங்களில் 13,203 இடங்கள் நிரம்பியுள்ளன. பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் மொத்தமுள்ள 32,614 இடங்களில் 11,319 இடங்கள் நிரம்பியுள்ளன.
பி.இ. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 13,212 இடங்களில் வெறும் 4,399 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.
கலந்தாய்வு முடிய வியாழக்கிழமையோடு சேர்த்து இன்னும் 5 நாள்கள் உள்ளன என்பதால், முடிவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் நிலை உருவாகும் எனக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tuesday, July 29, 2014

ஜூலை 7-இல் பி.இ. கலந்தாய்வு: எஸ்.எம்.எஸ். மூலம் மாணவர்களுக்கு தகவல்உச்ச நீதிமன்ற உத்தரவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது.

இதற்கான அறிவிப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட புதிய கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) நிலுவையில் உள்ள பொறியியல் கல்லூரி விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ஒரு வாரகால அவகாசத்தை அளித்து உச்ச நீதிமன்றம் ஜூன் 26-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு காரணமாக ஜூன் 27-ஆம் தேதி தொடங்கவிருந்த பொதுப் பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இதனால் பாதிப்புக்கு ஆளான மாணவர்களும் பெற்றோரும், கலந்தாய்வு மறு தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இந் நிலையில், ஏஐசிடிஇ-யின் அனுமதி மற்றும் தமிழக அரசின் ஒப்புதலின் அடிப்படையில் ஜூலை 7-ஆம் தேதி முதல் பொதுப் பிரிவு கலந்தாய்வை தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில் பொதுப் பிரிவு கலந்தாய்வு புதிய கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் ஜ்ஜ்ஜ்.ஹய்ய்ஹன்ய்ண்ஸ்ற்ய்ங்ஹ2014 என்ற இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

சுற்றுகளின் எண்ணிக்கை உயர்வு: முன்னர் ஜூன் 27-ஆம் தேதி தொடங்கி ஜூலை 28-ஆம் தேதி வரை 32 நாள்கள் பொதுப் பிரிவு கலந்தாய்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ஜூலை 7-இல் தொடங்கி ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 29 நாள்கள் மட்டுமே நடத்தப்படுகிறது.

நாள்களின் எண்ணிக்கை குறைந்த காரணத்தால், ஒரு நாளுக்கான சுற்றுகளின் எண்ணிக்கை 8-லிருந்து 9-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், முதல் நாளான 7-ஆம் தேதி மட்டும் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது. இறுதிச் சுற்று இரவு 7 மணிக்கு தொடங்கும். அன்றைய தினம் கட்-ஆஃப் 200-க்கு 200 பெற்றவர்கள் முதல் குறைந்தபட்சம் 198.75 கட்-ஆஃப் பெற்றவர்கள் வரையில் 3 ஆயிரம் பேர் அளவுக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வின் இரண்டாம் நாளிலிருந்து முதல் சுற்று காலை 7 மணிக்குத் தொடங்கப்படும். பின்னர் 8.30, 10.00, 11.30, 1.00, 2.30, 4.00, 5.30, 7.00 மணி என 9 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது.

கலந்தாய்வு மறு தேதி அறிவிப்பு குறித்த தகவல் விண்ணப்பித்துள்ள 1.70 லட்சம் மாணவ, மாணவிகளுக்கும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அதாவது நாளொன்றுக்கு 5000 பேருக்கு பதிலாக 5,500 பேர் வீதம் கலந்து கொள்வர்.

மாணவர்கள் அவர்களுடைய சுற்று தொடங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாக கலந்தாய்வு வளாகத்துக்கு வந்துவிட வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.



தொழில் பிரிவு மாணவர்களுக்கு... பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தேதியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததுபோல் ஜூலை 9-ஆம் தேதி முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை 10 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு தேதி அட்டவணையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Sunday, July 27, 2014

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சலிங்கின்போது, ரேங்கில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்கள் கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் வழக்கத்துக்கு மாறாக, முதல் ரேங்க் பெற்ற மாணவர்களில் நான்கு பேர், கவுன்சலிங்கில் அரசு உதவி பெறும் கல்லூரியான பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்தனர். எனினும், மாணவர்களின் முதல் சாய்ஸ் கிண்டி பொறியியல் கல்லூரி என்பது தொடர்கிறது. அத்துடன், அந்தக் கல்லூரியில் தங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பத்தில் உள்ள படிப்புகளில் இடம் கிடைத்தால் கூட போதும் என்று சேருவதில் மாற்றம் இல்லை.

முதல் நாளில் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்ட 2,399 மாணவர்களில் 730 மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு வரவில்லை. 6 மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு வந்து விட்டு எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க அம்சம்.

மாணவர்களின் முதல் சாய்ஸ் வழக்கம் போல எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன். அதேசமயம், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதில் மாணவர்களிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் ஆகிய பாடப்பிரிவுகளில் சேருவதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் நாளில் 436 மாணவர்கள் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவையும் 376 பேர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவையும் 271 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவையும் 161 பேர் எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவையும் 111 பேர் சிவில் பாடப்பிரிவையும் 109 பேர் ஐ.டி. பாடப்பிரிவையும் தேர்வு செய்தனர். எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவைத் தேர்வு செய்தவர்களில் அதிகம் பேர் மாணவிகள். அதாவது 271 மாணவிகள் இப்படிப்பைத் தேர்வு செய்தனர். இசிஇ படிப்பைத் தேர்வு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 165-தான். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவைத் தேர்வு செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களே (367 மாணவர்கள்). கவுன்சலிங்கிற்கு வரும் மாணவர்களின் பலர், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேருவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். சில மாணவர்கள், தாங்கள் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்காவிட்டாலும் விரும்பிய கல்லூரியில் தங்களது அடுத்த சாய்ஸை தேர்வு செய்கின்றனர்.

இந்த ஆண்டு மாணவர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவில் 42 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் பாடப்பிரிவில் 41 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரில் 32 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களும் உள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல் கவுன்சலிங்கில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும்கூட விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை  1.68 லட்சம்தான். எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைப்பதில் பிரச்சினை இருக்காது. ஆனால், அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் இடம் கிடைக்குமா என்பதுதான் பிரச்சினை. அதேசமயம்,  கவுன்சலிங்கின் முடிவில் காலி இடங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 21ம் தேதி துவங்கியது.

அரசு, சுய நிதி கல்லூரிகளில், 253 எம்.பி.பி.எஸ்., மற்றும் 1,036 பி.டி.எஸ்., இடங்களும் இருந்தன. ஐந்தாம் நாளான நேற்று, 314 பி.டி.எஸ்., இடங்களுடன் கலந்தாய்வு முடிந்தது. பிற்பகலில், அனைத்து இடங்களும் நிரம்பின.

முதற்கட்ட கலந்தாய்வில், 2,552 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 75 பி.டி.எஸ்., இடங்களும் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில், ஐந்து மருத்துவக் கல்லூரிகளில், 750 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதற்கு அனுமதி கிடைத்தால், மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது.

இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், &'&'சுய நிதி கல்லூரிகளில் அனுமதி கிடைத்தாலோ, அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள், மாநிலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டாலோ, இடங்களுக்கு ஏற்ப, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, செப்டம்பரில் நடத்தப்படும்,&'&' என்றார்.

Saturday, July 26, 2014

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் சேர சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நடந்து வருகின்றது.
கடந்த 19 நாட்களாக நடைபெற்று வரும் கலந்தாய்வில் 99,735 பேர் அழைக்கப்பட்டு, 69,595 பேர் சேர்க்கைக்கான கடிதத்தை பெற்றுள்ளனர். இதுவரை 29,851 பேர் கலந்தாய்வில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளனர்.
தொடர்ந்து இன்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.
பிஇ கலந்தாய்வில் 1,34,250 இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகின்றது.
கடந்த ஜூலை 7ம் தேதி முதல் நடைபெற்ற கலந்தாய்வில் இதுவரை, 69,595 சேர்க்கைக்கான ஒதுக்கீடு பெற்றுள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. சேர்க்கைக்கு இன்னும் 1,34,250 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.
பிஇ கலந்தாய்வில் 1,34,250 இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் படிப்பில் சேர பொதுப்பிரிவு கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகின்றது.
கடந்த ஜூலை 7ம் தேதி முதல் நடைபெற்ற கலந்தாய்வில் இதுவரை, 69,595 சேர்க்கைக்கான ஒதுக்கீடு பெற்றுள்ளனர். தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. சேர்க்கைக்கு இன்னும் 1,34,250 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

Thursday, July 24, 2014

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு இன்று நிறைவு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.- பிடிஎஸ் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) நிறைவடைகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த 21-ஆம் தேதி எம்.பி.பி.எஸ்.-பிடிஎஸ் 2-ஆம் கட்டக் கலந்தாய்வு தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் உள்பட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்த காலியிடங்கள் என அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன.
சுயநிதி பல் மருத்துவக் கல்லூரி 1,020 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களை நிரப்பும் பணி கடந்த 2 நாள்களாக நடைபெற்று வருகிறது. கலந்தாய்வின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மீதமுள்ள 314 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

Sunday, July 20, 2014

மதுரை: மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங் நாளை துவங்க உள்ள நிலையில் கட் ஆப் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை (ஜூலை 21) முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள், முதற்கட்ட கவுன்சிலிங்கில் விடுபட்ட இடங்கள் என 253 இடங்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இந்த கவுன்சிலில் நடைபெறும்.
அரசு மற்றும் உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களில் பொதுப் பிரிவுக்கு 47 இடங்கள், பி.சி. 49, பி.சி. (முஸ்லிம்) 5, எம்.பி.சி. 30, எஸ்.சி. 25, எஸ்.சி. (அருந்ததியினர்) 5, பழங்குடியினர் 2 இடங்கள் உள்ளன.
இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் பொதுப்பிரிவு 20, பி.சி. 17, பி.சி. (முஸ்லிம்) 2, எம்.பி.சி., 13, எஸ்.சி, 10, எஸ்.சி., (அருந்ததியினர்) 2, எஸ்.டி. 1 இடம் உள்ளது.
சுயநிதி மருத்துவ கல்லூரிகளைப் பொறுத்தவரை கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் 1, கன்னியாகுமரி மூகாம்பிகை கல்லூரியில் 2, சென்னை கற்பக விநாயகர் கல்லூரியில் 5, கோவை கற்பகம் கல்லூரியில் 7, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 4, மதுரை வேலம்மாள் கல்லூரியில் 6 இடங்கள் என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.
மருத்துவம் கட் ஆப்
2ம் கட்ட கவுன்சிலிங்கில் கட்ஆப் பொதுப் பிரிவு மற்றும் பிற்பட்டோர் பிரிவில் 199.25 முதல் 198.25 வரை உள்ளது. இதில் பி.சி. முஸ்லிம் 197 வரை; எம்.பி.சி. 197.5 வரை; எஸ்.சி. 194.25 வரை; எஸ்.சி. (அருந்ததியினர்) 191.5 வரை; எஸ்.டி. 186.5 வரை பங்கேற்பர்.
பல் மருத்துவம் கட் ஆப்
பல் மருத்துவத்திற்கு ஜூலை 22 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங் நடக்க உள்ளது. இதற்கான கட் ஆப் வருமாறு: பொதுப் பிரிவு 197.75, பி.சி., (முஸ்லிம்) 196.5, எம்.பி.சி., 196.5, எஸ்.சி., 192.25, எஸ்.சி., (அருந்ததியினர்) 189, எஸ்.டி., 181 வரை பங்கேற்பர். பிளஸ்2 மதிப்பெண் சரிபார்ப்பு, மறு மதிப்பீடு, மறு கூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள், அதன் அடிப்படையில் இதில் பங்கேற்கலாம்.

Saturday, July 12, 2014

எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 26 மாணவ, மாணவியர் தாங்கள் தேர்வு செய்த இடங்களை ஒப்படைத்துவிட்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களைத் தேர்வு செய்யபவர்களில் சிலர், பல்வேறு காரணங்களால் அந்த இடங்களை ஒப்படைத்துவிட்டு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்று பி.இ. இடங்களைத் தேர்வு செய்து வருவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வருகிறது.

இதுபோல் 2014-15 பொறியியல் கலந்தாய்விலும், மாணவர்கள் எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு பி.இ., பி.டெக். இடங்களைத் தேர்வு செய்து வருகின்றனர்.

கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூலை 7) 11 மாணவ, மாணவிகள் தாங்கள் தேர்வு செய்த எம்.பி.பி.எஸ். இடங்களை ஒப்படைத்துவிட்டு பொறியியல் இடங்களை தேர்வு செய்தனர். இரண்டாம் நாளில் 2 மாணவ, மாணவிகளும், மூன்றாம் நாளில் 10 பேரும் நான்காம் நாளில் 3 பேரும் என மொத்தம் 26 பேர் எம்.பி.பி.எஸ். இடத்தை ஒப்படைத்துவிட்டு பொறியியல் படிப்புகளைத் தேர்வு செய்துள்ளனர்.