Thursday, November 10, 2016

அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை ’சீட்’ அதிகரிப்பு

கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ - கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது
.
கோவை அரசு மருத்துவ கல்லூரியில் இ.என்.டி., பயோ - கெமிஸ்ட்ரி, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவிகளில் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இதில், தற்போது மொத்தம், 86 ’சீட்’டுகள் உள்ளன.
இந்நிலையில், மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று ஆய்வுகளுக்கு பின், சமீபத்தில் கூடுதலாக, 14 சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ கூறுகையில், ”மருந்தியியல், பயோ - கெமிஸ்ட்ரி, உளவியியல், தடய அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு, 20 சீட்கள் வேண்டி, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் மருத்துவ கல்லூரி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 
வரும் கல்வியாண்டில், புதியதாக முதுநிலையில் எம்.டி., பயோ - கெமிஸ்ட்ரி படிப்புக்கு மூன்று சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும், 2017 - 18 கல்வியாண்டில் எம்.டி., பயோ - கெமிஸ்ட்ரி படிப்பில் சேர்க்கை நடக்கும்,” என்றார்.

No comments:

Post a Comment